கண்ணீர் வராமல் வெங்காயம் நறுக்க வேண்டுமா? இதோ எளிமையான 8 வழிகள்!

Posted By:
Subscribe to Boldsky

மாமியார் திட்டி அழாத மருமகள்கள் கூட இருக்கிறார்கள், ஆனால், வீட்டில் வெங்காயம் வெட்டும் போது அழாத மருமகள்கள் இருக்கவே முடியாது. வெங்காயம் வெட்டும் போது அந்த அறையில் இருந்து தெறித்து ஓடும் குழந்தைகளை கூட நாம் பார்க்க முடியும்.

Eight Ways To Cut Onions Without Crying

நம் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்கும் சிறந்த உணவுப் பொருள் வெங்காயம். பல ஆண்கள் காதல் கவிதையில் வெங்காயத்தை பெண்களின் மனதோடு உவமையாக பயன்படுத்தி எழுதுவதை கூட நாம் காண முடியும்.

இந்த 8 டிப்ஸ்-ஐ பின்பற்றினால் இனிமேல் நீங்கள் கண்ணீர் வராமலேயே வெங்காயம் நறுக்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டிப்ஸ் #1

டிப்ஸ் #1

ஷார்ப்பான கத்தி கொண்டு வெங்காயம் நறுக்குங்கள். வெங்காயத்தில் உள்ள என்சைம் செல்கள் உடைவதால் தான் கண்ணீர் வருகிறது.ஷார்ப்பான கத்தி கொண்டு வெங்காயம் வெட்டுவதால் இதை தடுக்க முடியும்.

டிப்ஸ் #2

டிப்ஸ் #2

நீரில் வைத்து வெங்காயத்தை வெட்டினால் கண்ணீர் வராது. இதற்கு பின் சிறிது நேரம் நீங்கள் வெங்காயத்தை உளற வைத்தால் போதுமானது.

டிப்ஸ் #3

டிப்ஸ் #3

வெங்காயத்தை வெட்டுவதற்கு முன்னர், அதை 10 - 15 நிமிடங்கள் ஃப்ரீசரில் வைத்து விடுங்கள். இதனால் என்சைம்கள் உடையது. மேலும், இதனால் சுவையும் எந்த பாதிப்பும் அடையாது.

டிப்ஸ் #4

டிப்ஸ் #4

வெட்டுவதற்கு முன்னர் நீரில் முக்கி எடுத்துவிட்டு வெங்காயம் வெட்டுங்கள். இதனால் சற்று சுவையில் மாற்றம் ஏற்படலாம்.

டிப்ஸ் #5

டிப்ஸ் #5

வெங்காயம் வெட்டும் போது அருகே ஆவி வெளிப்படும் அளவில் சுடுநீர் வைத்து நறுக்கினால் கண்ணீர் வராது.

டிப்ஸ் #6

டிப்ஸ் #6

இறுக்கமான கண்ணாடி அணிந்துக் கொண்டு வெங்காயம் வெட்டுவதால் கண்ணீர் வராமல் தடுக்க முடியும்.

டிப்ஸ் #7

டிப்ஸ் #7

வெங்காயம் நறுக்கும் போது விசில் அடித்துக் கொண்டே நறுக்கினால் கண்ணீர் வராதாம். விசில் அடிக்கும் போது வெளிவரும் காற்று தான் கண்ணீர் வருவதை தடுக்க உதவுகிறது.

டிப்ஸ் #8

டிப்ஸ் #8

வெங்காயம் நறுக்கும் போது அடுகே சிறிய மெழுகுவர்த்தியை பற்ற வைத்து நறுக்கினால் கண்ணீர் வராது. மெழுகில் இருந்து வெளிவரும் கேஸ் கண்ணீர் வருவதை தடுக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Eight Ways To Cut Onions Without Crying

No more tears! Ten Ways To Cut Onions Without Crying