எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா மரணத்தில் காணப்படும் திகைக்க வைக்கும் 8 ஒற்றுமைகள்!

Posted By:
Subscribe to Boldsky

அதோ அந்த பறவை போல பாட வேண்டும் என்ற பாடலில் வரும் "ஒரே வானிலே ஒரே மண்ணிலே.." வரிகளை போல ஒரே திரையில் வளர்ந்து, முதல்வராக தமிழகத்தை ஆட்சி செய்து, மெரீனா கடற்கரையில் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டனர் முன்னாள் தமிழக முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா அவர்கள்.

இவர்களது கடைசி கால உடல் நலத்தில் இருந்து மரணம் வரை பல விஷயங்களில் ஒற்றுமைகள் இருப்பதை கண்கூட நாம் பார்க்க முடிகிறது. அவை என்னென்ன என்பது பற்றி இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒற்றுமை #1

ஒற்றுமை #1

இருவரும் தென்னிந்திய திரை உலகை ஆட்டிப்படைத்த சினிமா நட்சத்திரங்கள். பின்னாளில் இவர்களது வாழ்க்கை முழுவதும் அ.இ.அ.தி.மு.க தலைவர்களாகவும், தமிழக முதல்வராகவும் முடிவுற்றது.

ஒற்றுமை #2

ஒற்றுமை #2

இருவரும் முதலில் மூச்சு திணறல் காரணமாக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஒற்றுமை #3

ஒற்றுமை #3

எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளிக்க அமெரிக்கா மற்றும் ஜப்பானில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். இதே போல ஜெயலலிதா அவர்களது ஆரோக்கியத்தை பரிசோதிக்க லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் வரவழைக்கப்பட்டார்.

ஒற்றுமை #4

ஒற்றுமை #4

இருவரது ஆரோக்கியம் சார்ந்த தகவல்கள் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டது.

ஒற்றுமை #5

ஒற்றுமை #5

இருவரும் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது எண்ணிலடங்கா புரளிகள், வதந்திகள் மற்றும் மர்மங்கள் நிலவின.

ஒற்றுமை #6

ஒற்றுமை #6

இருவரும் முதல்வராக பதவி வகிக்கும் போதே உடல்நலக் கோளாறு காரணமாக மரணமடைந்தவர்கள்.

ஒற்றுமை #7

ஒற்றுமை #7

இருவரும் மரணமடையும் போது எதிர்கட்சியாக இருந்தது தி.மு.க. அக்கட்சியின் தலைவராக கருணாநிதி அவர்கள் இருந்தார்.

ஒற்றுமை #8

ஒற்றுமை #8

இருவரின் உடலும் மெரீனா கடற்கரையில் தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Resemblance In The Death of Former Tamilnadu Cheif Minister's Jayalalitha and MGR

Resemblance In The Death of Former Tamilnadu Cheif Minister's Jayalalitha and MGR
Subscribe Newsletter