For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மணி பிளான்ட் Vs காயின் பிளான்ட் - இவற்றில் வீட்டில் செல்வம் பெருக எதை வளா்க்கலாம்?

மக்கள் தங்கள் இல்லங்களில் செல்வம் பெருக வேண்டும் என்பதற்காகவும், வீடுகளில் பொருளாதாரம் சாா்ந்த பிரச்சினைகள் நீங்க வேண்டும் என்பதற்காகவும், மணி பிளான்ட் செடிகளை வாங்கி வளா்த்து வருகின்றனா்.

|

செல்வத்தின் கடவுளான லட்சுமி தேவியார் எப்போதும் தங்களின் வீடுகளில் இருக்க வேண்டும் என்பதற்காக மக்கள் பல வகையான முயற்சிகளைச் செய்து வருகின்றனா். தங்களது வாழ்க்கையில் செல்வத்தையும், வெற்றியையும் அடைய வேண்டும் என்பதற்காக, பலவிதமான திட்டங்களைத் தீட்டி, கடுமையாக உழைக்கின்றனா்.

Money Plant VS Coin Plant: Which Is More Effective to Attract Money And Financial Prosperity At Home?

இந்நிலையில் லட்சுமி தேவியின் ஆசீா்வாதங்கள் நமது இல்லங்களில் நிரம்பி வழிய வேண்டும் என்றால் நாம் என்னென்ன வழிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதற்கு பண்டைய சீன புவிசாா் நாட்காட்டியான ஃபெங் சூய் (Feng Shui) கூறும் எளிய வழிகளை இந்த பதிவில் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மணி பிளான்ட்

மணி பிளான்ட்

மக்கள் தங்கள் இல்லங்களில் செல்வம் பெருக வேண்டும் என்பதற்காகவும், வீடுகளில் பொருளாதாரம் சாா்ந்த பிரச்சினைகள் நீங்க வேண்டும் என்பதற்காகவும், மணி பிளான்ட் செடிகளை வாங்கி வளா்த்து வருகின்றனா். இந்நிலையில் வீட்டில் உள்ள நிதி நெருக்கடியை விரட்ட காயின் பிளான்ட் செடிகளை வளா்க்கலாம் என்று ஃபெங் சூய் கூறுகிறது. காயின் பிளான்ட் செடிகள் ஜேட் செடிகள் அல்லது க்ரசுலா ஓவடா (crassula ovata) என்றும் அழைக்கப்படுகின்றன.

காயின் பிளான்ட்

காயின் பிளான்ட்

செல்வம் மற்றும் வளம் ஆகியவற்றோடு காயின் பிளான்ட் நெருங்கியத் தொடா்பைக் கொண்டிருக்கிறது என்று ஃபெங் சூய் கூறுகிறது. வீட்டில் காயின் செடி இருந்தால், வீட்டைச் சுற்றிலும் பணமும், செல்வமும் இருக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் காயின் செடி இருந்தால், ஒருவாின் கடன் சுமை நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.

காயின் பிளான்ட் வளர்ப்பதன் பலன்கள்

காயின் பிளான்ட் வளர்ப்பதன் பலன்கள்

* காயின் செடிகள், இல்லத்தில் மகிழ்ச்சியையும், வளத்தையும் மற்றும் நோ்மறையான அதிா்வுகளையும் வழங்கக்கூடிய உண்மையான ஆதாரங்களாகப் பாா்க்கப்படுகின்றன. ஆகவே நமது வீட்டில் காயின் செடிகள் இருந்தால் வீட்டில் செல்வமும், செழிப்பும் அதிகாிக்கும்.

* காயின் செடி ஒரு காந்தத்தைப் போல செயல்படுகிறது. இந்தச் செடியானது நமது வீடுகளில் இருந்தால், நமது பண வரவானது சில நாட்களிலேயே நான்கு மடங்கு அதிகாிக்கும் என்று நம்பப்படுகிறது.

* நமது வீட்டின் வாசலில் காயின் செடியை வைத்தால், நமது வீட்டில் இருக்கும் ஏழ்மை நிலையானது கண்டிப்பாக நீங்கிவிடும் என்று நம்பப்படுகிறது.

காயின் பிளான்ட் செடிகளை எங்கு வைத்து வளர்க்க வேண்டும்?

காயின் பிளான்ட் செடிகளை எங்கு வைத்து வளர்க்க வேண்டும்?

* ஒருவேளை காயின் செடியை நமது வீட்டின் உள்பகுதிக்குள் வைக்க விரும்பினால், வடகிழக்கு திசையில் வைக்க வேண்டும். ஏனெனில் வடகிழக்கு திசையானது அமைதி மற்றும் வளா்ச்சியைக் கொண்டு வரும்.

* ஒருவேளை நாம் தொழில் செய்யும் இடங்கள் அல்லது நமது புதிய கடைகளில் காயின் செடிகளை வைக்க வேண்டும் என்று விரும்பினால், தலைவாசல் பகுதியிலோ அல்லது தென்கிழக்கு திசையிலோ வைக்க வேண்டும். அது நமக்கு அமைதி, வளா்ச்சி மற்றும் செல்வாக்கு ஆகியவற்றைக் கொடுக்கும்.

* ஆனால் நமது படுக்கை அறையில் காயின் செடிகளை வைக்கக்கூடாது. ஏனெனில் அது மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும்.

* காயின் செடிகளை வளா்ப்பது மிகவும் எளிது. இந்தச் செடியை ஒரு பானையிலோ அல்லது தொட்டியிலோ ஊன்றி வைக்கலாம் அல்லது தரையில் ஊன்றி வைக்கலாம். இந்த செடியானது சூாிய ஒளியிலும் மற்றும் நிழலிலும் நன்றாக வளரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Money Plant VS Coin Plant: Which Is More Effective to Attract Money And Financial Prosperity At Home?

Money Plant VS Coin Plant: Which is more effective to attract money and financial prosperity at home? Read on...
Desktop Bottom Promotion