கலியுகம் இப்போது நடக்கிறது என்பதற்கான 10 சாட்சிகள்!!

Posted By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் கலியுகம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆமாம் இது முற்றிலும் உண்மை உலகத்தில் ஊழல், போர்கள், பாராபட்சம், தங்கள் சக்திகளை தவறான வழிக்கு பயன்படுத்துதல், வேறுபாடு மற்றும் எண்ணிலடங்காத நோய்கள் இவைகள் தான் நம்மிடையே தலைவிரித்தாடுகின்றன.

நாம் என்ன தான் மருத்துவ துறையிலும் அறிவியல் துறையிலும் முன்னேறினாலும் நமது சமுதாயம் பின்னடைவில் தான் சென்று கொண்டிருக்கிறது. எல்லாரும் ஏதோ ஒரு வழியில் பாதிப்படைந்து கொண்டோ தான் இருக்கின்றோம்.

10 facts that are coming true today in Kali Yuga

4 விதமான யுகங்களின் சுழற்சி

உலகச் சுழற்சி வயது 4 விதமான படிகளை கொண்டுள்ளது. அதில் கலியுகம் தான் கடைசி சுழற்சி என்று சமஸ்கிருத வேதங்களில் மகாயுகம் என்று கூறியுள்ளனர். முதல் மூன்று சுழற்சிகள் சத்திய யுகம், த்ரேதா யுகம், துவாபர யுகம் ஆகும்.

வயதின் களங்கம்

கலியுகம் என்பது வயதின் களங்கம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பெயர் என்ன சொல்கிறது என்றால் இது சாத்தான்களின் ஆதிக்க காலம். கலி என்றால் சண்டை, வாதம் என்று பொருள். இதைப் பற்றி எல்லா மதங்களில் கூறியும் அதை இதுவரை நாம் நம்புவதற்கு தயாராக இருந்ததில்லை.

நமது மனசு முழுவதும் பேராசை, பொறாமை போன்ற தீய எண்ணங்கள் தான் நிரம்பி வழிகின்றன. புராணங்களில் இந்த துவாபர யுகத்தின் இறுதியில் அதாவது கலி யுகம் தொடக்கத்தில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அவதாரம் எடுத்து இப்பூமியில் தோன்றுவார் என்று சொல்லப்படுகிறது. பழமையான கருத்துகளை வைத்து பார்த்தால் பிப்ரவரி 17/18 நாட்களில் 3102 BCE(கிறிஸ்து பிறப்பதற்கு முன் உள்ள சகாப்தம்) கலி யுகம் தொடங்கி விட்டதாம்.

10 facts that are coming true today in Kali Yuga

ஆர்யபட்டா மற்றும் கலியுக தொடக்கம்

சூர்ய சித்தாந்தர் என்று அழைக்கப்படும் ஆர்யபட்டா முதன்மை இந்திய கணிதவியலாளர் ஆவார். இவர் கருத்துப் படி பார்த்தால் பிப்ரவரி 18 இரவில் கி.மு 3102 ஆண்டுகளிலே கலியுகம் தொடங்கி விட்டது. இந்த நேரத்தில் பகவான் கிருஷ்ணன் பூமியிலிருந்து வைகுண்டத்திற்கு சென்று விட்டார் என்று கூறியுள்ளார். இவர் கலியுகத்தை பற்றி நிறைய கருத்துகளை தனது புத்தகத்தில் கூறியுள்ளார். ஆர்யபட்டா 499 CE ல் கலியுகத்தின் சரியான காலத்தை சொல்கிறது.

கலியுகம் கணக்கீடு

இந்த புத்தகத்தை ஆர்யபட்டா 3600 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதியுள்ளார். அப்பொழுது அவருக்கு வயது 23. அவர் பிறந்த வருடம் கி. மு 476. அப்போ கலியுகத்தின் கணக்கீடு படி கலியுகம் தோன்றியது கி. மு 3102 ஆண்டுகள்(3600-( 476+23)-1))=3102 கி. மு.

10 facts that are coming true today in Kali Yuga

அதிசயமான கோள்களின் கட்டமைப்புகள்

கே. டி அப்யங்கார் ஒரு இந்திய வான் கோள்களை பற்றிய இயற்பியல் படித்த மேதை ஆவார். கலி யுக தொடக்கத்தில் போது எல்லா கோள்களும் இதுவரை பார்த்திராத அதிசயமான பாதையில் நகர்ந்தன என்று கூறியுள்ளார். இதற்கு சாட்சியாக மொஹஞ்சதரா அகழ்வாராயச்சில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு கூறுகிறது என்று சொல்கிறார்.

கலியுகம்

இவர் ஆர்யபட்டா கருத்தை ஏற்காமல் கலியுகம் பிப்ரவரி 7 கி. மு 3104 வருடத்தில் தான் தொடங்கியிருக்கும் என்று கூறுகிறார். ஆனால் மகா விரத முனிவர் கூற்றுப்படி பார்த்தால் கலியுகம் கி. மு 500 வருடத்தில் தொடங்கி இருக்கும் என்று கூறப்படுகிறது. பக்தி சித்தாந்த சரஸ்வதி சுவாமி, பக்தி வேதாந்தா சுவாமி பிரபுபதா கலியுகம் 432,000 ஆண்டுகள் கொண்டுள்ளது என்கிறார்.

கலியுகத்தின் அறிகுறிகள்

கலியுகம் என்பது அழிவின் தொடக்கமாகும் . இந்த காலத்தில் மக்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் பாதிக்கப்படுவர். இது ஒரு கருமை இருட்டு நிறைந்த அச்சுறுத்தும் காலமாகும். மனிதன் கடவுள் பாதி மிருகன் பாதி என்று வாழக் கூடிய காலமாகும். தர்மம் என்பது நான்கு கால்களை கொண்ட காளையாக சித்தரிக்கப்படுகிறது. சத்ய யுகத்தில் இருந்து தர்மம் செய்வது படிப்படியாக குறைந்து கலியுகத்தில் ஒரு காலை உடைய காளையாகுமாம். அதாவது தர்மம் செய்வது கலியுகத்தில் குறையும்.

கலியுகம் பற்றிய ஸ்ரீமத் பாகவதம்

கலியுகத்தை பற்றி ஸ்ரீமத் பாகவதத்தில் கூறும் கருத்துக்கள் மிகவும் அபாயகரமானது. அந்த மாற்றங்கள் தான் தற்போதைய உலகில் நடந்து கொண்டு இருக்கிறது.

வாழ்க்கைத் தரச்சரிவு

இந்த கலியுகத்தின் தாக்கத்தால் அறநெறி, உண்மை, தூய்மை, பொறுமை, கருணை, ஆயுள்காலம், உடல்வலிமை, ஞாபகசக்தி ஆகிய அனைத்தும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும். [ஸ்ரீமத் பாகவத புராணம் 12.2.1] கூறுகிறது.

10 facts that are coming true today in Kali Yuga

பொருட்செல்வம் மட்டுமே ஆளும்

கலியுகத்தில் பொருட்செல்வம் உடையவர்கள் மட்டுமே மதிக்கப்படுவர். ஒரு மனிதனின் முறையான பழக்க வழக்கங்கள், நற்பண்புகள் எல்லாம் மதிக்கப்படாமல் தள்ளப்படும். எல்லாச் சட்டங்களும் செயல்களும் ஒருவரின் கட்டுப்பாட்டின் கீழே செயல்படும். [ஸ்ரீமத் பாகவத புராணம் 12.2.2].

திருமணம் முக்கியமில்லை

திருமணம் என்பது தான் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் முக்கியத்துவத்தை பறைசாற்றும். ஆனால் கலியுகத்தில் ஆணும் பெண்ணும் வெறும் உடலுறவுக்காகவே தொடர்பு கொண்டு இருப்பர். தொழிலில் வெற்றி என்பது வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்திருக்கும். சமூகத்தில் பூணூல் அணிந்து கொண்டு தன்னை உயர்ந்தவன் என்று காட்டிக் கொள்வான் . ஆனால் கடவுள் முன்னிலையில் எல்லாரும் சமம் [ஸ்ரீமத் பாகவத புராணம் 12.2.3]

10 facts that are coming true today in Kali Yuga

வெளித்தோற்ற பக்தி

ஒருவரின் வெளித்தோற்ற மாய ஜாலங்களை செய்யும் சாமியார்களையும் பண்டிதர்களையும் நம்பி அவர்கள் பின்னரே செல்வார்கள். கண்களால் காட்டும் வித்தைகளை நம்பி தவறான வழியில் வழி தவறி போவார்கள். ஸ்ரீமத் பாகவத புராணம் 12.2.4]

பொருட்செல்வம் தலைதூக்குதல்

கலியுகத்தின் பிடியில் இருக்கும் பொருட்செல்வம் உடையவர்கள் மட்டுமே மதிக்கப்படுவான். பொருள், பணம் இல்லாத ஏழைகள் தீண்டத்தாகதவர்கள் ஆவார்கள். குளிப்பதாலும் அலங்கரிப்பதாலும் ஒருவன் சுத்தமானவன் என்று கருதப்படுவான் . [ஸ்ரீமத் பாகவத புராணம் 12.2.5].

English summary

10 facts that are coming true today in Kali Yuga

10 facts that are coming true today in Kali Yuga
Story first published: Saturday, July 22, 2017, 9:00 [IST]