தனது சம்பளத்தில் 40% மரம் நட பயன்படுத்தும் அதிசய மரம் மனிதன் என்கிற யோகநாதன்!

Posted By:
Subscribe to Boldsky

பேருந்து நடத்துனர்கள் என்றாலே சற்று கோபமாக நடந்துக் கொள்வார்கள், முகத்தை உர்ர்ர்ர் என்று வைத்துக் கொள்வார்கள், தகாத வார்த்தை பயன்படுத்துவது, சில்லறை தர பிரச்சனை செய்வது என்ற பிம்பங்கள் தான் நமது மனதில் தோன்றும். இதுப் போன்ற பிம்பங்கள் தான் சினிமாக்களிலும் அதிகமாக காண்பிக்கப்படுகின்றன.

ஆனால், கோவையில் மருதமலை - காந்திபுரம் வழித்தடத்தில் பேருந்து நடத்துனராக பணியாற்றும் யோகநாதன் அனைவரும் போற்றத்தக்க காரியத்தை செய்து வருகிறார்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஓர் அறிமுகம்!

ஓர் அறிமுகம்!

இவரது முழுப்பெயர் மாரிமுத்து யோகநாதன். இவரை கோவையில் பேருந்து நடத்துனராக பணியாற்றி வரும் இவரை ட்ரீ மேன் என்று அழைத்தால் மிகவும் பிரபலமாக தெரியும். இவர் ஒரு இந்திய சுற்றுப்புறசூழல் ஆர்வலர்.

1 லட்சம்!

1 லட்சம்!

கடந்த 25 வருடங்களாக கோவையில் பேருந்து நடத்துனராக பணியாற்றி வரும் யோகநாதன் இதுவரை ஒரு லட்சம் மரக் கன்றுகளை நட்டுள்ளார். இதற்காக தனது ஒவ்வொரு மாத சம்பளத்திலும் 40% பணத்தை தனியாக ஒதுக்கி வைத்துவிடுகிறார்.

கவிஞர்!

கவிஞர்!

பேருந்து நடத்துனர், சுற்றுசூழல் ஆர்வலர் யோகநாதன். இவர் தனது சிறு வயதில் கவிதைகளும் எழுதி வருகிறார். தனது இளம் வயதில் கோத்தகிரி காடுகளில் இருக்கும் மரங்கள் அடியில் நிறைய நேரம் செலவழித்து உள்ளார்.

மரம் வெட்டுவதற்கு எதிர்ப்பு!

மரம் வெட்டுவதற்கு எதிர்ப்பு!

மரம் வெட்டும் கும்பலை இளம் வயது முதலே எதிர்க்கும் துணிச்சல் பெற்றவர் யோகநாதன்.

மாணவர் சக்தி!

மாணவர் சக்தி!

யோகநாதன், கோவையில் பேருந்து நடத்துனராக இருந்துக் கொண்டே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் உதவியோடு, மரம் வெட்டுதலை எதிர்த்தும், பல இடங்களில் புதிய மரக் கன்றுகளை நடும் நற்பணியையும் செய்து வருகிறார்.

தமிழகம் முழுக்க!

தமிழகம் முழுக்க!

இதுவரை யோகநாதன் தமிழகம் முழுவதும் 1,20,000 கன்றுகளை நட்டுள்ளார். தனது சம்பளத்தில் ஒதுக்கும் 40% பணத்தை கொண்டு மரம் நடுவது மட்டும் இன்றி, மாணவர்களுக்கு கல்வி உதவியும் செய்து வருகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Do you know about M.Yoganathan Aka Tree Man

Do you know about M.Yoganathan Aka Tree Man? take a look on here.
Story first published: Wednesday, September 14, 2016, 11:40 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter