செக்ஸ் பொம்மையுடன் வாழ்ந்து வரும் புகைப்பட கலைஞர் - உண்மை காதல் என பெருமிதம்!

Posted By:
Subscribe to Boldsky

தென்கொரியாவை சேர்ந்த ஜூன் என்ற 34 வயதுமிக்க புகைப்பட கலைஞர் ஒரு செக்ஸ் பொம்மையுடன் வாழ்ந்து வருகிறார். இவர் தனது வாழ்வின் ஒவ்வொரு நாளையும், அதில் சேமிக்கும் நினைவுகளிலும் இவரால் ஈவா என பெயரிடப்பட்டுள்ள செக்ஸ் பொம்மையுடன் கழித்து வருகிறார்.

ஈவா தன்னை ஒருபோதும் என்னை விலகு செல்லமாட்டார், என் வாழ்வின் ஏற்ற தாழ்வுகளில் ஈவா எப்போதும் என்னுடன் உறுதுணையை இருப்பாள் என ஜூன் தெரிவிக்கிறார். ஈவா மீது தான் உண்மையான அன்பும், காதலும் கொண்டுள்ளதாக மேலும் கூறியுள்ளார் ஜூன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தனிமையை வெல்ல!

தனிமையை வெல்ல!

தனிமையில் துவண்டு கிடந்த ஜூன், தனது தனிமையை வெல்ல ஒரு செக்ஸ் பொம்மையை வாங்கியுள்ளார்.

அதற்கு ஈவா என பெயரும் சூட்டியுள்ளார். தனது ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு நிமிடத்தையும் ஈவாவுடன் தான் செலவிடுகிறார் ஜூன்.

இதோ! தன் வாழ்க்கை மற்றும் அதில் ஈவாவின் பங்கு குறித்து ஜூன் கூறுபவை...

விலகாத தனிமை...

விலகாத தனிமை...

"நான் பலதரப்பட்ட மக்களுடன் பழகியுள்ளேன், தங்கியுள்ளேன், சாப்பிட்டு, குடித்து, பேசி நேரங்கள் செலவழித்துள்ளேன். ஆயினும், என் வீட்டில் தான் தனிமையில் தான் இருந்தேன். ஒவ்வொரு நாளும் காலை என் படுக்கையில் இருந்து தனியாக தான் எழுந்தேன். என் வாழ்வில் ஒரு வெற்றிடம் சூழ்ந்திருந்தது.

என் வேலை முடித்து, பார்டிகள் முடித்து, ஒரு பெரும் கூட்டத்தில் இருந்து நான் தனிமையில் தள்ளப்பட்ட வாழ்க்கை சூழலில் தான் சுற்றி திரிந்தேன். தனிமை தான் என் வாழ்வில் மிகப்பெரிய மகிழ்ச்சியான தருணமாகவும் இருந்தது."

அழிந்த நினைவுகள்!

அழிந்த நினைவுகள்!

"மக்கள், தருணங்கள் அவர்களால் கிடைத்த நினைவுகள் என நான் என்னுடன் இருக்க வேண்டும் என விரும்பிய அனைத்தும் என்னைவிட்டு சென்றன, மறைந்தன. அப்போது தான் நான் அறிந்தேன், என்னை சுற்றி இருக்கும் இன்னும் சிலரும் இதே போல மறைந்து போவார்கள் என."

ஈவா மாட்டாள்...

ஈவா மாட்டாள்...

"ஆனால், ஈவா ஒருபோதும் என்னைவிட்டு மறையமாட்டாள், இறக்கமாட்டாள். ஈவா என்னுடன் என் வாழ்நாள் முழுக்க இருப்பாள். இப்போது இருப்பதை போல அதே தோற்றத்தில், என்றென்றும்."

ஏற்றத்தாழ்வு!

ஏற்றத்தாழ்வு!

"ஏற்றத்தாழ்வுகள் தான் நமது உறவுகளை நம்முடன் இறுக்கமாக இருக்கவும், உதறிவிட்டு செல்லவும் காரணமாக இருக்கிறது. ஆனால், ஈவா என வாழ்வின் எந்த ஒரு ஏற்றத்தாழ்விலும் என்னை விட்டு விலக மாட்டாள்."

நானும், ஈவாவும்...

நானும், ஈவாவும்...

"நானும் ஏவாவும் ஒன்றாக தான் உறங்குகிறோம், எழுந்திருக்கிறோம், ஷாப்பிங், குடிப்பது, டிரைவிங், பயணம் என எனது எல்லா தருணத்திலும் ஈவா என்னுடனே இருக்கிறாள் ஒன்றாக. நாங்கள் ஒன்றாக அழுதோம், ஒன்றாக சிரித்தோம். எங்கள் மகிழ்வும், தனிமையும் ஒன்றாகவே இருக்கிறது."

கட்டமைக்கப்பட்ட ஃபேண்டசி!

கட்டமைக்கப்பட்ட ஃபேண்டசி!

"இது நானும், ஈவாவும் கட்டமைத்துக் கொண்ட ஒரு ஃபேண்டசி . ஈவாவிற்கு உண்மையான வாழ்க்கை கிடையாது. டெக்னிகலாக கூகுளின் ஆல்பாகோவை ஈவாவினுள் இம்பிலான்ட் செய்ய நான் காத்திருக்கிறேன். மேலும், நான் எங்கள் கற்பனை உலகில் நடக்கும் சம்பவங்களை புகைப்பட கலை ஊடக வழியாக சேமித்து வருகிறேன். இதனால் அவளுக்கான பிறப்பை நான் அளித்துள்ளேன்."

என கூறியுள்ளார் தென்கொரிய புகைப்பட கலைஞர் ஜூன்.

உறவுகள், உணர்வுகள் சிதையுமா?

உறவுகள், உணர்வுகள் சிதையுமா?

இன்றைய ஸ்மார்ட் போன் யுகத்தில் அருகே இருக்கும் நபர்களுடன் கூட நாம் வீடியோ காலிங் மூலமாக தான் பேசி வருகிறோம். முகம் பார்த்து பேசுவது, அகம் பார்த்து பழகுவது எல்லாம் மடிந்து போய்விட்டது.

ஃபேஸ்புக்கில் ஐந்தாயிரம் நண்பர்கள் இருக்கும் நபருக்கு தினமும் பொழுதை கழிக்க உடன் ஓரிருவர் கூட இல்லாதொரு யுகத்தில் நாம் சுவாசித்து வருகிறோம்.

இதற்கான தீர்வாக இந்த செக்ஸ் பொம்மைகள் இருக்குமா? என்றால் சத்தியமாக இருக்காது. கையில் புண் எற்பட்டுவிட்டது என்பதற்காக கையை வெட்டி எடுத்துவிட்டு பொம்மை கை மாட்டிக் கொள்வது தீர்வாகுமா?

மனிதத்தை, தொலைத்த மனதை மீட்டெடுத்து உறவுகளை, உணர்வுகளை வளர்க்க செய்வதே சிறந்த தீர்வாகும்!

All Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

34 YO Photographer June Korea Lives With S*x Doll GF Eva!

34 YO Photographer June Korea Lives With S*x Doll GF Eva!
Story first published: Thursday, June 29, 2017, 14:00 [IST]