ஏன் வெளியே செல்லும் முன் வெல்லம் சாப்பிட்டு நீர் குடிப்பது நல்லது என சொல்கிறார்கள் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

பெரும்பாலானோர் காலையில் எழும் போதே அலாரத்தின் மணியோசையை கேட்டுக் கொண்டும், அதற்குள் விடிந்துவிட்டதா என கோபமான மனநிலையிலோ அல்லது துணையை திட்டியவாறும் அல்லது மோசமான கனவின் தாக்கத்துடனும் எழுவார்கள். இப்படி ஒரு நாள் ஆரம்பமானால், அந்நாளில் எந்த ஒரு நல்ல விஷயமும் நடக்காது.

ஒருவருக்கு ஒரு நாள் சிறப்பாக இருக்க வேண்டுமானால், அதற்கேற்ற மனநிலையை பெற நாம் தான் முயற்சிக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என நீங்கள் கேட்கலாம். இக்கட்டுரையில் ஒவ்வொரு நாளும் சிறப்பாக இருக்க செய்ய வேண்டிய 3 காலை செயல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அவற்றை வெளியே கிளம்பும் முன் ஒவ்வொருவரும் பின்பற்றினால், நிச்சயம் எதிலும் வெற்றி கிட்டும் மற்றும் அந்த செயல்களுக்கு பின் அறிவியல் காரணங்களும் உள்ளன. அவை என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெல்லம் மற்றும் நீர்

வெல்லம் மற்றும் நீர்

வெளியே செல்லும் முன் சிறிது வெல்லத்தை சாப்பிட்டு, நீரைக் குடித்து செல்லுங்கள். இவ்வாறு வெல்லத்தை சாப்பிட்டு, நீரைக் குடிப்பதால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, அந்நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட உதவியாக இருக்கும்.

பெற்றோரின் காலில் விழுவது

பெற்றோரின் காலில் விழுவது

இது நம் இந்திய பாரம்பரிய பழக்கங்களுள் ஒன்று. இது மரியாதையின் காரணமாக மட்டுமின்றி, இச்செயலின் பின்னணியில் ஓர் அறிவியல் காரணமும் உள்ளது. அது என்னவெனில், பொதுவாக ஆற்றல் அலைகளானது தலையில் இருந்து பாதம் மற்றும் முதுகு நோக்கி பாயும். பெற்றோரின் பாதங்களைத் தொடும் போது, அவர்களின் ஆற்றலையும் பெறக்கூடும். அதோடு பித்ர தோஷமும் நீங்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

கைகளை இணைத்து பார்ப்பது

கைகளை இணைத்து பார்ப்பது

காலையில் எழுந்ததும், இரு கைகளையும் தேய்த்து முகத்தைத் துடைத்து, உள்ளங்கையில் முத்தம் கொடுக்க வேண்டும். கையின் விரல் நுனியில் லட்சுமி தேவியும், உள்ளங்கையில் சரஸ்வதி தேவியும், மணிக்கட்டு பகுதியில் பிரம்மாவும் இருப்பதால், இச்செயலை அதிகாலையில் எழுந்ததும் செய்வதன் மூலம் அதிர்ஷ்டம் தேடி வருமாம்.

காலையில் செய்யக்கூடாத முக்கிய செயல்

காலையில் செய்யக்கூடாத முக்கிய செயல்

வாஸ்துவின் படி, படுக்கை அறையில் உள்ள கண்ணாடி மெத்தையைப் பார்த்தவாறு இருந்தால், அது வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். மேலும் தம்பதியருக்குள் பிரச்சனைகளை அதிகரித்து, பிரிவை உண்டாக்கும். எனவே உடனே இம்மாதிரி கண்ணாடி இருந்தால், அதை உடனே அப்புறப்படுத்தி விடுங்கள்.

மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம்

மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம்

மெத்தைக்கு எதிரே கண்ணாடி இருந்தால், அது மன இறுக்கம் மற்றும் மன அழுத்தத்தை அதிகரித்து, தூக்க பிரச்சனையால் அவஸ்தைப்படச் செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

If You Do These 3 Actions In The Morning Daily, You Are More Likely To Achieve Success Quickly

If you really want your day to go well every single day, we tell you three simple tips of how to do that. You should do them right after waking up in the morning. Read on to know more...
Story first published: Wednesday, May 10, 2017, 12:33 [IST]
Subscribe Newsletter