தண்ணீருக்காக பல திருமணம் செய்யும் வினோதமான மகாராஷ்டிரா கிராமம்!

Posted By:
Subscribe to Boldsky

தென்கன்மல் (Denganmal), மகாராஷ்டிராவில் இருக்கும் ஒரு கிராமம். மும்பையில் இருந்து 150 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது இந்த கிராமம். இக்கிராமத்திம் மொத்தமே 500 பேர் தான் வாழ்ந்து வருகின்றனர்.

ஒரு மனைவிக்கு மேல் திருமணம் செய்வது குற்றம் என இந்திய அரசியல் சட்டம் கூறுகிறது. விவாகரத்து அல்லது இறப்பு நேரிடும் போது மறுதிருமணம் செய்துக் கொள்ளலாம்.

ஆனால், தென்கன்மல் கிராமத்தில் முதல் மனைவி உயிருடன் இருக்கும் போதே இரண்டாவது, மூன்றாவது திருமணம் செய்துக் கொள்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
என்ன காரணம்?

என்ன காரணம்?

இரண்டு மூன்று திருமணம் செய்தாலும் கூட, அந்த பெண்கள் ஒற்றுமையாக தான் இருக்கின்றனர். இவர்கள் இப்படி பல திருமணம் செய்வதற்கு காரணம் தண்ணீர் என்றால் நம்ப முடிகிறதா?

நம்பி தான் ஆகவேண்டும். குடும்பத்திற்கு தேவையான தண்ணீரை கொண்டு வருவதற்காகவே இவர்கள் இரண்டு மூன்று திருமணம் செய்கின்றனர். இவர்களை "தி வாட்டர் வைப்" என அழைக்கின்றனர்.

Image Source

வறட்சி!

வறட்சி!

மகாராஷ்டிராவில் மட்டுமின்றி, இந்தியாவின் பல கிராமங்களில் வறட்சி நிலவுகிறது. அதில் தென்கன்மல் கிராமமும் ஒன்று. ஆனால், இவர்கள் தண்ணீர் கொண்டு வர வேண்டும் என்றால் பல மைல் தூரம் கடந்து எடுத்துவர வேண்டிய கட்டாயம் உண்டாகிறது.

கோடை கொடுமை!

கோடை கொடுமை!

தென்கன்மல் கிராமத்தில் கோடைக்காலம் மிகவும் கொடுமையாக இருக்கும். கிணறுகள் முற்றிலும் வற்றிவிடும். கால்நடைகள் வறட்சி தாங்காமல் இறந்துவிடும். இதற்கெல்லாம் மேலாக இந்த கிராமம் மற்ற கிராமங்களுடன் இணைப்பு இல்லாமல், தனித்து இருக்கிறது.

எனவே, கிணறுகள் கோடைகாலத்தில் வற்றிவிட்டால், இவர்கள் பல மைல் கடந்து சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய சூழலை சந்திக்க நேரிடுகிறது. ஏறத்தாழ இவர்கள் 15 லிட்டர் தண்ணீர் எடுத்துவர 12 மணிநேரம் செலவிட வேண்டியிருக்கிறது.

சகாராம் பகத்!

சகாராம் பகத்!

சகாராம் பகத் என்பவருக்கு முதல் மனைவி மூலமாக ஆறு குழந்தைகள் இருக்கிறார்கள். இவரது முதல் மனைவிக்கு வீட்டை பாதுகாக்கவும், குழந்தைகளை காக்கவுமே நேரம் சரியாக போய்விடுகிறது.

இது தவிர ஒரு நாள் செலவு செய்து தண்ணீர் கொண்டு வர முடியாத நிலை ஏற்படுவதால், சகாராம் பகத் வீட்டுக்கு தேவையான தண்ணீரை எடுத்து வரவே இரண்டு திருமணம் செய்துள்ளார்.

அநியாயத்தின் உச்சக்கட்டம்!

அநியாயத்தின் உச்சக்கட்டம்!

இந்த கொடுமை இந்த கிராமம் மட்டுமின்றி, இந்தியாவின் வேறுசில கிராமங்களிலும் நடந்து வருகிறது. இது அநியாயத்தின் உச்சக்கட்டம் அல்லவா. ஒரு பெண் என்பவள் பெரும் சக்தி. அவளை ஒரு குடம் தண்ணீர் மட்டும் எடுத்து வருவதற்காக திருமணம் செய்வது முற்றிலும் தவறான செயற்முறை அல்லவா.

எத்தனையோ திட்டங்கள், எத்தனையோ மாற்றங்கள் இந்நாட்டில் வந்து சென்றாலும், அடித்தட்டி மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமை, அவர்கள் எதிர்கொள்ளும் கொடுமைகளுக்கு தீர்வு மட்டும் தட்டிக்கழிக்கப்பட்டே வருகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Men In This Maharshtra Village Marry Multiple Women For A Reason

Men In This Maharshtra Village Marry Multiple Women For A Reason