பாலத்தின் கீழே நிர்வாணமாக வாழ்ந்து வந்த பெண், ஃபாரினர் அளித்த மறுவாழ்வு!

Posted By:
Subscribe to Boldsky

அந்த ஃபாரின் தம்பதி, இந்தியாவில் ரயிலில் பயணிக்கும் போது எடுத்த புகைப்படத்தை கண்டு மனம் வருந்தினர். அதற்கு காரணம், அந்த படத்தில் பதிவான காட்சியில், ஒரு பாலத்தின் கீழே ஒரு பெண் நிர்வாணமாக வாழ்ந்து வருவதும், அவரது குடும்பமும் அந்த பாலத்தின் கீழேயே வாழ்ந்து வருவதுமாக இருந்தது.

உடுத்த உடை இன்றி, உறங்க இடமின்றி ஒரு குடும்பம் இருக்கிறதா? என்பதை அறிந்த அவர்கள் உடனே அவர்களுக்கு உதவ முன்வந்தனர். உதவி என்றால் கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு செல்வதல்ல.

அந்த பெண்ணுக்கு சரியான படிப்பு அளிப்பதில் இருந்தும், அவர்களுக்கு வங்கி கணக்கு உருவாக்கிக் கொடுத்து, தங்க ஒரு வீடு ஏற்பாடு செய்து, அதற்கு மாதாமாதம் வாடகை செலுத்துவது வரை என, ஒட்டுமொத்தமாக அந்த பெண்ணின் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொடுத்து சென்றுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்மித் தம்பதி!

ஸ்மித் தம்பதி!

டிக் ஸ்மித் மற்றும் பிப் இருவரும் கணவன் மனைவி. இவர்கள் இந்தியாவில் ஒரு பாலத்தின் கீழே பெண் ஒருவர் நிர்வாணமாக வாழ்ந்து வருவதை கண்டுள்ளனர். அப்போது அவர்கள் அந்த வழியே கடந்து சென்ற ரயிலில் பயணம் செய்துள்ளனர். தங்கள் மொபைலில் எடுத்த படத்தில் பதிவான ஜி.பி.எஸ் தகவலின் படி, அந்த இடம் எங்கே இருக்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர்.

கையில் ஒரு பிங்க் நிற பேன்ட் அணிந்திருந்தது தான் நிர்வாணமாக இருந்த அந்த பெண்ணின் ஒரே அடையாளம்.

நண்பர்கள்!

நண்பர்கள்!

நாடு திரும்பிய அந்த தம்பதி தங்கள் நண்பர்கள் சிலரை இந்தியா அனுப்பி, அந்த பெண் எங்கே இருக்கிறாள் என்பதை கண்டறிய கூறியுள்ளது.

நண்பருக்கு நீ இந்தியா செல்லவிருக்கிறாயா? அங்கே ஒரு குடும்பம் இருக்கிறது, அவர்களுக்கு நாம் உதவலாமா? என்று பார் என தனது நெருங்கிய தோழர் கிறிஸ்க்கு ஸ்மித் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

வதோதரா

வதோதரா

ஸ்மித் வைத்திருந்த படம் மற்றும் அதில் பதிவாகியிருந்த ஜி.பி.எஸ்-ஐ வைத்து அந்த குடும்பம் வதோதரா பகுதியல் வாழ்ந்து வருவதை அறிந்துக் கொள்ள முடிந்தது. ஸ்மித் மற்றும் பிப்பால் அந்த குடும்பத்தை பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. அந்த பெண்ணின் கல்வி மற்றும் வாழ்க்கை தரம் உயர உதவ வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தனர்.

முகம்!?

முகம்!?

அந்த புகைப்படம் மட்டுமே ஸ்மித் மற்றும் கிறிஸ்ஸிடம் இருந்தது. அந்த படத்தில் முகங்கள் கூட சரியாக தெரியவில்லை. க்றிஸ் விமானத்தில் பறந்து வந்தார். நூறு கோடி பேர் வாழும் நாட்டில் அந்த ஒரு பெண்ணை தேடித் பிடிக்க வேண்டும். முதலில் அந்த பெண்ணை கண்டறிய உதவிய யாராலும், அந்த பெண்ணை சந்திக்க முடியவில்லை.

பாலம்!

பாலம்!

கடைசியாக ஜி.பி.எஸ் மூலம் அவர்களாகவே அந்த பாலம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சென்றனர். அந்த இடத்திற்கு சென்றதுமே கையில் அந்த பிங்க் பேன்ட் கட்டிய பெண்ணை கண்டதாகவும். பார்த்ததும் அவர் மறைந்துவிட்டார் என்றும் க்றிஸ் கூறியிருக்கிறார்.

தொடர்பு!

தொடர்பு!

அவர்களுடன் பேச, தொடர்புக் கொள்ள கொஞ்சம் சிரமமாக இருந்தது. எனவே, இந்தியாவில் இருந்த என் நண்பரின், நண்பரை அழைத்து அவரது தந்தை மூலமாக அந்த குடும்பத்துடன் பேச ஆரம்பித்தோம். எங்களுக்கு பேச உதவ வந்த நபர் ஒரு பல்கலைக்கழக பேராசிரியர் ஆவார்.

அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்ணை பிறகு தேட ஆரம்பித்தோம். பலரும் அந்த பெண்ணை இதற்கு முன்னர் கண்டதே இல்லை என கூறினார்கள்.

காலிழந்த நபர்!

காலிழந்த நபர்!

கடைசியாக கால் இழந்த ஒரு நபர் ஸ்மித் எடுத்த அந்த புகைப்படத்தை பார்த்து அந்த பெண் யார் என அறிந்தார். அந்த நபர் ஒரு ட்ரெயின் விபத்தில் தான் கால் இழந்ததாக கூறியிருந்தார். அந்த நபரின் மூலமாக அந்த பெண் இருக்கும் இடத்தை நெருங்கினோம்.

திவ்யா!

திவ்யா!

அந்த பெண் பெயர் திவ்யா, வயது 8. திவ்யாவுக்கும் அவரது குடும்பத்திற்கும் தங்குவதற்கு வீடில்லை. ஆரம்பத்தில் திவ்யா க்றிஸ்-ஐ பார்க்க வெட்கப்பட்டுள்ளார். பிறகு, க்றிஸ் தனது நண்பர் ஸ்மித் எடுத்த படம் மற்றும் தான் வந்த கதையை கூறியுள்ளார்.

எத்தனை ஆண்டுகளாக இங்கே வாழ்ந்து வருகிறாய் என கேட்தற்கு 12 ஆண்டுகள் என்ற பதில் கிடைத்தது. திவ்யாவுடன் பேசிக் கொண்டிருந்தா க்றிஸ். அப்போது சிறுது நேரத்தில் வேலை முடித்து அவரது தந்தை அந்த இடத்திற்கு திரும்பினார்.

வங்கி மேலாளர்!

வங்கி மேலாளர்!

ஏற்கனவே ஒரு வங்கி மேலாளரிடம் பேசி வைத்திருந்தார் க்றிஸ். திவ்யாவின் தந்தை வந்தவுடன், வாருங்கள் என அந்த வங்கி மேலாளரை காண அழைத்து சென்றுவிட்டார். மேலும், அதற்கு முன்னர், அந்த குடும்பத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை பொருட்களும் வாங்கிக் கொடுத்துள்ளார் க்றிஸ்.

கல்வி!

கல்வி!

திவ்யாவிற்கு நல்ல கல்வி தர என்னவெல்லாம் தேவைப்படுமோ, அதற்கு எத்தனை செலவு ஆகுமோ, அதை அனைத்தையும் வங்கி மேலாளரிடம் கேட்டறிந்து அதற்கான தகவல்களும் பெற்று சென்றுள்ளார் க்றிஸ். வீடு வாடகை முதல் திவ்யாவின் கல்விக்கான மொத்த செலவும் ஏற்றுக் கொண்டிருக்கிறார் க்றிஸ் மற்றும் ஸ்மித்.

சேர்க்கை!

சேர்க்கை!

திவ்யா அதுவரை நிலையாக பள்ளி சென்ற மாணவி அல்ல. ஒரு சில பள்ளிகளில் சேர்த்துக் கொள்ள மறுப்பு தெரிவித்த போதும். ஒரு பள்ளி திவ்யாவை தங்கள் பள்ளியில் சேர்த்துக் கொண்டனர்.

அதற்கான கட்டணங்கள் அனைத்தையும் செலுத்தினர். பிறகு, திவ்யாவிற்கு பிடித்த உடைகள், அவளுக்கு தேவையான பொருட்கள் என அனைத்தையும் வாங்கிக் கொடுத்து அவளை மகிழ்வித்துள்ளனர் க்றிஸ் மற்றும் அவரது மனைவி.

மாதாமாதம்!

மாதாமாதம்!

ஒவ்வொரு மாதமும் திவ்யாவின் குடும்பத்திற்கு தேவையான வாடகை மற்றும் கல்வி கட்டண பணம் அவர்களது வங்கிக்கு அனுப்பி வருகிறார் க்றிஸ். அதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிட்டார் க்றிஸ்.

இந்த சம்பவம் நடந்தது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்துமஸ் தினத்தில். ஏறத்தாழ இரண்டாண்டுகள் ஆகிறது. இப்போது திவ்யா மற்றும் அவரது குடும்பம் இப்படி இருக்கிறது என்றால் அதற்கு க்றிஸ் மற்றும் ஸ்மித் தான் காரணம்.

இவர்களுக்கு நன்றி கூறுவதும் கூட குறைவு தான். இதுப் போன்ற மக்கள் இருப்பதை காணும்போது தான் மனிதம் இன்னும் அழியவில்லை என்பதை அறிந்துக் கொள்ள முடிகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foreign Couple Helped The Family of Naked Girl Who Lived Under Bridge!

Foreign Couple Helped The Family of Naked Girl Who Lived Under Bridge!
Subscribe Newsletter