For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஷேவிங் க்ரீம் ஷேவ் பண்ண மட்டும்தான்னு யார் சொன்னா?... இந்த 16 விஷயத்துக்கும் பயன்படுத்தலாம்...

சேவிங் கிரீமை முடியை அகற்றுவதற்கு மட்டுமில்லாமல் மேலும் பல வழிகளில் பயன்படுத்த முடியும்.

By Vijaya Kumar
|

சேவிங் கிரீமை முடியை அகற்றுவதற்கு மட்டுமில்லாமல் மேலும் பல வழிகளில் பயன்படுத்த முடியும். கேட்கவே ஆச்சரியமாக உள்ளதா? ஆம்

shaving cream

குளியலறை- அலமாரியில் பிரதானமாக ஷேவிங் க்ரீமைப் பயன்படுத்த பல அற்புதமான வழிகள் உள்ளன. இது மென்மையானது. சவக்காரம் நிறைந்தது. அதனால், பல விஷயங்களைச் சிறப்பாகச் சாமர்த்தியமாக செய்து, நம்மை ஆச்சர்யப்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. பாதங்களில் இறந்த செல்கள் அகற்றுவது எப்படி?

1. பாதங்களில் இறந்த செல்கள் அகற்றுவது எப்படி?

யாரும் கடுமையான, உலர்ந்து காணப்படும் கால்களை விரும்பமாட்டார்கள்.

கால்களில் உள்ள இறந்த தோல்களால் கால்கள் பார்ப்பதற்கு அகோரமாகவும் , சங்கடத்தையும் ஏற்படுத்தும். கால்களில் உள்ள இறந்த தோள்களை அடிக்கடி அகற்ற நாம் வேண்டும்.

இந்த இறந்த தோள்களை சேவிங் கிரீம் மற்றும் லிஸ்டரினை பயன்படுத்தி நாமே அகற்றி கொள்ளலாம். தடிமனான மென்மையான தோல் அமைப்பு கொண்டவர்கள் இதை பயன்படுத்தி மிக எளிதாக அகற்றி கொள்ளலாம்

2. வேனிற் கட்டிகளை போக்க

2. வேனிற் கட்டிகளை போக்க

வெய்யலில் அதிகமாக வேலை செய்கிறீர்களா? வெயிலால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஷேவிங் கிரீமைத் தடவவும், அது குளிர்ச்சியாகவும் விரைவான, இனிமையான நிவாரணத்தை அளிக்கும்.

3. கதவை கீச்சிடும் சத்தம்

3. கதவை கீச்சிடும் சத்தம்

கதவுகளை திறந்து மூடும் போது கீச்சிடும் சத்தம் ஏற்பட்டால் நமக்கு பைத்தியமே பிடித்துவிடும். கதவில் உள்ள கீல் மூலம் இந்த சத்தம் ஏற்படும்

உராய்வை போக்க கீல்கள் மீது சேவிங் கிரீமை தேய்க்கவும், இதன் மூலம் எரிச்சலூட்டும் பிரச்சனையை எளிதில் நிறுத்தலாம் !

4. நகைகளை சுத்தம் செய்ய

4. நகைகளை சுத்தம் செய்ய

நமது ஆபரணங்கள் நல்ல சுத்தமாக இருக்கும் போது மிகவும் நன்றாக இருக்கும். வீட்டில் நகைகளை சுத்தம் செய்ய பல வழிகள் உள்ளன, ஆனால் அவற்றில் எளிதான ஒன்று ஷேவிங் கிரீம் பயன்படுத்துவது. ஒரு கிண்ணத்தில் உங்கள் பொருட்களை வைக்கவும் மற்றும் ஷேவிங் கிறீமை போட்டு நன்றாக . அதை மசாஜ் செய்வதுபோல் செய்யவும் 10 நிமிடங்கள் காத்திருக்கவும், பின்னர் ஆபரணங்களை சுத்தமான கழுவி துடைக்கவும் . இப்போது அப்பழுக்கற்ற உங்கள் நகைகளை பார்த்து ஆச்சரியப்படுவீர்கள்.

5. குழந்தைகள் நூரையோடு விளையாட

5. குழந்தைகள் நூரையோடு விளையாட

ஷேவிங் கிரீம் கொண்டு பல புதிய பொழுதுபோக்குகளை உங்கள் குழந்தைகளுக்கு வழங்க முடியும். சமைப்பதற்கு பயன்படுத்து உணவு வண்ணத்தை ஒரு சில துளிகள் ஷேவிங் கிரீமை சேர்க்க , அது ஒரு புதிய வண்ணப்பூச்சாகவும், புதிய வடிவத்தில் நுரை மாறும். இது குளிப்பதற்கும் , அல்லது காகிதத்தில் வரைவதற்கும் இனிமையான ஒன்றாக இருக்கும் .

6. அழகு சாதனப் பொருளாக

6. அழகு சாதனப் பொருளாக

வீட்டிலேயே உங்களை வசீகரிக்க நீங்கள் விலையுயர்ந்த பொருட்களை வாங்கத்தேவையில்லை. உண்மையில், ஷேவிங் கிரீம் மூலம் உங்கள் விரல்களை நம்பமுடியாத அளவிற்கு சுத்தமாக பராமரிக்க முடியும்.

7. கிரீஸ் கறை

7. கிரீஸ் கறை

அழுக்கு வேலை, அழுக்கு கைகள். நீங்கள் உங்கள் காரையோ அல்லது வேறு ஏதாவதை சுத்தம் செய்யும் அமர்வில் இருந்தால் உங்கள் கைகளில் படிந்து இருக்கும் கிரீஸ் மற்றும் பெயிண்ட் கறைகளை நீக்க போராட கூடும்.

இந்த நேரங்களில், நீங்கள் சேவிங் கிரீமை முயற்சி செய்யலாம்

8. ஸ்டீல் கிளீனிங்

8. ஸ்டீல் கிளீனிங்

உங்கள் வீட்டில் உள்ள பொலிவு இழந்த எஃகு பொருட்களை (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்) மேலும் பளிச்சிட வைக்கலாம். சேவிங் கிரிமை ஒரு சுத்தமான துணியை பயன்படுத்தி ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ப்ரொட்களை பளிச்சிட வையுங்கள்.

9. கண்ணாடிகளை பாதுகாப்பது எப்படி?

9. கண்ணாடிகளை பாதுகாப்பது எப்படி?

நீங்கள் கண்ணாடிகளைஅணிபவராகஇருந்தால் , வெப்பநிலை மாற்றத்தில் கண்ணாடிகளை மூடுபனி பாதிக்கும் இது நமக்கு எரிச்சலூட்டுவது மட்டும் அல்ல உண்மையில் ஆபத்தானதும் கூட அதை தடுக்க உண்மையில் வழி உள்ளது. ஷேவிங் கிரீம் பயன்படுத்தவும்!

ஷேவிங் கிரீமை ஒரு சிறிய அளவு பயன்படுத்தி உங்கள் கண்ணாடிகளை துடைக்கவும் னால பலன் கிடைக்கும். இந்த முறையில் ஜன்னல் மற்றும் முகம் பார்க்கும் கண்ணாடிகளையும் சுத்தம் செய்யலாம்

10 கார்பெட் கறைகளை போக்கும்

10 கார்பெட் கறைகளை போக்கும்

ஷேவிங் கிரீமின் மற்றொரு பெரிய பயன்பாடு கம்பளத்தில் உள்ள கறைகளை நீக்குவது. தடிமனான நிலைத்தன்மையின் பொருள் கறைகளில் ஆழமாக விழுகிறது, உண்மையில் கறைகளை வரையறுக்க உதவுகிறது. ஷேவிங் கிரிமை கறைக்கு நேரடியாக விண்ணப்பிக்கவும், காகித துணியை கொண்டு சுத்தம் செய்யவும்.

11. ( hair mousse ) ஹேர் மெஸ்ஸே

11. ( hair mousse ) ஹேர் மெஸ்ஸே

நீங்கள் ஹேர் மெஸ்ஸே செய்ய விரும்பினால், நீங்கள் ஷேவிங் கிரீமை பயன்படுத்தி செய்யலாம். உங்கள் கைகளில் சிறிதளவு ஷேவிங் கிரீமி எடுத்து மெல்ல மெல்ல உங்கள் முடியில் தேய்க்க நீங்கள் விரும்பிய hair mousse உங்களுக்கு கிடைக்கும்.

12. ஈஸ்டர் நேரத்தில் நூரையோடு விளையாடு

12. ஈஸ்டர் நேரத்தில் நூரையோடு விளையாடு

ஈஸ்டர் முட்டைகளோடு ஷேவிங் நுரையை பயன்படுத்தி விளையாட முயற்சிப்பது மற்றொரு வேடிக்கையானா விஷயம்

இது சூப்பர் அழகாக இருக்கிறது, மற்றும் செய்ய எளிதாகவும் இருக்கும்

அதிலும் நுரைகளோடு விளையாடுவதில் குழந்தைகளுக்கு இருக்கும் ஆர்வத்தை அளவிடவா முடீயும்?...

13. பாத்திரங்கள்

13. பாத்திரங்கள்

வீட்டில் பித்தளைஈ செம்பு பாத்திரங்கள் பயன்படுத்தும் காலமெல்லாம் நம் தாத்தா, பாட்டி காலங்களோடு மலையேறிப் போய்விட்டது. அதற்கு முக்கிய காரணமே அதை சுத்தம் செய்வதில் இருக்கும் சிரமம் தான். ஆனால் ஒரு துளி ஷேவிங் கிரீமை ஸ்கிரப்பரில் எடுத்து பாத்திரத்தில் தேய்த்துப் பாருங்கள். அப்புறம் நீங்களே சொல்வீர்கள். அட இன்னும் கொஞ்சம் செம்பு பாத்திரம் வாங்கலாமென்று,

14. தோல் செருப்புகள்

14. தோல் செருப்புகள்

உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஷேவிங் கிரீம் பற்றிய ஒரு சில பயன்கள் உள்ளன, மேலும் இது உங்கள் ஆர்வத்தை கண்டிப்பாக தூண்டும் .சிலர் மெல்லிய காலணிகளை ஷேவிங் கிரீம் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம் என்பார்கள். பொதுவாக இப்போதெல்லாம் ஆண்கள்பெரிதாக லெதர் செருப்புகளைப் பயன்படுத்துவுதில்லை. காரணம்... அது என்னதான் பராமரித்தாலும் மிக வேகமாக நிறம் மங்கி பழையது போன்ற தோற்றத்தைத் தந்துவிடும். இதுவே ஒருமுறை ஷேவிங் க்ரீம் போட்டு சுத்தம் செய்து பாருங்கள். கடையில் இருந்து வாங்கி வந்தபோது இருந்ததைத்போலவே பளபளக்கும். ஆம் கறை உள்ள பகுதியில் ஷேவிங் கிறீமை ஒரு சிறிய அளவு தடவி கழுவ வேண்டும். அல்லது சுத்தமாக துடைக்க வேண்டும்.

15. ஸ்டவ் கிளீனிங்

15. ஸ்டவ் கிளீனிங்

சிறிய ஆனால் கடினமான அடுப்பில் உள்ள கடினமான கறைகளை அகற்றுவதற்காக ஒரு பிரஷ்ஷில் ஷேவிங் கிரீமை வைத்து நன்கு தேய்த்து சுத்தம் செய்யப் பயன்படுத்தும் போது இது மிகவும் சக்திவாய்ந்ததாக உள்ளது ,இது விடாப்பிடியான கறையையும் போக்க உதவும்.

16. நெயில் பாலிஷ் ரிமூவர்

16. நெயில் பாலிஷ் ரிமூவர்

உங்கள் நகத்திற்கு பாலிஷ் போடும்போது ஏற்படும் தவறுகளை நீக்கவும் இந்த ஷேவிங் க்ரீம் பயன்படும். உங்கள் நகத்திற்கு பாலிஷ் போடும்போது அதனை சுற்றி தோல் மீது தவறுதலாக படிந்து விடும், இது உங்கள் நகத்தின் தோற்றத்தை மோசமாகக் காட்டும் சேவிங் கிரீமை பயன்படுத்தி இதனை அகற்றலாம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: how to
English summary

16 uses for shaving cream (that have nothing to do with hair removal!)

How many uses for shaving cream do you know? Although advertised solely as a necessary step in your shaving routine.
Desktop Bottom Promotion