For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிவபெருமானுக்கு நீலகண்டன் என்ற பெயர் வர காரணமான கதை!

By Ashok CR
|

சிவபெருமான் பல விஷயங்களுக்கு அறியப்படுபவர். அவரின் பிணையப்பட்ட சடை, கழுத்தை சுற்றியுள்ள பாம்பு, அவரின் திரிசூலம், மூன்று கண்கள் மற்றும் அவர் கோபத்துடன் இருக்கும் சமயத்தில் அழித்தலை உண்டு பண்ணும் மூன்றாவது கண். சிவபெருமானின் மற்றொரு சிறப்பான விஷயம் அவரின் நீல நிற தொண்டை. ஏன் அவர் நீல நிற தொண்டையுடன் சித்தரிக்கப்பட்டுள்ளார் என்று என்றாவது நீங்கள் சிந்தித்துள்ளீர்களா? அதற்கு காரணம் மனிதர்களின் நலனுக்காக கொடிய நஞ்சை சிவபெருமான் விழுங்கியது தான்.

இந்துக்களின் சமயத்திரு நூல்களில் சிவபெருமானைப் பற்றி ஏராளமான ஆச்சரியங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இத்தனை அதிசயங்களில், நஞ்சை விழுங்கியது தான் மனிதர்கள் மத்தியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாக உள்ளது. நம்மை அனைத்து வழிகளிலும் சிவபெருமான் எப்படி காக்கிறார் என்பதை பற்றிய கதை மட்டுமல்ல இது; மாறாக இது ஒரு பாடமாகவும் நமக்கு விளங்குகிறது. எப்போதுமே தீமைகளை அடக்கவோ அல்லது அதற்கு எதிர் செயலாற்றவோ வேண்டிய அவசியமில்லை என்பதே சிவபெருமானின் நீல நிற தொண்டை எடுத்துக்காட்டுகிறது. சில நேரங்களில் எதிர்மறைகளை மாற்றி அதனை செயலிழக்க செய்ய வேண்டும்.

சுவாரஸ்யமான வேறு கதை: துளசி செடி பற்றி பலருக்கு தெரியாத ஒரு கதை...!

சிவபெருமானின் நீல நிற தொண்டையின் முக்கியத்துவத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு, நீலகண்டன் அல்லது நீல நிற தொண்டை கொண்ட கடவுளின் அருமையான கதையைப் பற்றி தெரிந்து கொள்வோமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாற்கடலை கடைதல்

பாற்கடலை கடைதல்

சமுத்திர மந்த்தன் அல்லது பாற்கடலை கடையும் கதை உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். பாற்கடலுக்கு அடியில் இருக்கும் அமுதத்தை எடுக்க தேவர்களும் ,அரக்கர்களும் ஒன்று சேர்ந்து பாற்கடலை கடைந்தனர். கடைந்து கொண்டிருந்த போது, கடலில் இருந்து பல பொருட்கள் வெளியே வந்தது. விலை மதிப்பில்லா கற்கள், விலங்குகள், தங்கம், வெள்ளி, லக்ஷ்மி தேவி, தன்வந்திரி போன்றவைகள் அவற்றில் சில. இவைகளை தேவர்களும் அரக்கர்களும் பங்கு போட்டுக் கொண்டனர்.

ஹலஹலா

ஹலஹலா

கடலில் இருந்து வந்த பல பொருட்களில், ஹலஹலா என்ற கொடிய நஞ்சும் ஒன்று. மிகவும் கொடிய நஞ்சான அதனை அருகில் கொண்டு சென்ற அனைவரும் மாண்டனர். ஏன், தேவர்களும் அசுரர்களும் கூட, நிலை குலைந்து மரண படுக்கைக்கு சென்றனர். அப்போது தான் சிவபெருமானின் உதவியை நாடி, விஷ்ணு பகவானும் பிரம்ம தேவனும் வேண்டிக் கொண்டனர்.

சிவபெருமான் - நீலகண்டன்

சிவபெருமான் - நீலகண்டன்

இந்த நஞ்சை கட்டுப்படுத்தி செரிமானம் செய்யும் சக்தி சிவபெருமானிடம் மட்டுமே இருந்தது. சக்தி இருந்த காரணத்தினால், அந்த நஞ்சை விழுங்கும் பொறுப்பை சிவபெருமான் ஏற்றுக்கொண்டார். ஹலஹலாவை குடித்த சிவபெருமானின் உடலில் அது பரவ தொடங்கியது. வெகு விரைவில் அந்த நஞ்சு அவரை பாதிக்க தொடங்கி அவரின் உடலை நீல நிறத்தில் மாற செய்தது.

பார்வதி தேவியின் பங்கு

பார்வதி தேவியின் பங்கு

நஞ்சு பரவி கொண்டிருந்த அபாயம் காரணமாக மகாவித்யா வடிவில் சிவபெருமானின் தொண்டையில் இறங்கினார் பார்வதி தேவி. பின் அவர் தொண்டையோடு விஷத்தை கட்டுப்படுத்தினார். அதனால் நீல நிற தொண்டைக்கு ஆளான சிவபெருமான் நீலகண்டர் ஆனார்.

நீலகண்டனின் முக்கியத்துவம்

நீலகண்டனின் முக்கியத்துவம்

நீல நிற நஞ்சு நம் வாழ்க்கையில் உள்ள எதிர்மறையான சிந்தனைகள் மற்றும் தீமைகளை குறிக்கும். சிவபெருமானின் தொண்டையில் இருக்கும் நஞ்சு, அதனை விழுங்கவும் முடியாது - துப்பவும் முடியாது என்பதை குறிக்கும். ஆனால் காலப்போக்கில் அதனை கட்டுப்படுத்தி செயலிழக்கச் செய்யலாம். அதனால், நம் எதிர்மறையான சிந்தனைகளை கட்டுப்படுத்தி, நம் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதையே நீலகண்டன் குறிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Story Of Neelkanth: The Blue-Throated God!

Ever wondered why is Shiva depicted as having blue throat? It is because Lord Shiva consumed a deadly poison for the benefit of all living beings!
Desktop Bottom Promotion