திருமணங்களுக்கு பின்னால் சமூகம் எழுப்பியிருக்கும் பிம்பச்சுவரை இப்படியும் இடிக்கலாம்!

Posted By:
Subscribe to Boldsky

கடந்த வாரத்தில் நடைப்பெற்ற ஓர் சம்பவம் அவ்வளவு எளிதாக கடந்து வர முடியவில்லை. மன்னார்குடியில் நல்ல படித்த வசதியுள்ள குடும்பத்தில் பெண் வரதட்சனை கொடுமையால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

மகளுக்கு நூறு பவுனும் இன்னபிற சாமாச்சாரங்களும் வரதட்சனையாக கொடுத்துமே மகளை பறிகொடுத்து நிற்கும் குடும்பத்தாருக்கும் தாயை இழந்து நிற்கும் குழந்தைக்கும் என்ன சொல்லப்போகிறோம்?

பலியாடாக இருக்கும் பெண்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதில் வரதட்சனை முக்கிய இடத்தை வகிக்கிறது. ஏழை பணக்காரன் வித்யாசங்களின்றி நம்மிடையே ஊடுருவியிருக்கும் வரதட்சனையை தவிர்க்கவே முடியாதா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போதை மூலதனம் :

போதை மூலதனம் :

ஒரு பெண்ணோ அல்லது ஆணோ தனக்கு வரதட்சனை வேண்டாம்.... கேட்கவும் மாட்டேன் கொடுக்கவும் மாட்டேன் என்று சொல்வதால் மட்டும் வரதட்சனையை நிச்சயமாக ஒழிக்க முடியாது.

சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் இதில் பொருளாதார ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பல்வேறு காரணங்கள் புதைந்திருக்கின்றன. பல டாஸ்மாக் கடைகளை அடைக்க உத்திரவிடும் நீங்கள் ஏன் ஒரு மிடாஸை மூடக்கூடாது என்று கேட்கிறோமே.... அதே கான்சப்ட் தான் இங்கேயும்.

மிடாஸுக்கு மார்கெட் தெரியும். எவ்வளவு விலை வைத்தாலும் வாங்குவான் என்று தெரியும். இதன் மூலமாக கோடி கோடியாக சம்பாதித்தவன் ஒரு போதும் தன்னுடைய இடத்தை விட்டுத்தரவே மாட்டான். அதே போல போதை ஆசாமிகள் எவ்வளவு விலையில் விற்றாலும் வாங்கிக் கொண்டேயிருப்பார்க்ள். இவர்களின் போதை தான் மிடாஸின் மூலதனம்.

போற இடத்துல என் பொண்ணு நல்லாயிருக்கணும் என்கிற பெண் வீட்டாரின் நம்பிக்கையை வரதட்சனையாக மாற்றி, அதிகாரமாய் பிடுங்கிக் கொள்கிறார்கள் பையன் வீட்டார். அதன் ருசியை அறிந்தவர்கள், ஒரு போதும் வரதட்சனையை விட்டுத்தர முன்வருவதில்லை. சிலர் விதிவிலக்காக இருந்தாலும் அவர்களின் மீது சேற்றை வாரி இறைக்க இந்த சமூகம் தயாராய் காத்திருக்கிறது. அதற்கு கையில் எடுத்திருக்கும் ஆயுதம் தான் ‘கௌரவம்'.

திருமணம் எனும் வர்த்தகம் :

திருமணம் எனும் வர்த்தகம் :

இந்திய குடும்பங்களில் நடத்தப்படும் வர்தக சந்தை தான் திருமணங்கள். ஒரு நிகழ்வு வர்தக சந்தையாக மாறியதற்கு பின்னால் இருக்கும் ஒரே ஒரு அம்சம்... ‘நான் ஜெயித்துவிட்டேன்' என்பது தான்.

பொதுவாக திருமணம் என்பது, தனி நபர் ஒருவரைப் பற்றிய ரிவியூவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக உழைக்கிறாய், குடும்பமாக வசிக்கிறாய்... அதற்கான பலன் என்ன? என்று இந்த சமூகம் கேட்கும் கேள்விக்கு, விடையாய் தன் வீட்டுத் திருமணத்தை காட்டுகிறான். தன் பொருளாதாரத்தையும், தன் அதிகாரத்தையும், தன் சாமர்த்தியத்தையும், காண்பிக்கும் மேடையாக தன் வீட்டுத் திருமணத்தை உருவாக்குகிறான். இதன் மூலமாக இந்த சமூகத்தில் தனக்கான இடத்தை உயர்த்திக் கொள்கிறான்.

பார், என் பிள்ளைகளை படிக்க வைத்திருக்கிறேன். இத்தனை சவரன் நகையை வரதட்சனையாக கொடுக்கிறேன். இதே சமூகத்தில் எனக்குச் சமமான அல்லது என்னை விட மேலேயிருக்கும் ஒருவருடன் சம்மந்தம் பேசியிருக்கிறேன். எத்தனை பிரம்மாண்டமாய் நினைவில் நிற்கும்படி அத்தனை ஆடம்பரமாய் நடக்கும் என் வீட்டு திருமணத்தைப் பார் என்று தன் சமூகத்தாரிடம் காட்டும் பொருட்டு ஒவ்வொருவரும் தங்களால் முடிந்தவரையில் பிரம்மாண்ட திருமணங்களையே விரும்பி ஏற்கிறார்கள்.

இந்த பிரம்மாண்டத்தின் வழியே தன் பொருளாதாரத்தையும், சம்மந்தம் பேசி முடிப்பதில் தன் அதிகாரத்தையும், நிலைநாட்டிக் கொள்கிறான். இதற்காகவே, தான் சொல்பவரைத் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. அதற்கு சாதி, கௌரவம் போன்ற காரணங்களை உடன் அழைத்துக் கொள்ளப்படுகிறது.

இப்போ எல்லாம் யாரு சார் சாதி பாக்குறா?:

இப்போ எல்லாம் யாரு சார் சாதி பாக்குறா?:

இப்படிச் சொல்லிக் கொண்டே எப்படி நுணுக்கமாக சாதுர்யமாக சாதியை பார்க்கிறோமோ... எப்படி நாசூக்காக சாதிய வேறுபாடுகளை கடைபிடிக்கிறோமோ அதே போல, ‘ஸ்டேட்டஸ் எல்லாம் பெரிய விஷயம் இல்ல' என்று சொல்லிக் கொண்டே சாதிக்கு இணையான ஒரு பூதத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம்.

இங்கு சாதி ஆணவ கொலைகள் நடக்கும் அதே நேரத்தில், ‘ஸ்டேட்டஸ்' கொலைகளும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம், ஹரித்துவார்மங்கலத்தை சேர்ந்த இளையராஜாவின் திருமணம் மருத்துவமனையில் நடந்தது, மணமகள் கலைச்செல்வி உடல் முழுக்க வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். ஆம் படுக்கையில் கிடந்த கலைச்செல்வியின் கழுத்தில் தாலி கட்டினார் இளையராஜா. ‘நாங்க ரெண்டு பேரும் ஒரே சமூகம் தான், ஆனா அவங்களவிட நாங்க கொஞ்சம் வசதி கம்மி, அதனால கல்யாணத்துக்கு ஒத்துக்கல.... ஆனா நானும் கலைச்செல்வியும் உறுதியா இருந்தோம். இப்டி பண்ணிட்டாங்க' என்றார்.

திருமணச் சந்தையில் ஸ்டேட்டஸ் என்பது முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. தன்னுடைய சமூகத்தாருக்கு மத்தியில் அந்தஸ்த்துடையவன் என்று காட்டிக் கொள்ளவே வரதட்சனையையும் திருமணத்தையும் பயன்படுத்திக் கொள்கிறான்.

Image Courtesy

காதலிலும் வரதட்சணை :

காதலிலும் வரதட்சணை :

இங்கு காதல் திருமணங்கள் எல்லாம் விதிவிலக்கு. காதலுக்கு முன்னால் வரதட்சனை என்பது எடுபடாது என்று நினைப்பவர்கள் தயவு செய்து ஐ.பி.எஸ்., அதிகாரி வருண் குமார்-ப்ரியதர்ஷினி வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நினைவில் கொள்ளவும். அந்த பெண் அவமானங்களும், பாதிக்கப்பட்டவர்களை சட்டமும் அணுகிய விதத்தை அறிந்தால் வரதட்சணையின் கோர முகம் உங்களுக்கு புலப்படும்.

Image Courtesy

பெண் கல்வி :

பெண் கல்வி :

பெயருக்கு பின்னால் சேர்க்க பயன்படும் பட்டப்படிப்பை எல்லாம் கல்வி லிஸ்டில் சேர்க்க வேண்டாம். இன்றளவும் பெண்களுக்கு கல்வியும், வேலைவாய்ப்பும் மறுக்கப்பட்டு வருகிறது. என்ன தான் படிக்க வைத்தாலும் திருமணச் சந்தைகளில் பெண்களுக்கான விலை ஒன்றும் குறைக்கப்படுவதில்லை.

எம்.பி.பி.எஸ் படித்திருக்கிறாள் அதனால் 70 சவரன் கொடுக்கும் இடத்தில் 30 சவரன் கொடுத்தால் போதும் என்றும் யாரும் சொல்வதில்லை. வேண்டுமானால் கல்வி என்பது தேர்தெடுக்கவும், முன்மொழியவும் மட்டுமே பயன்படுகிறது.

ஐடியா :

ஐடியா :

பையன் இன்ஜினியர் அதனால் பெண்ணும் இன்ஜினியராக இருக்க வேண்டும் என்று கேட்கலாம். திருமண பேச்சு எழுந்தவுடனேயே வேலைக்கு எல்லாம் போக வேண்டாம் என்று தான் அறிவுறத்தப்படுகிறது. கணவன் சம்பாதிக்கும் பணத்தை சிக்கனமாக செலவழிக்க பழகு, வீட்டையும் குழந்தைகளையும் பார்த்துக்கொள் என்றே வலியுறுத்தப்படுகிறது. அப்படியே வேலைக்குச் சென்றாலும், புதிதாக திருமணமான பெண் என்றால், மெட்டர்னட்டி லீவ் கேட்பார்களே என்று வரவேண்டிய தகுதி உயர்வும் கொடுக்கப்படுவதில்லை.

பிள்ளைப்பேறு என்பது இயற்கையானது தான் என்று இன்னும் இங்கு ஏற்றுக் கொள்ளப்படவில்லை.வேண்டுமானால்,உறுதியாக எதையும் தனியாக சமாளிப்பேன் என்று நினைப்பவர்கள் எல்லாரையும் எதிர்த்து வேலைக்குச் செல்லலாம்.

எப்படியும் செலவழித்து படிக்க வைத்தால் அது திருமணச் சந்தையில் என்னுடைய செலவை குறைக்கப்போவதில்லை, அதற்கு பிறகு அந்த கல்வியை வைத்து வேலைக்கும் செல்ல அனுமதிக்கப்போவதில்லை அதனால் எதற்கு இரட்டைச் செலவாக படிப்பிற்கும்.... வரதட்சனைக்கும் செலவழிக்க வேண்டும்? எதாவது ஒரு பட்டப்படிப்பு படிக்க வைக்கிறோம். நேரடியாக வரதட்சனை கொடுக்கிறோம் என்று வாடிக்கையாக்கி கொண்டனர்.

கொலை செய்யும் குடும்பம் :

கொலை செய்யும் குடும்பம் :

நமக்குப் பிடித்த பொருள் என்றால் அதை சிரத்தையாக பராமரிப்பது, கவனமாக கையாள்வது என நம்மால் முடிந்தளவு பத்திரப்படுத்துவோம். மறந்தும் பிறர் அதனை அவமரியாதை செய்ய விடமாட்டோம். ஒரு பொருளுக்கே இத்தனை அக்கறையென்றால் ஒரு உயிருக்கு? அதுவும் நேசிக்கும் ஓர் உயிரை எப்படி பாதுகாப்போம்?? ஆனால் பெரும்பாலான சாதி ஆணவக் கொலைகள், வரதட்சணைக் கொலைகள், ஸ்டேட்டஸ் கொலைகளுக்கு பின்னால் அஸ்திவாரமாய் இருப்பது இதுவரையில் நேசித்த "குடும்பம்".

Image Courtesy

திருமணத் தயாரிப்பு :

திருமணத் தயாரிப்பு :

பெண் குழந்தை பிறந்ததிலிருந்தே அப்படி உட்காராதே, அப்படி நடக்காதே, அப்படி பேசாதே.. பொறுப்பாய் இரு.... என்று அந்ததந்த பருவ மகிழ்சியை தாண்டி திருமண வாழ்க்கைக்கான தயாரிப்பாய் தான் பெண் பிள்ளைகள் வளர்க்கப்படுகிறார்கள்.

ஆண், தன் அதிகாரத்தை காட்டுவதற்கான் இடமாக உருவாக்கி வைத்திருக்கும் திருமணத்திற்காக தன்னையும் தன் குடும்பாத்தாரையும் சுற்றிலும் தயார்படுத்திக் கொண்டேயிருக்கிறான். தன் கௌரவத்தை நிலைநாட்டவும், அந்தஸ்த்தை உயர்த்தவும் பல தகுதிகளை வகுத்து தன் வீட்டுப் பெண்ணுக்கான மாப்பிள்ளையை தேடுகிறான்.

இதற்கான ஒரு வழியாகத்தான் நான் சொல்பவனைத் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

பாசம் எனும் சந்தர்ப்பவாதம் :

பாசம் எனும் சந்தர்ப்பவாதம் :

மகளை வாரிசாக நினைக்காமல் ‘திருமண ப்ராடெக்டாக' நினைத்து வளர்ப்பதாலேயே, தன் விருப்பத்திற்கு மாறாக மகள் திருமணம் செய்து கொள்ளும் போது கொலை செய்யவும் துணிந்து விடுகிறான் அந்த மகளின் முதல் ஹீரோ.

ஓர் ஆண், சாதி மாறி திருமணம் செய்து விட்டான் அதனால் அவன் குடும்பமே அவனை கொன்றுவிட்டது என்று எங்கும் நிகழ்ந்ததில்லை. வேண்டுமானால், எங்கள் வீட்டுப் பெண்ணை எப்படி திருமணம் செய்யலாம் என்று பெண் வீட்டார் அந்த ஆணை கொலை செய்திருக்கும். ஏனென்றால் ஆண் தான் வீட்டின் வாரிசு, பெண் இன்னொரு வீட்டிற்கு சென்றுவிடுபவள் என்கிற ரீதியில் தான் வளர்க்கப்படுகிறாள். அதனால் தான் ஆணுக்குச் செலவு செய்வது முதலீடாகவும், பெண்ணுக்கு செலவு செய்வது செலவாகவும் பார்க்கப்படுகிறது.

தன் அதிகாரத்தை காட்டுவதற்கும், மிரட்டுவதற்கும், பணியவைக்கவும் தான் அந்த மகளின் அப்பழுக்கற்ற பாசத்தை அவளது குடும்பம் பயன்படுத்திக் கொள்கிறது.அவளது நம்பிக்கையை சிதைக்கிறது.

இதற்கு பெயர் பாசமா?? அல்லது சந்தர்ப்பவாதமா??

மாமியார் மருமகள் :

மாமியார் மருமகள் :

திருமணமே ஓர் பெண்ணின் இறுதி இலக்கல்ல, அதையும் தாண்டி அவளுக்கான ஒரு லட்சியம் இருக்கும் அதை நோக்கி ஓடட்டும். வாழ்க்கையின் ஓர் அங்கம் தான் திருமணம் என்பதை அவள் புரிந்து கொண்டுவிட்டாள் அதற்கு பிறகான வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க துவங்கிவிட்டாள்.

அதே போல குழந்தைப் பருவத்திலிருந்தே பயமுறுத்தி திருமண வாழ்க்கைப் பற்றிய பயத்தை உருவாக்காதீர்கள். அந்த வாழ்க்கையை ரசிக்க, ஏற்க கற்றுக் கொடுங்கள். மாமியார் என்றால் வில்லி இருவருக்குள்ளும் எப்போதும் சண்டை வந்து கொண்டேயிருக்கும் என்று சொல்லாதீர்கள் பரப்பாதீர்கள். அதே போல மருமகள் என்றால் திமிர் பிடித்தவள் தன் பிள்ளையை தன்னிடமிருந்து பறிக்க வந்த பிசாசு என்று எண்ணாதீர்கள். மகனின் வாழ்க்கைத் துணை அவ்வளவே... அவள் வந்ததற்காய் பெற்றவளின் இடம் என்றுமே மாறாது.

Image Courtesy

ஒரே வழி :

ஒரே வழி :

பெண் குழந்தை பிறக்கும் போதிருந்தே அந்த மாற்றம் துவங்க வேண்டும். அவள் உங்களது குழந்தை, அவளும் உங்கள் வீட்டின் வாரிசு என்று ஏற்க பழகுங்கள். பாலியல் தாக்குதல்களின் போது பெண்களின் மீது தான் தவறு, எல்லாவற்றிற்கும் காரணம் பெண்கள் தான் என்று சொல்லி தப்பித்துக் கொள்வது போல இம்முறையும் வேண்டாம்.இப்போதே, வரதட்சணை வேண்டாம் வாங்கவும் மாட்டோம் கொடுக்கவும் மாட்டோம் என்று தீர்க்கமாக முடிவெடுங்கள்.

கல்வி தான் என் குழந்தையின் மிகப்பெரிய சொத்து என்று மகனோ மகளோ விரும்பும் கல்வியைக் கொடுங்கள். தனக்குப் பிடித்த வாழ்க்கையை வாழட்டும். அதற்காக இன்னொரு பிறப்பெடுத்து வர முடியாது.

நல்லதொரு மாற்றம். தொடரட்டும்.... வரவேற்போம். இது உங்களுக்கான வாழ்க்கை வெற்றியோ தோல்வியோ அனுபவித்திடுங்கள். இன்னொருவனிடம் கடத்த வேண்டாம். ‘வாடி ராசாத்தி......', என்றும் ‘மனிதி வெளியே வா.....' என்றும் பெண்களைப் பற்றி பாட்டு பாடினால் மட்டும் போதாது. அழைத்த கரங்கள் வழிவிட்டால் மட்டுமே உங்களின் மனிதி வெளியே வர முடியும்.

கை கொடுங்கள்.... ஆம், இங்கே உங்களைத் தவிர வேறு யாருமில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync life marriage love
English summary

Eliminating Dowry From Our Society

Reasons For Buying Dowry and tips to avoid.