28 வயது இளம் பெண்ணின் விபரீத ஆசை, 200 சர்ஜரிகளுக்கு 16 கோடி செலவு!

Posted By:
Subscribe to Boldsky

அழகாக இருக்க வேண்டும் என்பது அனைத்துப் பெண்களின் கனவு, ஆசை. இதற்கு எந்த வேறுபாடும் இல்லை. ஆனால், பார்பி பொம்மை போல இருக்க வேண்டும் என பல கோடிகளை செலவு செய்து, 200-க்கும் மேற்பட்ட சர்ஜரிகளை செய்துக் கொள்வதெல்லாம் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியவை.

ஆனால், இன்றைய உலகில் இத்தகைய காரியங்கள் தான் தடுக்கப்பட முடியாத விஷயங்களாக இருக்கின்றன. வேறு பிரபலங்களை போல முகத் தோற்றம் ஏற்படுத்திக் கொள்ள, மார்பகங்கள், புட்டம், சிக்ஸ் பேக் தோற்றம் பெற இம்பிலான்ட் சர்ஜரிகள் செய்துக் கொள்வதும், கொடியிடை பெற எலும்புகளை நீக்கிக் கொள்வதும் என விஷப்பரீட்சைகளில் ஈடுப்படுகிறார்கள் சிலர்.

சமீபத்தில் கூட நாம் மார்வல் கதாபாத்திரம் போல தன்னை உருமாற்றிக் கொள்ள விரும்பிய நபர் குறித்து படித்திருந்தது குறிப்பிடத்தக்கது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டல்குடிஸ்!

டல்குடிஸ்!

இந்த பெண்ணின் பெயர் டல்குடிஸ். இவருக்கு பார்பி கேர்ள் போன்ற தோற்றம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இந்த ஆசை, ஆவல் டல்குடிசை அவரது 17 வயதிலேயே தொற்றிக் கொண்டது.

Image Credit:Dalgudis

அப்பாவின் சொற்கொள்...

அப்பாவின் சொற்கொள்...

ஒவ்வொரு பெண்ணும் தனது அப்பாவை ஹீரோவாக தான் காண்பார்கள். ஒவ்வொரு அப்பாவும் தனது மகளை தேவதையாக தான் காண்பார்கள். ஆனால், டல்குடிஸ் வாழ்வில் இது நேர்மாறாக இருந்தது. டல்குடிசின் அப்பாவே இவரை அசிங்கமாக இருக்கிறாய், குண்டாக இருக்கிறாய் என சொல்லித் திட்டியுள்ளார்.

Image Credit: Dalgudis

முடிவு!

முடிவு!

சொந்த அப்பாவே தன்னை இப்படி இகழ்ந்து பேசுவது டல்குடிசின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்பது தான் டல்குடிஸ் பிரபல நடிகை ஜெனிபர் லோபஸ் போல தானும் இம்பிளாண்ட் சர்ஜரிகள் செய்துக் கொண்டு கவர்ச்சியான பெண்ணாக மாற வேண்டும் என விரும்பினார்.

Image Credit: Dalgudis

சர்ஜரிகள்!

சர்ஜரிகள்!

மார்பகங்கள், கன்னம், தாடை என உடலின் பல பகுதிகளில் லிபோசக்ஷன் எனப்படும் கொழுப்பை உறிஞ்சும் சிகிச்சை மேற்கொண்டார் டல்குடிஸ். மேலும், பிளாஸ்டிக் சர்ஜரிகள் செய்துக் கொண்ட பிறகு தனது பெயரை ஸ்டார் என்றும் மாற்றிக் கொண்டார் டல்குடிஸ்.

குழந்தை பருவம்!

குழந்தை பருவம்!

டல்குடிசின் குழந்தை பருவம் மிகவும் பரிதாபமானது. இவருக்கு பத்து வயது இருக்கும் போதே இவரது பெற்றோர் விவாகரத்து செய்துக் கொண்டனர். இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார் டல்குடிஸ்.

நண்பர்கள்!

நண்பர்கள்!

தனது குழந்தை பருவதில் பல பள்ளிகளில் மாறி, மாறிப் படித்தக் காரணத்தால் டல்குடிஸ்-க்கு சொல்லக் கொள்ளும்படியாக நண்பர்கள் யாரும் இல்லை. எல்லா வகையிலும் தான் ஒரு சிறந்த அழகுடிய நபராக இருக்க வேண்டும் என கருதி போல் டான்சராக மாறினார் டல்குடிஸ். இதன் மூலமாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொள்ள நிறைய பணம் ஈட்டினார் இவர்.

அடிக்ஷன்!

அடிக்ஷன்!

இப்போது டல்குடிஸ்-க்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொள்வதில் அடிக்ஷன் ஏற்பட்டுள்ளது. யாரெல்லாம் இவரை தோற்றத்தில் அம்மா போன்று இருக்கிறாய் என்று கூறுகிறார்களோ அவர்களை எல்லாம் வெறுக்கத் துவங்கியுள்ளார் டல்குடிஸ். ஆகையால் தான் முற்றிலும் வேறுபட்ட தோற்றம் பெற வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார் இவர்.

Image Credit: Dalgudis

வேலை!

வேலை!

போல் டான்சராக இருந்த டல்குடிஸ் பிறகு பிராப்பர்டி வேலைகளும் செய்து வந்துள்ளார். இதன் மூலமாக இவர் நிறைய பணம் சேமிக்க முடிந்தது என கூறுகிறார். அடுத்த ஆறு வருடத்திற்கு வீட்டு வாடகை தரும் அளவிற்கு பணம் சேமித்த பிறகு, இப்போது தனக்கு பிடித்த ஆடைகள், பொருட்கள் வாங்கி குவித்து வருகிறார் டல்குடிஸ்.

டல்குடிஸ் என்ன கூறுகிறார்?

டல்குடிஸ் என்ன கூறுகிறார்?

தனது இந்த உருவ, வாழ்வியல் மாற்றம் குறித்து டல்குடிஸ் என்ன கூறுகிறார் தெரியுமா?

"பெரும்பாலான மக்கள் நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொள்ளும் அடிக்ஷன் இருப்பதாக காண்கிறார்கள். ஆனால், ஸ்டார் எனும் நான் புதிய ஒருத்தி. நான் என்னை எனது பழைய வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்க விரும்பவில்லை. அவளளவு தான்." என கூறியுள்ளார்.

இப்போது, தினமும் நகங்களை பேணிக் காக்க, மேக்கப் மற்றும் சரும பராமரிப்புக்கு மட்டுமே பெருமளவில் செலவு செய்கிறார் டல்குடிஸ்.

Image Credit: Dalgudis

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

A Desire of 28 Years Old Dalgudis Made her to Spend 16 Crores for 200 Surgeries!

A Desire of 28 Years Old Dalgudis Made her to Spend 16 Crores for 200 Surgeries!