அனிதா, லக்ஷ்மி மேனன், சன்னி லியோன்... நம்முள் ஏற்பட்டுள்ள தாக்கம் என்ன?

Posted By:
Subscribe to Boldsky

எமொஜி (Emoji) உணர்சிகளின் வெளிப்பாட்டை எழுத்துக்களாக இல்லாது, பொம்மைகள் மூலம் வெளிப்படுத்தும் செய்தி உரையாடல் கருவி.

வெறும் எமொஜி மூலமாக மட்டும் நீண்ட நேரம் பேசி வருவது போல, எமொஜி மூலம் ஒரு கேள்வி கேட்டு பதில் வாங்கும் புதிர் விளையாட்டு என நாம் சில மீம்களில் கண்டிருப்போம்.

Emoji's and Reactions: Are We Becoming Emotional Weaker?

எமொஜி மற்றும் ஃபேஸ்புக் ரியாக்ஷன்களால் நம்மில் ஒரு மாற்றம் உருவாகியிருக்கிறது.

அதுவும் உணர்ச்சி பூர்வமாக, அதை என்றாவது நீங்கள் உணர்ந்ததுண்டா? அது என்ன மாற்றம் என்றாவது நீங்கள் அறிந்ததுண்டா? சிலர் சில தருணங்கள் இதை பற்றி யோசித்து, பிறகு அதன் விளைவுகள் அறியாமல் நகர்ந்து சென்றிருப்பார்கள்.

ஆனால், நமது உணர்ச்சிகளின் வெளிப்பாட்டோடு இந்த எமொஜி மற்றும் ஃபேஸ்புக் ரியாக்ஷன்கள் வலுவாக விளையாடி வருகிறது. நாம் ஒரு வீக்கர் எமோஷனல் (Weaker in Emotion) நபராக மாறி வருகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு!

ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு!

நேற்று ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு... ஒரு நபர் "அனிதாவின் பதிவு ஒன்று என் ஃபீடில் வந்தது, அதற்கு நான் சோகமான ரியாக்ஷன் கொடுத்தேன். பிறகு லக்ஷ்மி மேனனை கேலி செய்து ஒரு மீம் அதற்கு கீழே எனது ஃபீடில் இருந்தது, அதை கண்டு உடனே சிரிக்கும் ரியாக்ஷன் கொடுத்தேன். எனக்கொரு சந்தேகம், அனிதா பற்றிய பதிவை கண்ட போது என்னுள் வந்த சோகம் மறு நொடியில் மறந்தது, மறைந்தது எப்படி?"

இப்படி ஒரு சூழலை நீங்களும் கடந்து வந்திருக்கலாம். அதும் நேற்று, இவர் கடந்து வந்தது போலவே... ஒருவரின் உணர்ச்சி ஒருசில நொடிகள் கூட தாக்குப்பிடிக்காத அளவுற்கு நாம் நமது உணர்ச்சிகள் சார்ந்து பலவீனம் அடைந்து வருகிறோமா?

போலியா?

போலியா?

அனிதாவின் பதிவிற்கு அல்லது ஒரு நடிகை பற்றிய பதிவான மீம் இவற்றுக்கு நாம் தரும் இருவேறுவிதமான உணர்ச்சி ரியாக்ஷங்களில் ஏதோ ஒன்று போலி. அல்லது இரண்டுமே கூட போலியாக இருக்கலாம்.

ஒன்று நாம் உணர்ச்சி ரீதியாக பலவீனம் அடைந்து வருகிறோம், அல்லது போலித்தனமாக ஃபேஸ்புக்கில் உலாவி வருகிறோம். இந்த இரண்டில் ஏதோ ஒன்று நூறு சதவீத உண்மையாகி வருகிறது என்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.

வாட்ஸ்-அப்!

வாட்ஸ்-அப்!

வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் மெசெஞ்சர் போன்ற செயலிகளில் தான் நாம் இன்று அதிகம் நமது நண்பர்களோடு உரையாடி, உறவாடி வருகிறோம். இதில் நம்மில் எத்தனை பேர் எமோஜிகளை சரியாக அனுப்புகிறோம்.

சிரிப்பே வராத ஜோக்குக்கு கூட சிரிப்பு எமோஜி அனுப்பிவிட்டு சீரியஸாக வேலை பார்த்துக் கொண்டிருப்பார்கள். காதல் உணர்ச்சி அளவில் வெளிப்படாத தருணத்திலும், காதலி செய்தி அனுப்பும் காரணத்தினால், ஒரு லவ் எமொஜி அனுப்பிவிட்டு வேறு வேலை பார்க்க துவங்கிவிடுவோம்.

இவை எல்லாம் நாமே நம்மை அறியாமல் உணர்ச்சி ரீதியாக நாம் செய்து வரும் தவறு என என்றாவது நீங்கள் உணர்ந்தது உண்டா?

பொய்!

பொய்!

2008ல் நடந்த ஆய்வொன்றில் மெசேஜ் டைப் செய்ய சோம்பேறித்தனம் பட்டுக்கொண்டும், போலியாகவும், பொய்யாகவும் தான் இந்த் எமொஜிக்களை வெளிப்படுத்துகிறார்கள் என அறியவந்துள்ளது.

Thank You -> Thank U -> TnQ -> _/\_ என ஒரு மாற்றம் வந்துள்ளதை நாம் காண முடிகிறது. இது இன்றைய மனிதன் முழுமையாக எதையும் செ மறுத்து, சோம்பேறியாக மாறி வருகிறான் என்பதற்கான எளிமையான எடுத்துக் காட்டு.

உணர்ச்சிகள்!

உணர்ச்சிகள்!

இந்த எமோஜி, ரியாக்ஷன் காரணத்தால் உணர்சிகளில் அப்படி என்ன தாக்கம் ஏற்பட்டுவிட போகிறது என நீங்கள் கருதலாம். ஆனால், உணர்ச்சிகள் என்பது மனநலம் சம்மந்தப்பட்ட ஒன்று.

இதில் ஏற்படும் பலவீனத்தை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளுதல் கூடாது. இது பின்னாளில் உங்கள் உறவுகளில் கூட தாக்கம் உண்டாக்கலாம்.

தவறான புரிதல்கள்!

தவறான புரிதல்கள்!

எழுத்து மூலமாக நாம் அனுப்பும் செய்தியே பல நேரங்களில் சரியான புரிதலை உருவாக்காது. சில சமயத்தில் செய்தியை ரிசீவ் செய்யும் நபர் நாம் எந்த உணர்ச்சியில் கூறினோம் என்பதை அறியாமல் அது தவறான புரிதலை கொடுக்கலாம்.

அதே போல தான் எமோஜிகளில் நாம் அனுப்பும் செய்திகளும், நக்கலாக செல்கிறோமா? சாதாரணமாக சொல்கிறோமா? என்ற சரியான புரிதலை அளிக்காமல் போக வாய்ப்புகள் உண்டு. இதனால் ஒரு உரையாடல் சீர்கெட்டு போகலாம்.

எமோஜியும், ஃபேஸ்புக் ரியாக்ஷனும் 90% போலியாக தான் வெளிப்படுகின்றன. இனிமேலும், வெறும் பொம்மைகளை அனுப்பி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளாமல், வாய் திறந்து பேசி உணர்சிகளை வெளிப்படுத்துவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Emoji's and Reactions: Are We Becoming Emotional Weaker?

Emoji's and Facebook Reactions: Are We Becoming Emotional Weaker?
Subscribe Newsletter