For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா மட்டுமல்ல, ரோம், மொரோக்கோ, ஃபிரான்ஸ் நாடுகளிலும் அட்சதை தூவி வாழ்த்துவது ஏன்?

|

நமது ஊர்களில் திடீரென முளைத்த சில காளான்கள் நாம் பாரம்பரியமாக பின்பற்றி வரும் சில கலாச்சார நிகழ்வுகள் அனைத்தும் முட்டாள்தனம், கிறுக்குத்தனம் என கேலி கிண்டல் செய்வார்கள். ஆனால் ஒவ்வொன்றுக்கும் பின்னணியில் ஒவ்வொரு காரணங்கள் இருக்கின்றன.

அந்த வகையில் பலரும் திருமணத்தின் போது ஏன் அரிசி தூவி அட்சதை போட்டு வாழ்த்துக்கின்றனர். இது ஏன் என கேள்விகள் எழுப்புவார்கள். இந்த பழக்கம் நமது ஊர்களில் மட்டுமல்ல, ரோம், ஃபிரான்ஸ், மொரோக்கோ போன்ற பல நாடுகளில் பின்பற்றப்பட்டு வந்துள்ளன.

சிலர் அரிசி, சிலர் கோதுமை தூவும் பழக்கம் கொண்டு இருந்துள்ளனர். இதை தூவுவதற்கு பெரும்பாலும் அனைவரும் கூறியுள்ள காரணம் மணமக்கள் எல்லா வளமும் பெற்றி இன்பமாக இருக்க வேண்டும் என்பது தான்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பண்டைய ரோம்!

பண்டைய ரோம்!

பண்டைய ரோம் பாரம்பரியத்தில் தான் இப்படி அட்சதை போல தூவி மணமக்களை வாழ்த்தும் வழக்கம் ஆரம்பித்தது என கூறப்படுகிறது. ரோமர்கள் அப்போது அரிசிக்கு பதிலாக கோதுமை நெல் தூவி வாழ்த்துவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்கள்.

இப்படி கோதுமை நெல் தூவி வாழ்த்துவதால், அந்த புதுமண தம்பதிகள் எல்லா நன்மைகளும், பிள்ளைகள் மற்றும் எல்லா வளம் பெற்று வாழ்வார்கள் என்று அவர்கள் நம்பியுள்ளனர்.

இந்திய முறை!

இந்திய முறை!

நமது இந்திய கலாச்சாரத்தில் திருமணத்தின் போது மணமகன், மணமகளுக்கு தாளிக்கட்டும் போது, கெட்டி மேளம் கொட்டும் போது மஞ்சள் கலந்த அரிசியை மணமக்கள் மீது தூவி 16 செல்வங்கள் பெற்று வாழ வேண்டும் என வாழ்த்துவர். இதுவும் ஏறத்தாழ ரோமர்களின் வாழ்த்து போன்றது தான்.

மொரோக்கோ!

மொரோக்கோ!

மொரோக்கோ பாரம்பரியத்தில் புதுமண தம்பதிகளின் வாழ்க்கை இனிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக திராட்சை மற்றும் அத்திப்பழம் போன்றவற்றை தூவி வாழ்த்தும் வழக்கம் கொண்டுள்ளனர்.

ஃபிரான்ஸ்!

ஃபிரான்ஸ்!

ஃபிரான்ஸ் நாட்டு பாரம்பரியத்தில் மணமக்கள் மீது நெல் வீசி வாழ்த்தும் முறையை பின்பற்றி வருகின்றனர்.

இத்தாலி!

இத்தாலி!

இத்தாலி பாரம்பரியத்தில் நட்ஸ் மற்றும் கேண்டீஸ் தூவி வாழ்த்துகின்றனர். மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் அவர்கள் முட்டையை வீசும் வினோத வழக்கம் கொண்டுள்ளனர்.

மாற்றங்கள்!

மாற்றங்கள்!

ஆனால், இப்போது பல மாற்றங்கள் வந்துவிட்டன, நமது ஊர்களில் அட்சதைக்கு பதிலாக ரோஜா இதழ்கள் சிலர் தூவுகின்றனர்.

அதே போல ஆங்கில வழி திருமணங்களில் பபிள்கள் (bubbles) ஊதுவது, மலர்கள் தூவுவது என பல மாற்றங்களை கொண்டுவந்துவிட்டனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ever Wondered Why Is Throwing Rice On A Newly Married Couple A Tradition?

Ever Wondered Why Is Throwing Rice On A Newly Married Couple A Tradition?
Desktop Bottom Promotion