Latest Updates
-
ராகி பூரியும்.. வெங்காய மசாலாவும்.. - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் தேடிவரும் நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. -
சனி-சூரியன்-சந்திரன் மீன ராசியில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க இருமடங்கு துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போறாங்களாம் -
73 வயதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் இதாங்க.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க... -
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி பொரியல் செய்யுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
அரசியல்வாதிகள் ஏன் எப்போதும் வெள்ளை சட்டை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
பன்னீரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி பன்னீர் கீமா மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
பிராமின் ஸ்டைல் வெஜ் குருமா ரெசிபி... ஈஸியா இப்படி செய்யுங்க... சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்...! -
மீன ராசியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: ஏப்ரலில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க...
ரமலான மாத பழக்கங்களும்... சடங்குகளும்...
புனிதமான ரமலான் மாதத்தில் விரதம் இருப்பது இஸ்லாமிய மதத்தின் மிகவும் பிரபலமான செயல்பாடுகளில் ஒன்றாகும். ஒரு மாத காலத்திற்கு, சூரிய உதயத்திலிருந்து சூரியன் மறையும் வரை, ஒவ்வொரு முகமதியரும் பின்பற்றும் விரதமாக இது உள்ளது. ரமலான் விரதம் மனிதனை இறைவனுடன் இணைக்கிறது மற்றும் சாத்தானின் தூண்டுதல்களிலிருந்து விலக்கி வைக்கிறது என்று சொல்ப்படுகிறது.
இறைதூதர் முகமதுவை பெருமைப்படுத்துவதற்காக ரமலான் விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. உண்மையான அறிவின் ஒளியை உலகிற்குப் பரப்புவதற்காக கடவுளால் திட்டமிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவர். இதன் காரணமாகவே மக்கள் ரமலான் மாதத்தில் விரதம் இருக்கவும் மற்றும் அனைத்து விதமான மோசமான விஷயங்களை செய்யாமலும் இருக்கின்றனர்.
ஒருவருடைய சுயவிருப்பத்தின் அடிப்படையில், அவருடைய உணவு மற்றும் பானங்களை சாப்பிடாமல் இருப்பதையே ரமலான் எனலாம். ஒருவர் இதை ஒரு முறை செய்யத் தொடங்கி விட்டால், கெட்டதாக கருதப்படும் அனைத்து விஷயங்களிலிருந்துமே அவர் விலகி இருக்க வேண்டும் என்பது தான் இதன் முக்கியமான விதிமுறையாகும். இதில் அனைத்து வகையான போதைப்பழக்கங்கள், உடலுறவு மற்றும் மனிதர்களுக்கு தீங்கானவை என்று கருதப்படும் எல்லா விஷயங்களுமே அடங்கும்.
ஒவ்வொரு மதத்திற்கும் சொந்தமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகள் ஆகியவை இருப்பதைப் போலவே, இஸ்லாமிய மத்திலும் ரமலான் மாதத்தில் மிகவும் உன்னிப்பாகப் பின்பற்றப்படும் பழக்கங்களும், சடங்குகளும் உள்ளன. இந்த சடங்குகள் இறைவழிபாட்டை வழிநடத்துவதோடு மட்டுமல்லாமல், விரதத்தை எப்படித் தொடங்க வேண்டும் மற்றும் எப்படி முடிக்க வேண்டும் என்றும் சொல்கின்றன.
ரமலான் மாதத்தில் பின்பற்றப்படும் சில சடங்குகளைப் பற்றி இங்கு பார்ப்போம்.

சேஹ்ரி
அதிகாலையில் பின்பற்றப்படும் முதல் சடங்காக சேஹ்ரி அல்லது சஹுர் உள்ளது. விரதத்தைத் துவங்கும் முன்னர், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடும் காலை நேர சிற்றுண்டியை தான் சேஹ்ரி என்றழைக்கிறார்கள். தன்னுடைய உடலுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாமல் காக்கும் திறனுள்ள, ஆசீர்வதிக்கப்பட்ட உணவாக சேஹ்ரி உணவு சொல்லப்படுகிறது.

தூவா ஓதல்
சேஹ்ரியை சாப்பிட்ட பின்னர், அவர் இறைவனின் பெயரால் தூவா என்ற பிரார்த்தனையை ஓத வேண்டும்.

நாள் முழுவதும் விரதம் இருத்தல்
அதற்குப் பின்னர், அந்த மனிதர் நாள் முழுவதும் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் மிகவும் கடுமையாக விரதத்தை கடைப்பிடிப்பார். அந்த மனிதர் தன்னுடைய எல்லா விதமான போதைப் பழக்கங்களையும் விரதத்தின் போது தவிர்ப்பார்.

தொழுகை நடத்துதல்
பகல் நேரத்தில் அந்த மனிதர் தொழுகையை நடத்த வேண்டும் மற்றும் புனித குரானின் வசனங்களை ஓத வேண்டும்.

அந்தி வேளையில் தொழுகை
பொழுது சாயும் வேளையில், விரதத்தை முடிக்கும் முன்னதாக அந்த மனிதர் நமாஸ் (தொழுகை) நடத்தி விரதத்தை முடிக்க வேண்டும்.

விரதத்தை முடித்தல்
பிராத்தனைகளை செய்து முடித்த பின்னர், அவர்/அவள் தன்னுடைய விரதத்தை தண்ணீரைக் குடித்தும் மற்றும் ஹாலல் செய்த பேரீட்சைகளை சாப்பிட்டும் முடித்து வைக்க வேண்டும்.

இப்தார்
விரதத்தை முறையாக முடித்து வைத்த பின்னர், அவர்/அவள் பல்வேறு விதமான பதார்த்தங்களை உடைய இப்தார் உணவு விருந்தை சாப்பிட வேண்டும். அது அசைவ உணவாக இருந்தால், கண்டிப்பாக ஹலால் செய்யப்பட்டிருக்க வேண்டும். சர்க்கரை, அல்வா, திராட்சைப் பழம், ராக் மிட்டாய் மற்றும் பால் அல்லது தண்ணீர் போன்ற இனிப்பான உணவுகளைக் கொண்டு விரதத்தை முடித்து வைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications











