கட்டாயத் திருமணத்தின் காயங்களை அப்பட்டமாக வெளிப்படுத்திய புகைப்படக் கலைஞர்!

Posted By:
Subscribe to Boldsky

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட உறவு என்பார்கள். ஆனால், அது அனைவருக்கும் சொர்க்கமாக அமைகிறதா? அல்லது சொற்பமான நபர்களால் சீரழிந்து போகிறதா? என்பது தான் வாழ்க்கையின் பெரும் திருப்பமே.

காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ... எதுவாக இருந்தாலும் ஒருவரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்வது மனிதத்தன்மையற்ற செயலாகும்.

சில இனத்தினர், சில மதத்தினர் காதலை எதிர்க்கிறோம் என சொந்த பிள்ளையை கட்டாயத் திருமணம் செய்து வைத்து கொன்றுவிடுகிறார்கள்.

கொடுமையின் உச்சமாக திகழும் கட்டாயத் திருமணங்களில் சிக்கி ஒரு பெண் எத்தகைய கொடுமைகளை எல்லாம் எதிர்கொள்கிறார் என்பதை தனது புகைப்படங்கள் மூலம் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளார் பாகிஸ்தான் புகைப்பட கலைஞர் ரிதா ஷா!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முகம்!

முகம்!

மூடி இருப்பது முகம் மட்டுமல்ல, எண்ணற்ற உணர்வுகளின் மூட்டைகளும் தான். பிடிக்காத உணவை ஒரு கைப்பிடி அள்ளி வாயில் போட்டாலே அது எவ்வளவு சிக்கும் என்பது தெரியும்.

ஒரு நொடியில் தொண்டையில் இறங்கிடும் இதற்கு இப்படி என்றால். வாழ்நாள் முழுக்க பிடிக்காத நபருடன் வாழ்ந்து, உணர்வுகளை தொண்டைக்குள் புதைத்து விம்மி, விம்மி அழும் பெண்களின் நிலை எவ்வாறு இருக்கும்?

கட்டு!

கட்டு!

இந்த சமூகம் கட்டாயத் திருமணம் என்ற பெயரில் ஓர் ஆண், பெண்ணை கட்டி வைப்பதில்லை. பெண்ணை மட்டுமே ஒரு மாய சங்கலியில் கட்டி அவளை சமூகத்தில் ஒரு சிறைக்கைதி ஆக்கி அடிமைப் படுத்துகிறது. ஒருவரின் செல்வம், பொருட்களை அழிப்பதை காட்டிலும், கனவு மற்றும் வாழ்க்கையை அழிப்பது பெரும் பாவச் செயல் ஆகும்.

ரிங்!

ரிங்!

ரிங்கில் (மோதிரம்) அடங்கி போவது அவள் மட்டுமல்ல, அவரது வாழ்க்கையும் தான். ரிங் மாஸ்டர் சொல்வதை கேட்டு, சர்க்கஸில் ஆடும் விலங்குகளை போல தான், அவளும் கணவன் என்ற ரிங் மாஸ்டரின் கட்டளைக்கு இணங்கி அடிமை ஆகி போகிறாள்.

கருத்து!

கருத்து!

கட்டாயத் திருமணத்தின் போதே அந்த பெண்ணின் குரல்வளையை நெருக்கிக் விடுகிறார்கள். அதன் பின் அவளது பேச்சுக்கு எங்கே இருக்க போகிறது மதிப்பு. வாயில்லா பூச்சியாக, வெறும் செக்ஸ் பொம்மையாக தான் பல பெண்கள் கட்டாயத் திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

தலையாட்டி பொம்மை!

தலையாட்டி பொம்மை!

கட்டாயத் திருமணத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் ஆப்ஷன் ஒன்று தான். கூறுவதற்கு தலையாட்ட வேண்டும். இல்லையேல் மடிந்து சாகவேண்டும்.

இந்த நவீன யுகத்தில் இதெல்லாம் எங்கே இருக்கிறது என்பார்கள். மெட்ரோ சிட்டிகள் தவிர்த்து, உலகின் பல பகுதிகளில் இவை இன்னும் கட்டுக்கடங்காமல் தான் இருக்கின்றன.

கண்ணீர்!

கண்ணீர்!

அந்த பெண் ஆனந்தத்தில் அழுகிறாளா? சோகத்தில் அழுகிறாளா? என பிரித்து பார்க்கும் அறிவும், அறிய நேரமும் கட்டாயப் படுத்தி திருமணம் முடித்த கணவர்களுக்கு இருப்பதில்லை.

சில பெண்களின் சிறகுகளை ஒடிக்கிறார்கள். சில பெண்களை சிறையில் அடைக்கிறார்கள். ஆகமொத்தம் இன்றளவிலும் பெண்ணடிமைத்தனம் உலகில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது என்பதே நிஜம்!

All Image Courtesy:Rida Shah's Photography

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Pakistani Photographer Clicked Emotional Pictures of Forced Marriages!

Pakistani Photographer Clicked Emotional Pictures of Forced Marriages!
Subscribe Newsletter