புட்டபர்த்தி சத்ய சாய் பாபா பற்றி பலரும் அறியாத உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

புட்டபர்த்தி சத்ய சாய் பாபா புட்டபர்த்தி எனும் கிராமத்தில் சத்யநாராயண ராஜு என்ற இயற்பெயர் கொண்டு பிறந்தவர். இந்த கிராமம் ஆந்திராவின் ஒரு வறட்சியான மாவட்டத்தை சேர்ந்த இடமாகும்.

இவர் நவம்பர் 23, 1926-ல் பிறந்தவர் ஆவார். பின்னாட்களில் புட்டபர்த்தி சத்ய சாய் பாபா, தான் ஷீர்டி சாய்பாபாவின் மறுபிறவி என கூறிக் கொண்டார். இவருக்கு உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிவார்ந்த குழந்தை!

அறிவார்ந்த குழந்தை!

குழந்தை பருவத்தில் சத்யநாராயண ராஜு வழக்கத்திற்கு மாறான அளவிற்கு அறிவார்ந்த குழந்தையாக இருந்தார் என கூறப்படுகிறது. நாடகம், இசை, நடனம், எழுத்து என பல திறமைகள் கொண்டிருந்தார் சத்யநாராயண ராஜு. கவிதைகள் எழுதி அதை பாடுவதில் பெரும் திறமை கொண்டிருந்தார் சத்யநாராயண ராஜு. இவர் சில பஜனை பாடல்களும் வெளியிட்டுள்ளார்.

மறுபிறவி!

மறுபிறவி!

அக்டோபர் 20, 1940- ல் தனது 14-வது வயதில் தான் ஷீர்டி சாய்பாபாவின் மறுபிறவி என அறிவித்துக் கொண்டார் சத்யநாராயண ராஜு. இவரிடம் பேசும் போதெல்லாம், தனது முந்தையை பிறவி ஷீர்டி சாய்பாபாவுடையது என கூறுவார்.

மேஜிக் மாயாஜாலம்!

மேஜிக் மாயாஜாலம்!

மேஜிக் வேலைகள் செய்வதில் திறமை பெற்றவர் சத்யநாராயண ராஜு. இதுகுறித்து பல விமர்சனங்கள் எதிர்ப்புகள் எழுந்தன. இந்தியாவின் பழம்பெரும் மேஜிக் கலைஞரான பி.சி. சர்கார், சத்யநாராயண ராஜுவும், தானும் ஒன்றாக தான் மேஜிக் கற்றோம் என்றும் கூறியுள்ளார்.

சர்ச்சைகள்!

சர்ச்சைகள்!

சத்ய சாய் பாபா மற்றும் இவரது ஆசிரமம் மீது பலமுறை எதிர்மறை விமர்சனங்களும், குற்றசாட்டுகளும் எழுந்துள்ளன. ஆசிரமத்தில் பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்டன என்ற புகார்களும் கூட பதிவாகியுள்ளன.

சமூக சேவைகள்!

சமூக சேவைகள்!

ஒரு புறம் சர்ச்சைகள் அதிகரித்தாலும், மறுபுறம் சமூக சேவைகளில் ஈடுபட ஆரம்பித்தார் சத்ய சாய் பாபா. முக்கியமாக புட்டப்பர்த்தி பொது மருத்தவமனையில் தொடங்கி, அதை சத்ய சாய் மருத்துவ ஆராய்ச்சி மையமாக வளர்த்து ஒரு சிறந்த மருத்துவ உதவி செய்யும் இடமாக மாற்றினார்.

இவரது மருத்துவ மையங்களில் ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவ உதவிகள், அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.

மருத்துவம் மட்டுமின்றி, கல்வி அறக்கட்டளை மூலமாக கல்வி உதவிகளும் செய்து வந்தார் சத்ய சாய் பாபா. ஆந்திரா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா என இந்தியாவில் பல மாநிலங்களில் இவரது மையங்கள் இயங்கி வருகின்றன.

உலகளாவிய மையங்கள்!

உலகளாவிய மையங்கள்!

ஏறத்தாழ 114 நாடுகளில் சத்ய சாய் பாபா மையங்கள் இயங்கி வருகின்றன. நான்கு முறை மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிழைத்தவர் சத்ய சாய் பாபா. 2005-ம் ஆண்டில் இருந்து இவர் மிகவும் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டார். கடந்த ஏப்ரல் 24, 2011 அன்று இவர் உயிரிழந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Lesser Known Facts About Sathya Sai Baba

Lesser Known Facts About Sathya Sai Baba
Subscribe Newsletter