கள்ளக் காதலனுடன் உல்லாசமாக இருக்க Face/Off லெவலில் திட்டமிட்ட கொடூர மனைவி!

Posted By:
Subscribe to Boldsky

ஒரு குடும்பமே அலறியடித்துக் மருத்துவமனைக்கு கொண்டு ஓடுகிறது. ஏறத்தாழ ஐந்து இலட்ச ரூபாயை செலவு செய்து ஆசிட் காரணத்தால் ஏற்பட்ட விபத்தில் இருந்து தனது உறவினரை காப்பாற்ற பிளாஸ்டிக் சர்ஜரிக்கு செலவு செய்கிறது. அந்த விபத்துக்குள்ளான நபர் மீது அளவுக் கடந்த அக்கறை செலுத்துகிறது. முகம் சரியாக வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

ஒரு சில நாட்கள் கழிந்தன, ஆசிட் வீச்சுக்கு பிறகு அந்த உறவினரின் நடவடிக்கை, உணவுப் பழக்கம், உறவினர்களை கண்டறிவதில் குழப்பம் என பல பிரச்சனைகள். இல்லை, இவர் தங்கள் உறவினராக இருக்க வாய்ப்பே இல்லை. கண்கள் நன்கு தெரிகிறது ஆனால், ஒரு உறவினரை கூட சரியாக அடையாளம் காட்ட அவரால் முடியவில்லை.

காரணம் என்ன? குளறுபடி நடந்தது எங்கே? உண்மையில் சிகிச்சை பெற்று வருபவர் யார்? கிடைத்த விடையை வைத்து ஹாலிவுட் லெவலில் ஒரு க்ரைம் த்ரில்லர் படமே எடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நர்ஸ்!

நர்ஸ்!

ஆசிட் அட்டாக்குக்கு ஆளான நபராக கருதப்படும் மனைவி சுவாதி ரெட்டி. அவர் தெலுங்கானாவில் நர்ஸ் வேலை செய்து வரும் 27 வயது நிரம்பிய பெண். உண்மையில் ஆசிட் வீச்சில் சிக்கியது அவரது கணவர் அல்ல. கள்ளக் காதலர். எதற்காக இப்படி கணவரின் முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய சொன்னார்? அப்போது அவரது கணவர் எங்கே இருக்கிறார்?

பிளாஸ்டிக் சர்ஜரி!

பிளாஸ்டிக் சர்ஜரி!

மருத்துவமனையில் சுதாகர் ரெட்டி என்ற பெயரில் அந்நபரை அனுமதித்தப் போது அவர் முகத்தில் ஆழமான ஆசிட் காயங்கள் ஏற்பட்டிருந்தன. முகத்தின் அமைப்பை மீண்டும் பழையப்படி கொண்டு வர வேண்டும் என்றால் பெரிய அளவிலான பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறினார்கள்.

ஐந்து இலட்சம்!

ஐந்து இலட்சம்!

இந்த விபத்தின் செய்திக் கேட்டு தான் உறவினர்கள் அலறியடித்து ஓடி வந்தனர். அந்த பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய தான் உறவினர்கள் ஐந்து இலட்சம் ரூபாய் கொடுத்தனர். ஆனால், இதன் பின்னணியில் திடுக்கிடம் சம்பவங்கள் நடந்திருந்தது அவர்களுக்கு அப்போது தெரியாது.

சுதாகர் ரெட்டி!

சுதாகர் ரெட்டி!

சுவாதிக்கும் (27) சுதாகர் ரெட்டிக்கும் (32) திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. இதற்கு இடையே ராஜேஷ் எனும் நபருடன் சுவாதிக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதன் விளைவு தான் இந்த ஹாலிவுட் லெவல் க்ரைம் பிளான்.

சொத்துக்காக!

சொத்துக்காக!

சுவாதிக்கு ராஜேஷும் வேண்டும், சுதாகர் ரெட்டியின் சொத்துக்களும் வேண்டும். அதற்கு ஒரே வழி இது தான். தனது கணவனின் சொத்துக்களுடன், கள்ளக் காதலனுடன் சேர்ந்த வாழ வேண்டும் என்றால் அவர்களுக்கு தேவை ராஜேஷ் அல்ல, ராஜேஷின் முகம் மட்டும் தான்.

நவம்பர் 27!

நவம்பர் 27!

கடந்த நவம்பர் 27ம் தேதி, சுவாதி மற்றும் அவரது கள்ளக் காதலன் கணவர் ராஜேஷிற்கு அனஸ்தீஷியா மற்றும் விஷம் கொடுத்து சுயநினைவு இல்லாத போது கொன்றுவிட்டனர். மேலும், அந்த உடலை ஓரிடத்தில் வைத்து எரித்தும்விட்டனர். இது தான் இவர்களது முதல் திட்டம். இதை தொடர்ந்து இரண்டாம் கட்ட திட்டம் நிறைவேற்றப்பட்டது.

ஆசிட் வீச்சு!

ஆசிட் வீச்சு!

பிறகு, ராஜேஷின் முகம் கள்ளக் காதலனுக்கு கொடுக்க வேண்டும் என்றால் ராஜேஷின் முகத்தை சிதைக்க வேண்டும். அதற்காக தான் ஆசிட் வீச்சு சம்பவம் நடந்துள்ளது, பிறகு சுதாகர் ரெட்டியின் முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து விட்டால் யாருக்கும் தெரியாமல் ஊரார் முன் சுகபோகமாக வாழலாம் என்பது இந்த கள்ள காதலர்களின் திட்டம்.

அழைப்பு!

அழைப்பு!

எதிர்பாராத விதமாக சுதாகர் ரெட்டிக்கு ஆசிட் விபத்து ஏற்பட்டுவிட்டது. அவரது முகம் முற்றிலும் சிதைந்து போய்விட்டது, உடனே மருத்துவமனைக்கு வாருங்கள் என உறவினர்களுக்கு கால் செய்து கூறியுள்ளார் சுவாதி. அங்கே ஐந்து இலட்ச ரூபாய் செலவில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது.

வினோதம்!

வினோதம்!

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து ராஜேஷ் மெல்ல, மெல்ல இயல்பு நிலைமைக்கு திரும்பி வந்தார். அப்போது தான் உறவினர்களுக்கு சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது. அவர்களுக்கு இவன் தங்கள் மகன் மகன் போல இல்லை என எண்ணினார்கள்.

ஆதாரங்கள்!

ஆதாரங்கள்!

ஒன்று!

முதலில் உறவினர்களுக்கு சந்தேகம் எழ காரணமாக இருந்தது சுதாகர் ரெட்டி இறைச்சி விரும்பு சாப்பிடும் நபர். மருத்துவமனையில் மட்டன் சூப் கொடுத்த போது, நான் வெஜிடேரியன் இதெல்லாம் வேண்டாம் என கூறியதை உறவினர்கள் கண்டுவிட்டனர்.

ரெண்டு!

மேலும், சுதாகர் ரெட்டியை காண வந்த உறவினர்களை ராஜேஷால் அடையாளம் காண முடியவில்லை. இங்கே தான் சந்தேகம் வலுத்தது. மேலும், முகம் தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது, உடல் அமைப்பு எப்படி மாறும் என்பதையும் கவனித்தனர். உடனடியாக சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸில் புகார் கூறினார்கள் சுதாகர் ரெட்டியின் உறவினர்கள்.

விசாரணை!

விசாரணை!

போலீஸ் விசாரணையில் சுவாதி எப்படி கொலை செய்தோம், நடந்தது என்ன? எங்கே எரித்தோம் என அனைத்து உண்மைகளையும் கூறிவிட்டார். மேலும், கைரேகை பரிசோதனையில் சுதாகர் முகத்துடன் மருத்துவமனையில் இருப்பது ராஜேஷ் என்பதும் ஊர்ஜிதம் செய்யப்பட்டது. உடனடியாக போலீஸ் சுவாதியை கைது செய்தது.

எப்படி காதல் வந்தது?

எப்படி காதல் வந்தது?

சுவாதி நர்ஸ், ராஜேஷ் பிசியோதெரபிஸ்ட். ஒருமுறை கழுத்து வலி என சிகிச்சைக்கு ராஜேஷிடம் சென்றுள்ளார் சுவாதி. சிகிச்சை பெற சென்ற இடத்தில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இது கணவருக்கு தெரியக் கூடாது. ஆனால், தனியாக ஓடிவிட்டால் சொகுசாக வாழ முடியாது. எனவே தான் இந்த ஹாலிவுட் லெவல் க்ரைம் பிளான் தீட்டியுள்ளனர் இந்த கள்ளக் காதல் ஜோடி.

ராஜேஷ்!

ராஜேஷ்!

ராஜேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால், சிகிச்சைகள் முடிந்தவுடன் ராஜேஷும் கைது செய்யப்படுவார் என ஐதராபாத் போலீசார் கூறியிருந்தனர். அவரையும் நேற்று காலை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் செய்துள்ளனர்.

இந்த வழக்கு ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கள்ளக் காதலுக்காக இப்படியும் கொலை செய்வார்களா? என கேள்விகள் எழுகின்றன.

படத்தில் இருந்து காபி!

படத்தில் இருந்து காபி!

மேலும், சுவாதி எப்படி இந்த திட்டம் தீட்டினார் என போலீஸ் விசாரணையில் கேட்டப் போது, தெலுங்கில் வெளியான திரைப்படம் ஒன்றிலிருந்து இந்த திட்டத்தை காப்பி அடித்ததாக கூறியிருக்கிறார். மேலும், ராஜேஷ் கொடுத்த வாக்கு மூலத்தில் இந்தி சீரியல்களில் இருந்து சில காட்சிகளை கண்டு தான் இந்த திட்டத்தை முழுமையாக தீட்டினோம் என கூறி இருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

A Hollywood Level Illegal Relationship Crime Happened in Hyderabad!

A Hollywood Level Illegal Relationship Crime Happened in Hyderabad!
Story first published: Friday, December 15, 2017, 10:00 [IST]
Subscribe Newsletter