நல்ல கணவன் அமையவும், தீர்க்க சுமங்கலியாக இருக்கவும் வர்ற ஜூலை 26 ம் தேதி நீங்க என்ன செய்யனும் ?

Posted By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

இந்த ஹரியாலி தீஜ் பூஜையானது விரைவில் வாழ்க்கையில் வளங்களை சேர்க்கும் சக்தி வாய்ந்த பூஜையாகும். ஹரியாலி தீஜ் பூஜையானது இந்த வருடம் ஜூலை 26 ஆம் நாள் கிரிகோரியன் காலண்டர் படி கொண்டாடப்படுகிறது.

ராமாயணத்தைப் பற்றிய சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!!!

நமது இந்து காலண்டர் படி பார்த்தால் ஆடி (ஷ்ரவண அல்லது சாவன்) மாதத்தில் அமாவாசைக்கு மூன்றாம் நாள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது வளர்பிறையின் தொடக்க நாட்களில் இவ்வாழ்க்கையில் அன்பும் மற்றும் வளங்களும் கிடைக்க வேண்டும் என வேண்டி கொண்டாடுகின்றனர்.

ஹரியாலி என்றால் பசுமை என்று பொருள். இது சந்திரன் வளர்ச்சியை குறிக்கிறது. பசுமையான வளர்பிறை நாட்களில் அவர்களுக்கு எல்லா விதமான நலன்களும் வளங்களும் கிடைக்க வேண்டி பிரார்த்திக்கின்றனர்.

Hariyali Teej Puja Items & Method Of Performing The Pooja

செய்யும் முறை :

இந்த நாட்களில் பெண்கள், குழந்தைகள் எல்லாரும் பச்சை நிறத்தில் புது உடைகள் மற்றும் நகைகள் அணிந்து, மரங்களில் ஊஞ்சல் அமைத்து மலர்களாலும் பசுமை கொடிகளாலும் அலங்கரித்து அதில் விளையாடி மகிழ்வர். மேலும் எல்லாரும் சேர்ந்து பாடல் ஆடல் என்று நடனமாடி புதுவிதமான உற்சாகம் கொள்வர்.

இந்த பூஜையானது அன்பான தம்பதிகளான பிரபஞ்ச கடவுள் சிவபெருமானையும் பார்வதி தேவியையும் மனதார நினைத்து வழிபடுவர். அதே போல் அழகான காதல் தழுவிய கடவுள் கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி ராதையை நினைத்தும் வழிபடுவர்.

இந்த பண்டிகை மூன்று நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. இங்கே இந்த பூஜையை எப்படி செய்ய வேண்டும் என்றும் அதற்கு தேவையான பொருட்களை பற்றியும் பார்க்கலாம்.

ஹரியாலி தீஜ் பூஜைக்கு தேவையான பொருட்கள் :

கருப்பு களிமண் அல்லது கருப்பு மணல்

வில்வ இலைகள்

வன்னி மரயிலைகள்

வாழை இலை

ஊமத்தை செடி இலைகள் மற்றும் பழங்கள்

ஆங்கவ் பூக்கள்

துளசி இலைகள்

பூனல்

நூல்

புதுத்துணி

பூக்கள் மற்றும் ஸ்டோன் வொர்க்கால் அலங்காரம் செய்யப்பட்ட குடை சாமிக்கு பக்கத்தில் வைப்பதற்கு.

மெஹந்தி

வளையல்கள்

மெட்டி

கண்மை

பொட்டு

செந்தூர்

குங்குமம்

சீப்பு

மஹகுர்

திருமண அலங்காரம்

வில்வ பழம்

கலசம் (வெள்ளி குடம் மற்றும் தேங்காய் கட்டிய அமைப்பு)

குங்குமப் பவுடர்

சந்தனக் கட்டை

எண்ணெய் அல்லது நெய்

சூடம்

தயிர்

சர்க்கரை

தேன்

பால்

பஞ்சாமிர்தம்

பூஜை செய்யும் முறை

Hariyali Teej Puja Items & Method Of Performing The Pooja

சொல்ல வேண்டிய மந்திரம் :

" உமாமகேஸ்வராஷஜியுஜா ஷித்தயே ஹரிதாலிகா

விரத்மஹம் கரிஸியே "

மனதை ஒரு நிலைப்படுத்தி பூஜையை தொடங்குதல் :

இந்த பூஜையை மாலை நேரமான பிரதோஷம் நேரத்தில்(பகல் மற்றும இரவு இரண்டும் சந்திக்கும் நேரம்) மேற்கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் நன்றாக குளித்து புதிய ஆடை அணிந்திருக்க வேண்டும்.

இப்பொழுது நமக்கு சிவன், விநாயகர் மற்றும் பார்வதி சிலைகள் வேண்டும். இந்து கலாச்சாரப்படி தங்கத்தில் பயன்படுத்துவர். ஆனால் நீங்கள் கருப்பு களிமண் அல்லது கருப்பு மணல் கொண்டு சாமி சிலைகளை உங்கள் கைகளால் செய்து கொள்ளலாம். தேவி பார்வதியை மணப் பெண் மாதிரி அலங்கரிக்க வேண்டும். அதே மாதிரி கடவுள் சிவனுக்கும் புது ஆடைகளை அணிவிக்க வேண்டும்.

பிறகு புது உடைகளையும், அலங்கார பொருட்களையும் பிராமணருக்கு வழங்க வேண்டும்.

பக்தியுடன் மனதார ஹரியாலி தீஜ் கதையை படிக்க வேண்டும்.

கதை முடிவில் விநாயகர், சிவன் மற்றும் பார்வதி தேவிக்கு தீபாராதனை காட்ட வேண்டும். அப்படியே எல்லாரும் தீபாராதனையை தொட்டு கும்பிட்டு மனதார பிராத்திக்க வேண்டும்.

இரவு முழுவதும் வழிபாட்டில் கழித்து விழித்தே இருக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் எல்லா தெய்வங்களுக்கும் பூஜை செய்து பார்வதி தேவி சிலைக்கு குங்குமம் வைத்து வழிபட வேண்டும்.

Hariyali Teej Puja Items & Method Of Performing The Pooja

எல்லா தெய்வங்களுக்கும் வெள்ளரிக்காய் மற்றும் அல்வா படைத்து உங்கள் காலை உணவை வெள்ளரிக்காய் எடுத்து முடித்து கொள்ள வேண்டும்.

பூஜை நல்லபடியாக முடிந்த பிறகு எல்லா பொருட்களையும் ஹோலி நதியில் அல்லது தண்ணீரில் மிதக்க விட வேண்டும்.

இந்த பூஜையானது திருமணமான பெண்கள் தன் கணவனின் நீண்ட ஆயுளுக்காகவும் (தீர்க்க சுமங்கலியாக இருக்கவும்), திருமணமாகாத பெண்கள் மனதுக்கு பிடித்த நல்ல கணவர் வேண்டுமென்று நினைத்தும் வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

English summary

Hariyali Teej Puja Items & Method Of Performing The Pooja

Hariyali Teej Puja Items & Method Of Performing The Pooja
Story first published: Wednesday, July 19, 2017, 20:00 [IST]