உலகமே இதுவரை நம்பி ஏமார்ந்து வந்த கொலம்பஸ் பற்றிய தவறான உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

கடற்பயணம் என்றாலே கொலம்பஸ் என்ற பெயர் மட்டுமே மனதில் உதிக்கும் அளவிற்கு மிகவும் பிரபலமானவர் கொலம்பஸ். ஓர் சிறந்த கடல் பயணியான இவர், ஒரு மோசமான கவர்னர், தன்னை நம்பிய அரசையே ஏமாற்றியவர். மதசார்புடன் திகழ்ந்த நபர்.

இவர் தான் புதிய உலகை கண்ட முதல் ஐரோப்பியர் என பலரும் பெருமையாக கருதுகிறார்கள். ஆனால், இவர் கண்டுபிடிக்கும் முன்னரே, ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தையதாக அமெரிக்காவை வேறொரு ஐரோப்பிய கடற் பயணி கண்டுபிடித்துவிட்டார் என்றும் சில தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.

இனி, கொலம்பஸ் பற்றி நாம் தவறாக நம்பி வரும் உண்மைகள் என கூறப்படும் தகவல்கள் குறித்து காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை பெயர்!

உண்மை பெயர்!

அனைவராலும் கிறிஸ்டோபர் கொலம்பஸ் என அறியப்படும் இவரது உண்மை பெயர் க்றிஸ்டோபோரோ கொலம்போ. இவர் தாய்மொழியில் இப்படி தான் அழைக்கப்படுகிறது இவரது பெயர். பிற மொழிகளில் இவரது பெயர் மாற்றி அழைக்கப்பட்டு, உண்மை பெயர் மறைந்து போனது.

Image Credit : Wikimedia Commons / Christopher Columbus

அழிவுகள்!

அழிவுகள்!

கொலம்பஸ் மேற்கொண்ட பல பயணங்கள் அழிவில் தான் முடிந்துள்ளன. ஒருமுறை ஸ்பெயினில் இருந்து இவர் பல விலைமதிப்பற்ற பொருட்களோடு புதிய வர்த்தக பாதையில் துவக்கிய பயணம் ஒரு விபத்தால் வெறும் கையோடு நாடும் திரும்பும் நிலையை உண்டாக்கியது.

Image Credit : Wikimedia Commons / Christopher Columbus

அசிங்கமான கவர்னர்!

அசிங்கமான கவர்னர்!

ஸ்பெயின் அரசரும், அரசியும் கொலம்பஸ்-ஐ சாண்டோ - டோமிங்கோ என்ற பகுதிக்கு கவர்னராக நியமித்தனர். சிறந்த கடல் பயணங்கள் மேற்கொண்ட கொலம்பஸ், ஒரு அசிங்கமான கவர்னராக நடந்துக் கொண்டார்.

இவரும், இவரது சகோதரரும் பெரும் லாபங்களை தாங்கள் எடுத்துக் கொண்டு ஏமாற்றி வந்தனர். இதனால் இவரது நியமனத்தை நிராகரித்து புதிய கவர்னரை நியமித்தார் ஸ்பெயின் அரசர்.

Image Credit : Wikimedia Commons / Christopher Columbus

மதச்சார்புடைய!

மதச்சார்புடைய!

கொலம்பஸ் மதச்சார்புடைய நபராக தான் திகழ்ந்தார். இவரது பயணங்களில் கண்டுபிடித்த இடங்களுக்கு மதம் சார்ந்த பெயர்களையே சூட்டினார்.

இவரது மூன்றாவது கடல் பயணத்தின் போது அட்லாண்டிக் கடல் அருகே வறண்டு காணப்பட்ட ஒரினோகோ (Orinoco) என்ற நதியை கண்டுபிடித்தார். உடனே இவர் தான் ஆதாம் ஏவாள் தோன்றிய பூஞ்சோலையை கண்டுபிடித்துவிட்டேன் என நம்ப துவங்கினார்.

Image Credit : Wikimedia Commons / Christopher Columbus

அமெரிக்காவை கண்டுபிடித்தார்...

அமெரிக்காவை கண்டுபிடித்தார்...

கொலம்பஸ் என்றாலே அமெரிக்காவை கண்டுபிடித்தார் என சிலர் குறியிட்டு கூறுவர். ஆனால், அவர் வட அமெரிக்காவில் கால் பதிக்கவே இல்லை. இந்தியா என கருதி அவர் கால் பதித்த இடம் கரீபியனை சேர்ந்த பஹமாஸ் தீவு ஆகும்.

தனது பயணங்களில் பல தீவுகளை கண்டுபிடித்துள்ளார் கொலம்பஸ்.

Image Credit : Wikimedia Commons / Christopher Columbus

புதிய உலகம்!

புதிய உலகம்!

இவரது பிரயாணங்களில் சிறந்ததாக கருதப்படுவது 1492ல் இவர் மேற்கொண்ட கப்பல் பயணம் தான், இந்த பயணத்தின் பெயர் புதிய உலகம். இந்த பயணத்தின் போது இவர் நான்கு இடங்களை கண்டுபிடித்தார்.

முதலில் இவர் கரீபியன் தீவையும், அதற்கடுத்து தென் அமெரிக்காவையும், பிறகு சென்ட்ரல் அமெரிக்காவையும் கண்டுபிடித்தார்.

Image Credit : Wikimedia Commons / Christopher Columbus

முதல் நபரா?

முதல் நபரா?

புதிய உலகில் கால் பதித்த முதன் ஐரோப்பியர் கொலம்பஸ் என பலரும் கருதுகிறார்கள். ஆனால், அதற்கு வெகு காலம் முன்னரே, லெய்ப் எரிக்ஸன் அமெரிக்காவை அடைந்துவிட்டார் என சில கடல் பயண ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஏறத்தாழ 1000 கி.பி-யிலேயே எரிக்ஸன் அவ்விடத்தை அடைந்துவிட்டார் என கூறப்படுகிறது. இதன்படி பார்த்தால், கொலம்பஸ் அடைந்ததற்கு ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னரே எரிக்ஸன் பயணித்துள்ளார்.

Image Credit : Wikimedia Commons / Christopher Columbus

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Christopher Columbus Facts That Everyone Gets Wrong!

Christopher Columbus Facts That Everyone Gets Wrong!