ராமயணம் பற்றி நீங்கள் அறிந்திராத ஆச்சரியமான உண்மைகள்!!

Posted By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

ராமாயணம் என்ற புனித நூல் இந்துக்களின் முக்கியமான புராணம் ஆகும். இந்த புராணக் காவியம் மன்னரான ராமர் தன் மனைவி சீதையை ராவணிடம் போர் புரிந்து மீட்டெடுத்ததை கூறும் காவியமாக உள்ளது.

இந்த புராணம் வால்மீகி என்ற முனிவரால் நாரத முனிவரின் துணையுடன் இயற்றப்பட்டது. தர்மம், கர்மம், நீதி, பெற்றோர்களிடம் பக்தி, நாட்டு மக்களை காத்தல் போன்ற நற்கருத்துகளை தன்னுள் கொண்டு இயற்றப்பட்டுள்ளது.

7-hidden facts about Ramayana

எல்லோரும் இந்த கதையை நன்றாகவே தெரிந்து வைத்திருப்பர்.

ஆனால் உங்களுக்கு தெரியாத ராமாயணத்தில் நடந்த சில 7 உண்மைகளை இங்கே தமிழ் போல்டு ஸ்கை கூறியுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை 1:

உண்மை 1:

ராவணன் சிவபெருமானின் பெரிய பக்தர் ஆவார். சிவபெருமானின் அருளை பெற ராவணன் தனது தலையை துண்டித்து விட்டார். ஒவ்வொரு முறையும் தலையை தியாகம் செய்யும் போது மீண்டும் மீண்டும் வளர்ந்தது. அப்படியே 10 தடவை நடந்ததால் கடவுள் சிவபெருமான் அவருக்கு 10 தலைகளை வரமாக கொடுத்தார். இதில் 6 தலைகள் சாஸ்த்ராஸ், 4 தலைகள் வேதாஸ் ஆகும்.

 உண்மை 2

உண்மை 2

தனது அண்ணன் ராமர் மற்றும் சீதையை பாதுகாக்க லட்சுமணன் காட்டில் இருந்த அந்த 14 வருடங்களும் தூங்க வில்லை. எனவே தான் அவர் குடகேஸ் என்று அதாவது தூக்கத்தை துறந்தவர் என்று பொருள்.

அதே நேரத்தில் லட்சுமணன் மனைவி உறுமிளா அயோத்தியில் அந்த 14 வருடங்களும் தூங்கி லட்சுமணனின் தூக்கத்தை அவர் ஏற்றுக் கொண்டு செயல்பட்டார். நமக்கு லட்சுமணன் மனைவி உறுமிளா பற்றி அதிகமாக தெரிந்திருக்காது.

உண்மை 3:

உண்மை 3:

ராமர் என்பவர் கடவுள் விஷ்ணுவின் 7 வது அவதாரம் ஆகும். கிருஷ்ணா அவதாரத்திற்கு அடித்தபடியாக ராமர் அவதாரம் தான் மிகவும் முக்கியம் வாய்ந்தது. ராமர் என்பவர் ஒரு சராசரி நேர்மையான மனிதர், உடலமைப்பில் மட்டுமில்லாமல் மனதளவிலும் மற்றும் பக்தியிலும் பெயர் பெற்றவர்.

 உண்மை 4:

உண்மை 4:

ராமரின் மனைவி சீதா ஜனக மன்னனின் உண்மையான மகள் கிடையாது. அவர் பூமா தேவியின் மகளாக பிறந்து ஜனக மன்னருக்கு நிலத்தில் இருந்து கிடைக்கப் பெற்றார். இவர் கடவுள் லட்சுமி தேவியின் மறுபிறவியாக கருதப்படுகிறது. ராமர் சீதா தேவியின் காதல் பேர் போற்றும் காதலாக இருந்து வருகிறது.

 உண்மை 5

உண்மை 5

அனுமான் ஒரு பிரமச்சாரியத்தை கடைபிடித்தவர். இவருக்கு மனைவி கிடையாது. இவர் தனது வாழ்க்கையை ராமருக்காகவே வாழ்ந்தார். அவரை போற்றி வாழ்ந்து வந்தார். அனுமன் தனது உடலை குங்குமத்தால் பூசி அதைக் கொண்டு ராமரை காத்தார். அதனால் தான் இவர் பஜ்ரங் பாலி என்று அழைக்கப்படுகிறார்.

உண்மை 6

உண்மை 6

நந்தி கயிலாய மலையின் நுழைவாயிலில் காவல் புரிபவர். ஒரு சமயம் ராவணன் சிவபெருமானை சந்திக்க வந்த போது அவரை நந்தி தடுத்து நிறுத்தினார். அப்பொழுது ராவணன் நந்தி தேவரின் தோற்றத்தை பார்த்து கேலி செய்தார்.

இதனால் கோபமடைந்த நந்தி தேவர் ராவணனுக்கு சாபமிட்டார். உன்னுடைய இலங்கை ராஜ்ஜியம் குரங்குகளால் மண்ணோடு மண்ணாக அழிக்கப்படும் என்றார். இந்த சாபம் தான் அனுமான் மற்றும் அவரது வானர சேனைகள் மற்றும் ராமரின் தலைமையில் இலங்கை அழிக்கப்பட்டது.

உண்மை 7:

உண்மை 7:

ராவணன் ராமர் கூட போரிடும் போரில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இலங்கையில் யாகம் வளர்க்கப்பட்டது. அப்பொழுது இந்த யாகத்திலிருந்து யாரும் எழுந்திருக்க கூடாது என்பது எச்சரிக்கை.

இதை அறிந்த ராமர் பாலி, அங்கதாவின் உதவியை நாடினார். ராவணின் யாகத்தில் ஏதாவது குழப்பத்தை உண்டாக்கும் படி வினவினார். ஆனால் ராவணன் யாகத்தில் கவனமாக இருந்தார்.

அப்பொழுது அங்கதா ராவணின் மனைவி மண்டோதரியின் கூந்தலை பிடித்து இழுத்து துன்புறித்தினார். இதை கண்டு கோபமடைந்த ராவணன் யாகத்திலிருந்து எழுந்து விட்டார். இதனால் யாகம் நிறைவேறாமல் போனதால் தான் ராவணன் ராமரால் அழிக்கப்பட்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

7-hidden facts about Ramayana

7-hidden facts about Ramayana