Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்!
ஒவ்வொரு முறை சமைக்கும் போதும் சுவையாக சமைக்க வேண்டுமா? இந்த டிப்ஸ்களை மறக்காம பாலோ பண்ணுங்க...!
கறிகள் மற்றும் குழம்புகள் இந்திய உணவு வகைகளில் பிரிக்க முடியாத பகுதியாகும், எனவே கெட்டியான, ருசியான குழம்பு இல்லாமல் எந்த உணவும் முழுமையடையாது. ஒவ்வொரு முறையும் கறிகள் மற்றும் குழம்புகளின் சுவை மற்றும் அமைப்பைக் கச்சிதமாகப் பெறுவது மிகவும் சவாலானது என்பதை நாம் நன்கு அறிவோம்.
ஒரே விதத்தில் ஒரே டிப்ஸை பின்பற்றினாலும் நாம் சமைக்கும் போது ஒவ்வொரு முறையும் சுவை மாறுபடலாம். ஒவ்வொரு முறையும் சுவையான கிரேவிகள் மற்றும் கறிகளை கச்சிதமாக செய்ய சில சிறந்த எளிய வழிகள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தண்ணீரை எப்படி சரிசெய்வது?
உங்களின் கிரேவியில் அல்லது குழம்பில் அதிகளவு தண்ணீரை ஊற்றிவிட்டீர்களா? அதனை எப்படி சரிசெய்வது என்று முழிக்கிறீர்களா? இதனை சரிசெய்ய ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் சோள மாவை எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கவும். இந்த கலவையை உங்கள் தண்ணீர் அதிகமாக உள்ள குழம்பில் சேர்த்து தொடர்ந்து கிளறவும், இது கறிகளுக்கு அடர்த்தியான அமைப்பை கொடுக்க உதவும்.
சரியான வழிமுறையைப் பின்பற்றுவது
ஒவ்வொரு முறையும் சரியான கிரேவி அல்லது குழம்பை சமைப்பதற்கான எளிதான வழி, செய்முறையை படிப்படியாகப் பின்பற்றுவதாகும், இது ஒரு உணவில் உள்ள சுவைகளை நன்றாக உறிஞ்சி சுவையூட்ட உதவுகிறது. உதாரணமாக, வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சியை எண்ணெயில் பொன்னிறமாகும் வரை வதக்குவது, கறியின் அடிப்பகுதியை வலுவாகவும் நறுமணமாகவும் மாற்றும்.
ப்ரெஷான பொருட்களை உபயோகிக்கவும்
உங்களுக்குப் பிடித்தமான குழம்பை சமைக்க புதிய பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம், அவற்றின் சுவை மற்றும் அமைப்பைப் பெருக்கலாம். ஏனெனில் ப்ரெஷான பொருட்கள் உணவின் அமைப்பு மற்றும் சுவையை அதிகரிக்கும்.
உதாரணமாக நீங்கள் வாசனை நிறைந்த கறிகளை விரும்பினால், கிரேவிகளின் தேவையான அமைப்பு மற்றும் சுவைகளைப் பெற புதிய மசாலா பொருட்களை பயன்படுத்த வேண்டும். அசைவ உணவுகளை சமைக்கும் போது இஞ்சி, பூண்டு விழுதை எப்போதும் ப்ரெஷாக அரைத்து பயன்படுத்த வேண்டும்.
புரோட்டின் உணவு
புரதத்தை சமைப்பதற்கான எளிதான வழி என்னவெனில், சிறந்த அமைப்பு மற்றும் சுவைக்காக கறியில் சேர்ப்பதற்கு முன் அதை வதக்குவது சிறந்தது. கடல் உணவைப் பயன்படுத்தினால், அதிகமாகச் சமைப்பதைத் தடுக்க கடைசியில் அதனை சேர்க்கவ வேண்டும்.
காரத்தை குறைக்க
காரமான அல்லது அதிக மசாலா சேர்க்கப்பட்ட குழம்பை சரிசெய்வதற்கு, சமையலின் முடிவில் தேங்காய்ப்பால், கனமான கிரீம் அல்லது தயிர் போன்ற க்ரீம் பொருட்களைச் சேர்ப்பது காரத்தை குறைத்து கிரீமியான தோற்றத்தை உணவிற்குக் கொடுக்கும். இது மென்மையான அமைப்பையும் உணவிற்குக் கொடுக்கிறது.
மசாலா பொருட்கள்
மசாலாப் பொருட்கள் அவற்றின் அத்தியாவசிய எண்ணெய்களை வெளியிடுகின்றன மற்றும் கறியின் சுவையை ஆழமாக்குகின்றன. மசாலாப் பொருட்களையும் மூலிகைகளையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதன் மூலம், சுவையான உணவையும் இனிமையான அனுபவத்தையும் உங்களுக்குக் கொடுக்கும்.



Click it and Unblock the Notifications
