மனைவி கற்பழிக்கப்பட்ட பின்... திசை மாறிய வாழ்க்கை...- நான் கடந்து வந்த பாதை #1

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய ஊடக உலகில் நாம் தினந்தோறும் இப்படி ஒரு செய்தியை பார்க்க முடியும், மூன்று வயது பெண் குழந்தை, 12 வயது சிறுமி, கல்லூரி , வேலைக்கு சென்ற பெண் மாயம், கற்பழிக்கப்பட்டு, அழுகிய நிலையில் நிர்வாண உடல் கண்டெடுக்கப்பட்டது.

A Husband Shared Tweets On What Happened After His Wife Was Raped

கற்பழிப்பு என்பது நமக்கெல்லாம் ஒரு செய்தி. ஆனால், அந்த கொடுமைக்கு ஆளான அப்பெண்ணின் வாழ்வில் எப்படிப்பட்ட தாக்கத்தை, மாற்றத்தை உருவாக்குகிறது என்பது நம்மால் ஒரு சதவிதம் கூட உணரவும் முடியாது, யூகிக்கவும் முடியாது.

அப்படி ஒரு சம்பவம் தனது ஆருயிர் காதலிக்கு 19 வருடங்களுக்கு முன் நடந்ததை ட்விட்டரில் பகிர்ந்து தனது ஆதங்கத்தையும், கற்பழிக்கப்பட்ட ஒரு நபரின் வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது என்ற நிலையை உணரவித்துள்ளார் ஒரு கணவர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதுநாள்வரை...

இதுநாள்வரை...

என் வாழ்வில் இதுவரை யார் ஒருவரும் தனது வாழ்க்கையில் தான் கண்ட, தனக்கு நேர்ந்த கற்பழிப்பு சம்பவத்தை பற்றி விவாதித்து நான் கண்டதில்லை. ஆனால், நான் இப்படி ஒரு சம்பவத்தில் வாழ்ந்தவன். அதை இங்கு கட்டாயம் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என உணர்கிறேன்.

ஜூலை 10, 1998...

ஜூலை 10, 1998...

எனது பிறந்தநாளுக்கு முந்தைய நாள். நான் எனக்கு தெரிந்தவர்களுடன் வெளியே சென்றிருந்தேன். அதிகளவிலான மது மற்றும் விளையாட்டில் மூழ்கியிருந்தேன்.

அந்த தருணத்தில் எனது காதலி என் பிறந்த நாளுக்கு ஆச்சரியமூட்டும் வகையில் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தார். அதை பற்றி அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

நள்ளிரவு!

நள்ளிரவு!

நள்ளிரவு இரண்டு மணி அளவில் தான் நான் திரும்புவேன் என நினைத்திருந்தேன். ஆனால், நான் அளவுக்கு அதிகமாக குடித்திருந்ததால் வாகனம் ஓட்ட வேண்டும் என்றிருந்தது.

நானும் எனது காதலியும் கிரீன்பெல்ட் எனும் இடத்தில் தங்கியிருந்தோம். அங்கு நிறைய போலீஸ் இருந்ததாலும், நான் மதுவருந்தி கார் ஓட்டும் நிலையில் இருந்ததாலும், சற்று அச்சத்துடன் இருந்தேன்.

காரிலேயே இருந்தேன்!

காரிலேயே இருந்தேன்!

கீழே இறங்கினால் மாட்டிக் கொள்வோம் என்ற அச்சத்தில் காரிலேயே முப்பது நிமிடங்கள் இருந்தேன். மது போதையில் நான் அப்படியே உறங்கிவிட்டேன்.

அதிகாலை நான்கு மணியளிவில் தான் கண்விழித்தேன். எனது காதலியின் சகோதரி கால் செய்துக் கொண்டிருந்தால். கால் அட்டன்ட் செய்த போது "நீ எங்கே இருக்கிறாய்..? " என உரக்க கத்தினாள்.

"நான் இங்கே தான் இருக்கிறேன்.." என கூறினேன். போலீஸ் கார்கள் இன்னும் எனது வீட்டின் அருகே அங்கேயே தான் இருந்தன.

பதட்டம்!

பதட்டம்!

பதட்டத்துடன் நான் வேகமாக படிக்கட்டுகளில் ஏறி ஓடினேன். என் காதலியின் உடைகள் ஆங்காங்கே சிறு துண்டுகளாய் கிடந்ததை பார்த்தேன். எனது இதயத்துடிப்பு பன்மடங்கு அதிகரித்தது.

வீட்டின் முன்னே போலீசார் கைரேகை அச்சு எடுத்துக் கொண்டிருந்தனர். நான் எனது ஐ.டியை காண்பித்துவிட்டு உள்ளே நுழைந்தேன்.

கருவை போல அவள்...

கருவை போல அவள்...

கருவை போல சுருண்ட நிலையில் என்னவள் படுத்திருந்தாள். குளியலாடை அவள் மீது போர்த்தப்பட்டிருந்தது. மெல்ல அவள் அருகே நெருங்கினேன். அவள் உடனே உடலை வெடுக்கென குலிக்கினாள் அச்சம் கலந்த பதட்டத்துடன்.

என்ன ஆயிற்று என நான் கேட்ட கேள்விக்கு அவளிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை. அழுதுக் கொண்டே இருந்தாள். அவளது சகோதரி தான் படுக்கை அறைக்கு அழைத்து சென்று செய்தியை கூறினார்.

நடந்தது என்ன?

நடந்தது என்ன?

வீட்டிற்கு வந்ததும் கதவில் சாவியை மாட்டிய அவள், யாரோ படிகளில் ஏறி வருவதை உணர்ந்தாள். திடீரென உள்ளே நுழைந்த அவன் என் காதலியை பின்புறமாக தடுத்து தாக்கினான்.

அவள் எதிர்ப்பு காட்டியதும் அவளை படிகளில் தள்ளி துன்புறுத்தி கற்பழித்துள்ளான். பிறகு அவளது பர்ஸ் மற்றும் கார் சாவியை திருடி சென்றுவிட்டான் என்ற செய்தி கிடைத்தது.

உடைந்து போனேன்!

உடைந்து போனேன்!

இந்த செய்தி அறிந்ததும் மனதளவில் மிகவும் உடைந்து போனேன். அவளை அரவணைக்க நெருங்கினேன். அவள் கத்தினாள். அவள் அந்த சம்பவத்தை விட்டு இன்னும் வெளிவரவில்லை என உணர்ந்தேன்.

போலீஸிடம் நடந்ததை கூறினேன். என்னால் மூச்சுக் கூட விட முடியவில்லை. என்னவள் பாதிக்கப்பட்டுள்ளாள். இதை தடுத்து நிறுத்தவோ, நடந்திருக்காமல் இருக்கவோ நான் அங்கு இல்லாமல் போனேன்.

வலி மிகுந்த நாட்கள்...

வலி மிகுந்த நாட்கள்...

என் வாழ்வில் என்றும் இவ்வளவு பெரிய வலியை நான் உணர்ந்ததே இல்லை. அவள் கற்பழிக்கப்பட்டிருக்கக் கூடாது. நான் அங்கிருந்திருக்க வேண்டும். இதில் என் தவறும் இருக்கிறது.

அவளது சகோதரி தான் அவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உதவினால். காரில் மிகவும் அமைதியாக பயணித்தோம். எல்லா பரிசோதனைகளும் முடியும் வரை காத்திருந்தோம்.

என்னை நெருங்கவிடவில்லை...

என்னை நெருங்கவிடவில்லை...

நான் வீடு திரும்பிய போது, அவளது பெற்றோர் மற்றும் பிற சகோதரிகளும் வந்திருந்தனர். அனைவரும் அவளை அன்புடன் சூழ்ந்திருந்தனர். ஆனால், அவள் என்னை மட்டும் அவளை நெருங்கவிடவில்லை.

உடைந்த மனதுடன் நான் அங்கே அமர்ந்திருந்தேன். நான் அவளை மென்மையாக தொட முயன்றாலும் கூட அவள் அழ துவங்கினாள்.

வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. அவன் பிடிப்படவும் இல்லை.

விலகினாள்!

விலகினாள்!

பிறகு, அவள் அவளது சகோதரியுடன் சேர்ந்த தங்க என்னை விலகி சென்றாள். அவள் என்னுடன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இரண்டு வாரங்கள் ஓடின.

ஒரு நாள் போலீஸ் எங்களை அழைத்து குற்றவாளியை அடையாளம் காட்ட கூப்பிட்டனர். அதுவும் மிகவும் வலி மிகுந்த தருணமாக அமைந்தது. பலமுறை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றது தான் மிச்சம். எந்த பயனும் இல்லை.

கடந்தோடிய நாட்கள்...

கடந்தோடிய நாட்கள்...

சில காலம் கழித்து கார் கிடைத்தது. ஆனால், அதை பயன்படுத்த அவள் விரும்பாததால். அதை விற்றுவிட்டோம். 18 மாதங்கள் ஓடின, நரகமாக திகழ்ந்தது என் வாழ்க்கை. அவளை ஒருபோதும் நான் செக்ஸ்-காக அழைக்கவே இல்லை. அவள் அதை விரும்பமாட்டாள் என நான் உணர்ந்தேன்.

18 மாதங்கள் கழித்து நான் அவளை அணைக்க நெருங்கினேன்.கதறி அழ துவங்கினாள். எந்தவிதமான சிகிச்சைக்கும் அவள் ஒத்துழைக்க வில்லை.

இரண்டு வருடங்களுக்கு பிறகு...

இரண்டு வருடங்களுக்கு பிறகு...

இரண்டு வருடங்களுக்கு பிறகு நாங்கள் பிரிந்தோம். அந்த சம்பவத்திற்கு முன்னதாக நாங்கள் மூன்று வருடங்களாக ஒன்றாக தான் இருந்தோம். 19 வருடங்கள் கடந்த பிறகும் அந்த நரக வேதனை மட்டும் விலகவில்லை.

நான் அவளை காக்க அங்கு இல்லாமல் போனேன், நான் அங்கே இல்லாமல் போனது வருத்தமாக இருந்தது. குடி, புகை, ஆட்டம் என்று நான் இருந்தது தான் இத்தனைக்கும் காரணம்.

குற்றம் புரிந்தவர்!

குற்றம் புரிந்தவர்!

நீதி கிடைத்தது, அந்த குற்றவாளி சிக்கினான். அவன் மேலும் பல பெண்களை கொடுமைப்படுத்தியது தெரியவந்தது. அவனை என் கைகளால் கொல்ல வேண்டும் என எண்ணினேன். சட்டம் அதை செய்யும் என கருதுகிறேன்.

என் மனைவி!

என் மனைவி!

அவள் எனது காதலி மட்டுமல்ல. அந்த சம்பவம் நடந்த அடுத்த மாதமே நான் அவளை திருமணம் செய்துக் கொண்டேன். அந்த சம்பவத்தின் தாக்கம் எங்கள் திருமண வாழ்வை உடைத்து. அவளால் அந்த சம்பவத்தில் இருந்து கடைசி வரை வெளிவர முடியவே இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

A Husband Shared Tweets On What Happened After His Wife Was Raped

A Husband Shared Tweets On What Happened After His Wife Was Raped!
Subscribe Newsletter