இந்தியாவை 100 ஆண்டுகள் ஆண்ட கிழக்கிந்திய கம்பெனியை வாங்கிய இந்தியன்!!!

Posted By:
Subscribe to Boldsky

வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை நிரூபணம் செய்துள்ளது இந்த நிகழ்வு. இது இந்தியராகிய நம் அனைவரையும் பெருமையடைய வைக்கும் ஓர் நிகழ்வாக இருக்கிறது.

உலகின் பெரும் எம்.என்.சி நிறுவனங்களை ஆட்டிப்படைக்கும் இந்தியர்கள்!!!

நூறு ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவை அடிமையாக்கி ஆண்டு வந்த கிழக்கிந்தியக் கம்பெனியை ஓர் இந்திய தொழிலதிபர் வாங்கி உரிமையாளராக இருக்கிறார் என்பது உண்மையிலேயே நாம் அனைவரும் பெருமையாக கருத வேண்டிய விஷயம் தான்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மும்பையை சேர்ந்த தொழிலதிபர்

மும்பையை சேர்ந்த தொழிலதிபர்

சஞ்சீவ் மேத்தா, மும்பையை சேர்ந்த ஓர் பெரும் தொழிலதிபர். இவர் கடந்த 2010ஆம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனியை சுமார் 15 மில்லியன் டாலாருக்கு விலைக்கு வாங்கியிருக்கிறார்.

40 பங்குதாரர்கள்

40 பங்குதாரர்கள்

வைர வியாபார குடும்பத்தில் பிறந்த சஞ்சீவ், இந்த கம்பெனியை ஏறத்தாழ 40 பங்குதாரர்களிடம் இருந்து வாங்கியிருக்கிறார். இந்த பங்குகளை வாங்க நீண்ட நாட்கள் ஆனதாக சஞ்சீவ் மேத்தா கூறியிருக்கிறார்.

வரலாறு முக்கியமாக இருந்தது

வரலாறு முக்கியமாக இருந்தது

நம்மை அடிமையாக வைத்திருந்த வரலாறு மட்டுமின்றி. இந்த கம்பெனியின் வரலாற்றையும் கூட முற்றிலுமாக தெரிந்துக்கொண்டு தான் இந்த கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கியிருக்கிறார் சஞ்சீவ் மேத்தா.

சிறு பிழையும் இன்றி

சிறு பிழையும் இன்றி

இந்த கம்பெனியை பற்றி தெரிந்துக்கொள்ள நிறைய பயணங்கள் மேற்கொண்டாராம் சஞ்சீவ் மேத்தா. ஓர் சிறு பிழையும் இன்றி மொத்தத்தையும் அறிந்து வைத்துக்கொண்டு தான் காய்களை நகர்த்தியிருக்கிறார் மேத்தா.

உணர்ச்சியுடன் அவர் கூறியதாவது

உணர்ச்சியுடன் அவர் கூறியதாவது

கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கிய பிறகு விமானத்தில் வரும் போது, வானவில்லின் ஓர் முனையில் தங்கம் ஜொலிப்பதை கண்டேன். ஓர் இந்தியனாக, இந்தியாவை ஆண்ட கம்பெனியை வாங்கியது மிகவும் பெருமையாக இருக்கிறது. என அவர் கூறியிருக்கிறார்.

மேத்தாவின் திட்டங்கள்

மேத்தாவின் திட்டங்கள்

மேத்தாவின் தலைமையின் கீழ், டீ, காபி, ஜேம் மற்றும் பல பொருள்களை ஈ-காமர்ஸ் வழியாக விற்க திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது. இவர் இதை ஒரு புதிய தொழிலாக ஆரம்பிக்க, உருகொடுக்க செய்தார். உணர்வு ரீதியாக மட்டுமின்றி, தொழில் ரீதியாகவும் இது இவருக்கு மிகப்பெரிய கௌரவமாக இருந்தது.

கிழக்கிந்திய கம்பெனியின் வரலாறு

கிழக்கிந்திய கம்பெனியின் வரலாறு

1600-ஆம் ஆண்டில் துவக்கப்பட்டு, 17, 18-ஆம் நூற்றாண்டுகளில் பெரும் வணிக நிறுவனமாக திகழ்ந்து வந்தது. 1757ஆம் ஆண்டு இந்தியாவில் நுழைந்த இந்த கம்பெனி, இந்தியாவின் தனது பெரும் காலடியை எடுத்து வைத்தது.

 கொஞ்சம், கொஞ்சமாக சுரண்டியது

கொஞ்சம், கொஞ்சமாக சுரண்டியது

விவசாயத்தில் தொடங்கி, மற்ற தொழில்கள் என மெல்ல மெல்ல நுழைந்து சுரண்ட ஆரம்பித்த கிழக்கிந்தியக் கம்பெனி ஓர் சமயத்தில் இந்தியாவையே ஆள ஆரம்பித்தது. பிறகு பல போராட்டங்கள், தியாகங்கள், உயிர் இழப்புகள் என பல கொடுமைகளை தாண்டி விடுதலை பெற்றது இந்தியா.

உலகை ஆளும் இந்தியர்கள்

உலகை ஆளும் இந்தியர்கள்

மேத்தா கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கியதை போல, சமீபத்தில் கூகுள் தலைவராக பொறுப்பேற்ற சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை நிர்வாகியாக பதவி வகித்து வரும் சத்ய நாடெல்லா போன்றவர்கள் இன்றைய அறிவியல் மற்றும் தொழிநுட்ப உலகை ஆண்டு வருகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Image Courtesy

English summary

East India Company Is Now Owned By An Indian

Did you know? The East India Company That Ruled Over Us For 100 Years Is Now Owned By An Indian. Take a look.