For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு ஆணாக வாழ்க்கையில் இதையெல்லாம் அனுபவித்திருக்கிறீர்களா?

ஆண்களின் உலகம் எப்படியிருக்கிறது அதனை நாம் எப்படி பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை பறைசாற்றிடும்

By Umesh
|

எல்லாருக்கும் பிடித்தமான வாழ்க்கை தான் அமைந்திருக்கிறது என்று யாருமே சொல்லமாட்டார்கள். அமைந்திருக்கிற வாழ்க்கை அதன் இயல்புகளோடு குறைகளோடு இயைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

பெண்களில் சிலர் ஆணாக பிறப்பது தான் நல்லது என்று சொல்லி கவலைப்படுவதை பார்த்திருப்போம். அவர்களுக்கான வாழ்க்கை பற்றிய ஒரு சுவாரஸ்யம் எப்போதும் நம் மீது ஒட்டிக் கொண்டேயிருக்கும். உண்மையில் ஆண்களின் உலகம் அவ்வளவு சுவாரஸ்யமானதா ? அதை விட என்னென்ன சின்ன விஷயங்களை அவர்கள் இழக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

ஆண்களே இக்கட்டுரை உங்களுக்கும் தான் தொடர்ந்து வாசிக்கையில் ஏதேனும் ஒரு வரியில் உங்களின் நினைவுகள் புதைந்திருக்கும். அட ஆமால்ல... நமக்கு கூட இப்டித்தான என்று யோசிக்கத் தோன்றும்.

Are You Understanding the world which every men can live

ரிலாக்ஸ்.... நினைவுகளை தட்டியெழுப்பும் நேரமிது. படிக்க ஆரம்பியுங்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குழந்தைப் பருவம் :

குழந்தைப் பருவம் :

நம் குழந்தைப்பருவத்திலிருந்தே செல்லலாம். மிகச் சீக்கிரத்திலேயே குழந்தைப்பருவத்தை முடித்துக் கொண்டுவிடுவோம். ஆம், நமக்கு எப்போதும் ஈடுபாடு இருப்பதில்லை. இன்னொருவர் வந்து நம்மை குழந்தைத் தனமாக ட்ரீட் செய்வதையும் ஒரு போதும் விரும்புவதில்லை.

உடன் அக்கா, தங்கை யாரேனும் இருந்தால் முடிந்தது கதை... நம்மை அப்போதே பொறுப்பு மிக்கவர்களாக மாற்றிவிடுவார்கள்.

விளையாட்டு :

விளையாட்டு :

அவர்களுக்கு அதாங்க நம்ம அப்பா அம்மாக்கு பையன்னா வீட்ல உட்கார்ந்து விளையாடுறது தப்பு. தெருவுலயே சுத்தணும் வெயில்ல காஞ்சு கருவாடா வரணும். வெளிய நம்மல பொழந்து கட்டினாலும் உள்ளுக்குள்ள சந்தோசமத்தான் இருப்பாங்க...

நம்மலா வீட்டுக்குள்ள அமைதியா விளையாண்டாலும். ஆம்பளப்பய என்னடா உக்காந்து விளையாடிட்டு இருக்கன்னு ஒரு கேள்வி..இல்ல நான் தெரியாமத்தான் கேக்குறேன் ஏன் எங்களுக்கெல்லாம் கால் வலிக்காதா? இல்ல நாங்க எல்லாம் உக்காந்து விளையாடக்கூடாதா??

இரவுத் தூக்கம் :

இரவுத் தூக்கம் :

உங்கள்ல எத்தன பேருக்கு நைட்டு அம்மா பக்கத்துல தூங்கணும்னு ஆசையிருக்கு? எனக்கும் தான் பாஸ்.... யூ.கே.ஜி முடிஞ்சு ஃப்ர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் அடியெடுத்து வைக்கும் போதே... நீ பிக் பாய்னு சொல்லி தனியா இல்லன்னா ஒரு மூளைல படுக்க வச்சிருவாங்க. அழுது அடம் பிடிச்சு நைட் அம்மா பக்கத்துல இடம் புடிச்சு படுத்தாலும் காலைல எந்திரிச்சு பாத்தா வாசக்கதவு பக்கதுல கிடப்போம்.

பயம் :

பயம் :

ஆண் குழந்தைன்னா எப்பவும் எதுக்கும் தைரியமா இருக்கணும்னு தான் எதிர்ப்பார்ப்பாங்க அத விட அவங்களே முடிவும் பண்ணிடுவாங்க. அம்மா இருட்டுல போக பயமா இருக்குன்னு சொன்னாலும் ஆம்பளப்பய உனக்கென்னடா பயம்னு ஒரு கேள்வி வேற..

ஆம்பளைங்களுக்கு மட்டும் இருட்டுனா கலர் கலரா தெரியுதா இல்ல நான் தெரியாமத்தான் கேக்குறேன் எங்கள மட்டும் பேய் தூக்கிட்டு போகாதா.

ரெண்டு ரூவா காபித்தூள் :

ரெண்டு ரூவா காபித்தூள் :

பயங்கர காண்டான விஷயம் இது தான். வீட்ல இருந்தாலே நம்ம பலசரக்கடைக்கு போகத்தான் வெயிட்டு பண்ணிட்டு இருக்கோம்ன்ற மாதிரி தம்பி இந்த ரெண்டு ரூபாய்க்கு காபித்தூள் வாங்கிட்டு வந்திடு, ஒரு பால் பாக்கெட், அரைகிலோ சக்கரை, ஒரு அப்பளக்கட்டுன்னு ஒரு வீட்டுக்கும் கடைக்கும் ஒரு மினி மாரத்தனே நடத்திடுவாங்க.

சரி ஏதோ கடைக்கு கொடுத்து அனுப்புற காசுல மிச்சம் கொடுக்கிறது எல்லாம் நமக்குன்னு ஒரு டீலிங் இருக்குறனால போனா போகுதுன்னு கடைக்குப் போக சம்மதிச்சா அநியாயம் பண்றாங்களே.

சாப்பாடு :

சாப்பாடு :

கொஞ்சம் நிம்மதி தரக்கூடிய விஷயம்னா அது இது தாங்க. நமக்கு புடிச்ச சாப்பாடு... நமக்கு பிடிக்குமேன்னு தேடித் தேடி பண்ணி வைப்பாங்க. இதுலயும் ஒரு தில்லாங்கடி வேலைய பண்ணுவாங்க ஆம்பளப்பய நல்லா சாப்டு நல்லா சாப்டுன்னு தட்டு தட்டா இறக்குவாங்க பாக்கணுமே .

பிடிக்கும் தான் அதுக்காக வயித்துக்குள்ள என்ன அண்டாவையா வச்சிருக்கேன் வரிசையா இறக்குறதுக்கு. ஒரு மனசாட்சி வேணாம்.

 பிக்கப் ட்ராப் :

பிக்கப் ட்ராப் :

நம்மல ஒரு டிரைவர் ரேஞ்சுக்கு தான் நடத்துவாங்க. அப்பதான் ஓஞ்சு வந்து வீட்ல வந்து உக்காந்திருப்போம். ஐஞ்சு நிமிஷம்டா போய்ட்டு வந்திடலாம்... ப்ளீஸ்டான்னு கெஞ்சுவாங்க சரி போய்த் தொலையலாம்னா கிளம்பினா ஊரையே சுத்தவச்சிட்டு நொந்து நூடுல்ஸாகித் தான் வீட்டுக்கு கூட்டிட்டு வருவாங்க. பையன் டக்குன்னு போய்ட்டு வந்திடுன்னு ஒரு டயலாக் வேற எக்ஸ்ட்ரா சேத்துப்பாங்க.

நமக்கெல்லாம் டயர்ட் ஆகவே ஆகாதுன்னு நினைச்சிருக்கிறத தயவு செஞ்சு கொஞ்சம் மறந்திருங்க.

ப்ரோப்போசல் :

ப்ரோப்போசல் :

ஏதோ லவ் பண்றதுல பசங்க தான் கில்லி... அவங்க தான் பொண்ணுங்க பின்னாடி சுத்துவாங்க, கிண்டல் பண்ணுவாங்க, தைரியமா டக்குன்னு ப்ரோப்போஸ் பண்ணுவாங்கன்னு சொல்றீங்களே ஒரு நாளாவது அந்த டக்குன்னு ப்ரோப்போஸ் பண்றதுக்கு முன்னாடி எப்படியெல்லாம் பயந்து சாறோம்னு தெரியுமா?

ஏய்... கேர்ல்ஸ் நீங்களும் ப்ரோப்போஸ் பண்ணிதான் பாருங்களேன்.

உருப்படாதவன் :

உருப்படாதவன் :

படிச்சு முடிச்சதும் உடனே வேலை கிடச்சிறணும் கத்தை கத்தையா சம்பாதிச்சு கொடுத்திரணும். எங்களுக்கான ட்ரீம் எதுவுமே இருக்காதா? அதுக்கு பின்னாடி நம்ம போகவே கூடாதுன்னு எந்த கல்வெட்டுல எழுதி வச்சிருக்காங்கன்னு தெரியல.

என் ட்ரீம் இது.... அத அடையிறதுக்கு கொஞ்சம் டைம் கொடுங்கன்னு கேட்டா எங்களுக்கு கிடைக்கிற பேரு ‘உருப்படாதவன்'.

பொறுப்புகள் :

பொறுப்புகள் :

நம்ம செட்டில் ஆகுறோமோ இல்லையோ நம்மளோட பிறந்தவங்க,அம்மா அப்பான்னு எல்லாருடைய லைஃபலயும் நம்ம பங்கு இருக்கணும்.

சத்தியமா இந்த பொறுப்புகள் எல்லாம் எனக்கு சுத்தமா அலர்ஜி பாஸ்... ப்ளீஸ் புரிஞ்சுக்கங்க

திருமணம் :

திருமணம் :

வெளிய புலி வீட்டுக்கு எலின்றது தான் இங்க. வெளிய என்னதான் கெத்தா காலர தூக்கிவிட்டுட்டு திரிஞ்சாலும் கல்யாணம்ன்றது எங்களுக்கு கொஞ்சம் பயம் தரக்கூடிய விஷயம் தான்.

உங்கள மாதிரி தான் ஜாலியா சுத்திட்டு இருந்தோம். கல்யாணம் ஆனதும் உடனே பொறுப்பா பொண்டாட்டி புள்ள குட்டிய பாத்துக்கோன்னு சொன்னா என்னங்க அர்த்தம்.

அப்பா :

அப்பா :

நம்மலோட அப்பாக்கும் சரி நம்ம குழந்தைக்கும் சரி நம்மல பாத்தாலே ஜோக்கர் மாதிரியே தெரியும் போல. இதெல்லாம் எங்க உருப்படப்போகுது... பொழைக்கிற வழிய பாருடான்னு இங்கன அப்பா கத்த... அப்பா ஒரு பலூன் கூட ஊதத் தெரியாதா? நீயெல்லாம் எப்பிடி மூச்சு விடுறன்னு அசால்டா கேக்குது என் பொண்ணு.

எங்கப்பனாச்சும் பொழைக்கிற வழிய பாருடான்னு திட்டினாரு... ஆனா என் பொண்ணு மூச்சு விடக்கூட லாயிக்கில்லன்னு முடிவு பண்ணிடுச்சு.

ராசாத்தியே...

ராசாத்தியே...

அதாங்க வொய்ஃப். நிமிஷத்துக்கு ஒரு தடவ போன் பண்ணிட்டு ஏங்க குழம்பு வைக்கவா? சாம்பார் வைக்கவா? ன்னு கால் பண்றது. ஏம்மா ஆபிஸுக்கு வேலை செய்ய வர்றோமா இல்ல உன் போன் அட்டெண்ட் செய்ய வர்றோமாம்மா....

அதவிட இன்னக்கி என்ன நாள்னு சொல்லுங்கனு ஆசையா கேட்டாலே அடி வயித்துல இருந்து ஒண்ணு கிளம்பும் பாருங்க....

எப்போ வரேன்னு சொன்னீங்க... இன்னுமா வந்துட்டு இருக்கீங்கன்னு ஒரு மிரட்டல் வந்தா அன்னிக்கி வெளிய சாப்ட்டு தெம்பா போறது தான் பெட்டர். பேசியே நம்மல சாவடிச்சிருவாங்க.

கண்மணியே... அமுதே... மகளே :

கண்மணியே... அமுதே... மகளே :

லைஃப்ல ரொம்ப என்ஜாயபிள் மொமண்ட் இது தாங்க. அப்டியே என்னைய உரிச்சு வச்ச மாதிரி ஒரு உருவம் என்னையவே சுத்தி சுத்தி வர்றது எவ்ளோ கெத்தா இருக்கும் தெரியுமா.

அவளுக்கு அப்பா நான்னா ஹீரோ. சிரிக்காதீங்க... இப்பதான் அப்டி. அவ கொஞ்சம் வளந்துட்டான்னா டேடி... நீ ஜீரோதானன்னு கேக்க ஆரம்பிச்சுடுவா.

எந்த அப்பாவாலயும் குழந்தையோட குழந்தையா லைஃப் ஃபுல்லா ட்ராவல் பண்ண முடியுறதில்ல. பொறுப்புன்ற பேர்ல, அக்கறைன்ற பேர்ல கொஞ்சம் விலக ஆரம்பிக்க அதுவே மெயிண்டெயின் ஆகுது.

ஒரு கட்டத்துல நான் அப்டிதான் போல... அப்பான்னா அப்டிதான் நடந்துக்கணும்னு நம்மளோட மைண்ட் செட்டே மாறிடுது.

பூச்சாண்டி :

பூச்சாண்டி :

வேணும்னே நம்ம மேல ஒரு மொரட்டுத்தனமானவன்ற மாஸ்க்க மாட்டி விட்டறது. நான் மொரட்டு பீஸில்ல காமெடி பீஸ்ன்னு தெரியவர்றப்ப தான் இருக்கு கச்சேரி.

அப்பான்னு சொன்னாலே குழந்தைங்க பயந்து நடுங்குற மாதிரி... அப்பா அடிப்பாரு, அப்பா கத்துவாரு... அப்பாட்டா சொல்லவா... இரு அப்பா வரட்டும்னு எதோ பூச்சாண்டிய காட்டி புள்ளைய மிரட்டுற மாதிரி நம்மல டீல் பண்றது.

அப்பா :

அப்பா :

வாழ்க்கையில எல்லா கடமையும் முடிச்சிட்டு ஃப்ரீயா இருக்குற என் அப்பாவ பாத்தா எனக்கு கொஞ்சம் பொறாமையாத்தான் இருக்கு.

அம்மா இருக்குற வரைக்கும் வீராப்பா திரிஞ்சாரு, இப்போ உடம்பும் மனுசும் ஒடுங்கி .... தன்மானத்தையும் விட்டுக் கொடுக்க முடியாம வீராப்ப மெயிண்டெயின் பண்ணமுடியாம தவிக்கிறத பாத்தாலே வலிக்கும்.

ஒரு நாளும் அப்பாவ பாராட்டினதில்ல, நன்றி சொன்னதில்ல, சாரி சொன்னதில்ல சத்தியமா அவர் எதிர்ப்பார்த்திருக்க மாட்டாரு. ஆனா இப்பத் தோணுது அப்பாவ கட்டிப்பிடிச்சு ஐ லவ் யூப்பான்னு சொல்லணும்.

ஆனா இது கண்டிப்பா நடக்காது. அதுக்கான ஸ்பேஸ் அவரும் கொடுக்க மாட்டாரு

நானும் கீழ இறங்கி போக முடியாது அந்த சூழ்நிலை நம்ம வீடுகள்ல உருவாக்கி கொடுக்கல.

மச்சி... :

மச்சி... :

நம்ம பலமும் இவங்க தான் நம்மளோட பலவீனமும் இவங்க தான். நம்மள சுத்தியிருக்கிற ப்ரண்ட்ஸத்தாங்க சொல்றேன். கொடுக்கல் வாங்கல்லயும் சரி, விடுற மாப்ள...பாத்துக்கலாம்னு தோல் தட்டுறதுலயும் சரி நமக்கான ஒரு எமோஷனல் சப்போர்ட் அவங்க தான்.

வீட்டுல சொல்ல முடியாத விஷயத்தக்கூட அவங்க கிட்ட மனச விட்டு பேச முடியும்.

கிண்டலடிச்சு சிரிக்கவும், சரக்கடிச்சு மனச தேத்தவும் அவங்க தான் ஒரே வழி.

எப்ப பாத்தாலும் ஃபிரண்ட்ஸோட ஊர் சுத்துறான்ற புராணத்த இனிமேலாவது பாடாதீங்க மக்கா....

ஆணாகிய நான்...

ஆணாகிய நான்...

ஒரு ஆணுக்குரிய வெளித் தோற்றத்தை தான் நீங்க பாத்துட்டு எங்களப் பத்தின ஒரு பிம்பத்த தான் நம்பிட்டு இருக்கீங்க. நீங்க பாக்குற ஆண்களின் உலகமும் நாங்க வாழ்ந்துட்டு இருக்குற உலகமும் வேற வேற.

ஆண் குழந்தைய சின்ன வயசுல இருந்து விலகித்தான் பாக்குறீங்க. அவன் எல்லாத்தையும் சமாளிப்பான்னு நீங்க நினைக்கிறத நாங்க ஒண்ணும் ஈஸியா செஞ்சு முடிக்கிறதில்லன்ற ஒரு விஷயத்த மட்டும் நீங்க உணர்ந்தா போதும்.

தனியா பொறந்து தனியா வளர்ந்து தனியாவே சாகுற மாதிரியான ஒரு எண்ணம் எல்லா ஆண்கள் மனுசுலயும் இருக்கத்தான் செய்யுது.

இதே அனுபவங்கள் உங்களுக்கும் இருந்தா கமெண்ட் பண்ணுங்க உங்களோட கருத்துக்களையும் பகிர்ந்துக்கோங்க... ஒரு ஆணுக்கு ஆண் தானே சப்போர்ட் பண்ணனும் Cool

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: ஆண்கள் insync pulse
English summary

Are You Understanding the world which every men can live

Are You Understanding the world of Men.
Story first published: Saturday, November 25, 2017, 14:26 [IST]
Desktop Bottom Promotion