Just In
- 6 hrs ago
நைட் நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் உடலில் நிகழும் சில பயங்கரமான விஷயங்கள்!
- 6 hrs ago
போராடிக்கிற உங்கள் பாலியல் வாழக்கையை சுவாரஸ்யமாக மாற்ற இத சரியா பண்ணுனா போதும்...!
- 8 hrs ago
இந்த டீ நீங்க தூங்கும்போதுகூட உங்க கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுமாம்...!
- 8 hrs ago
சிம்பிளான... சிக்கன் கிரேவி
Don't Miss
- News
ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் குண்டுவெடிப்பு... மக்கள் அலறல்... புகைமண்டலமான குடியிருப்பு பகுதி..!
- Automobiles
நிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா? ஆசியான் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட் ரிசல்ட்!
- Movies
கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்!
- Sports
கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்!
- Finance
வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..!
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வீட்டில் ஏன் காய்கறித் தோட்டம் வளர்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்!!!
வீட்டில் நீங்க ரொம்ப நாளா ஒரு காய்கறித் தோட்டம் போடணும்னு நெனச்சிட்டு இருந்தீங்கன்னா உடனே அதப் பண்ணுங்க. அது சமையலறையோ அல்லது பால்கனியோ, ஜன்னலுக்குப் பக்கத்துல ஒரு இடத்தை தேர்ந்தெடுங்கள். அது மொத்தமும் செடியால நிரப்பிப் பாருங்கள். நிஜமாகவே நீங்கள் சந்தோஷப்படுவீர்கள். அது ஏன் என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

புதிதான இலைத் தாவரங்கள் சமையலுக்குக் கிடைக்கும்
எப்போதெல்லாம் உங்களுக்கு துளசி அல்லது கறிவேப்பிலை தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் கடைக்கு ஓடாமல் ஜன்னலில் இருந்து பறித்துக் கொள்ளலாம். இன்னொரு முக்கியமான விஷயம் கொஞ்சம் இலைக்காக ஒரு கட்டு முழுவதும் வாங்க வேண்டிய அவசியமில்லை.

சுத்தமான காய்கறிகள் கிடைக்கும்
இப்போதெல்லாம் விவசாயத்தில் நிறைய பூச்சி மருந்து உபயோகிக்கிறார்கள். அதனால் உங்களுடைய உணவுப் பொருளெல்லாம் சுத்தமாக உள்ளதா என்று கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் அதை நீங்களே வளர்த்தால், அது சுத்தமாக எந்த ரசாயனமும் இல்லாமல் கிடைக்குமென்று நீங்க உறுதியாக நம்பலாம்.

ரொம்ப சிக்கனமானது
செடிகள் விலை மிகவும் குறைவு. அதனால் அதை வாங்கி வளர்க்கலாம். இதற்குத் தேவைப் படுவதெல்லாம் கொஞ்சம் தண்ணீர் தான். வேறு எதுவும் இல்லை. அதுமட்டுமின்றி போகப் போக நீங்க உங்கள் காய்கறி செலவுகளைக் கணிசமாகக் குறைக்கலாம். நீங்கள் ஆர்கானிக் காய்கறிகளை வாங்குபவராக இருந்தால், உங்கள் செலவு இன்னும் அதிகமாக மிச்சமாகும்.

மேலும் ஆரோக்கியமாவீர்கள்
நீங்கள் துளசி, புதினா போன்ற செடிகளை வளர்க்கும் போது அதிலிருந்து தினமும் சில இலைகளை பறித்து சாப்பிடவோ அல்லது உங்க டீயில் சேர்க்கவோ செய்யலாம். இவை நிறைய மருத்துவ குணம் நிறைந்தவை. அதன் மூலம் சுவாசக் கோளாறுகள், பல் பிரச்சனைகள், காய்ச்சல், ஆஸ்துமா, நுரையீரல் கோளாறுகள், இதய நோய்கள் மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றில் இருந்து ஆறுதல் தரும்.

இயற்கையான சூழலும் அமைதியும் கிடைக்கும்
தோட்டம் அமைப்பது உங்களுடைய மன அழுத்தத்தைக் குறைத்து, உங்களுக்கு அமைதியையும் ஓய்வையும் தரக்கூடியது. இயற்கை சூழலில் இருப்பது உங்கள் உடல் மன ஆரோக்கியத்திற்கு நல்லதாகவும், உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன

தாவரங்கள் கொசுவைக் கட்டுப்படுத்தும்
நீங்கள் மூலிகைச் செடிகளை சரியாக தேர்வு செய்வதன் மூலம் கொசுவைக் கட்டுப்படுத்தலாம். அதனால் கொசுக்கடி, அதன் மூலம் வரும் டெங்கு, மலேரியா போன்றவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். துலுக்க சாமந்தி ஒரு நல்ல கொசுவிரட்டும் செடி. ஒவ்வொரு செடிகளுக்கு மத்தியிலும் ஒரு சாமந்தி செடி இருந்தால் போதும். இதன் அழகான மலர்கள் உங்கள் வீட்டை அழகாக்கவும் செய்யும்.

மனதிற்கு நிறைவைத் தரும்
தோட்டம் வைத்துப் பராமரிப்பதை ஒரு போரான விஷயமாக நீங்க பார்க்கலாம். ஆனால் அதை செய்யத் தொடங்கிவிட்டால், அதன் உணர்வு உங்களுக்கே நன்றாக விளங்கும். ஒவ்வொரு சிறிய செடி, கிளை அல்லது பூவும் உங்களுக்கு ஒரு நல்ல மன நிறைவை தரும் என்பதில் ஆச்சரியமில்லை.