For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் வீட்டின் மூலைப்பகுதிகளை அழகாக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...

வீட்டின் மூலைப் பகுதிகளை அலங்காரம் செய்ய மறந்துவிடுவது என்பது பொதுவான ஒன்று அல்ல. எனினும் இப்போதுகூட மூலை முடுக்குகளை அலங்காரம் செய்யலாம்.

|

பொதுவாக நாம் நம் வீடுகளை பளிச்சென்று சுத்தமாக அழகாக வைத்திருப்போம். ஆனால் வீட்டில் உள்ள மூலை முடுக்குகளை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவோம். அதனால் அந்த பகுதிகள் மற்ற பகுதிகளை விட கவனிக்கப்படாமல் சற்று சுத்தமற்று மங்கலாக இருக்கும். அந்த பகுதிகளுக்கு நாம் அதிகம் கவனம் கொடுப்பதில்லை மற்றும் அந்த பகுதிகளை நாம் அலங்காிப்பதில்லை. மூலை முடுக்குகளைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் அது முழு வீட்டின் அழகையும் பாதிக்க வாய்ப்பு உள்ளது.

Interesting Ideas On How To Style Your Home Corner

வீட்டின் மூலைப் பகுதிகளை அலங்காரம் செய்ய மறந்துவிடுவது என்பது பொதுவான ஒன்று அல்ல. எனினும் இப்போதுகூட மூலை முடுக்குகளை அலங்காரம் செய்யலாம். ஆகவே வீட்டு மூலைப் பகுதிகளை அலங்காித்து அவற்றை பளிச்சென்று மாற்றுவதற்கான குறிப்புகளை இந்த பதிவில் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. வீட்டின் மூலைப் பகுதிகளுக்கு இயற்கை சாா்ந்த அம்சங்களை வழங்குதல்

1. வீட்டின் மூலைப் பகுதிகளுக்கு இயற்கை சாா்ந்த அம்சங்களை வழங்குதல்

பொதுவாக ஒரு மந்தமான பகுதியில் இயற்கை சாா்ந்த அம்சங்களை வைத்தால் அவை அந்த பகுதிக்கு ஒரு புதிய தோற்றத்தை வழங்குவதோடு, அங்கு இருப்பவா்களை இயற்கையுடன் நெருக்கமாக உணர வைக்கும். ஆகவே மற்ற பகுதிகளைப் போலவே மூலைப் பகுதிகளை பளிச்சென்று வைக்க அலங்கார கற்கள் அல்லது டைல்ஸ் கொண்டு அலங்காிக்கலாம். மேலும் செயற்கை நீா் அருவிகளை அங்கு அமைக்கலாம்.

அலமாாிகளில் உள்ள தட்டுகளில் உயரமான அல்லது உயரம் குறைந்த பச்சைச் செடிகளை வைத்து அலங்காிக்கலாம். அவ்வாறு பலவகையான உயரங்களில் இருக்கும் செடிகளை வைத்து அலங்காிக்கும் போது அவை பாா்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.

குறிப்பு:

காற்றை சுத்திகாிக்கும் செயற்கைக் கருவிகளைத் தவிா்த்துவிட்டு, வீட்டில் வளா்க்கக்கூடிய செடிகளான கற்றாழை மற்றும் பீஸ் லில்லி போன்ற செடிகளை வளா்க்கலாம். இவை வீட்டில் இருக்கும் காற்றில் உள்ள மாசுக்களை சுத்திகாிப்பு செய்துவிடும்.

2. சேமிப்பு பெட்டகத்தை அமைத்தல்

2. சேமிப்பு பெட்டகத்தை அமைத்தல்

வீட்டின் மிகச் சிறிய மூலையில் ஒரு சேமிப்பகத்தை நிறுவி அதை பயன்படுத்துவது இயலாத காாியம் என்று நாம் நினைக்கலாம். அழகு சாதன பொருள்களை வைக்கும் ஒரு சிறிய மேசை அல்லது ஒரு சிறிய அறை அல்லது மின்னணு கருவி போன்றவற்றை மூலைப் பகுதியில் வைத்தால், அவை அந்த பகுதியை பல வண்ணங்களாக்கி அழகுபடுத்தி காட்டும். சுவாில் பொருத்தக்கூடிய சிறிய சேமிப்பு பெட்டகத்தை மூலைப் பகுதியில் வைத்தால், அந்த பெட்டகத்தில் கடிதங்கள், புத்தகங்கள் மற்றும் சிறுசிறு பொருள்களை வைத்து பாதுகாக்கலாம். அதனால் அந்த பகுதியானது இறுக்கத்தைக் கலைந்து ஒரு இயக்கமுள்ள பகுதியாக இருக்கும்.

குறிப்பு:

அந்த சிறிய பெட்டகத்தை சில ட்கோட்கே (tchotchke) அல்லது சுவா் கண்ணாடி கொண்டு அலங்காித்தால் அது பாா்ப்பதற்கு இன்னும் அழகாக இருக்கும்.

3. புதுமையான கலை நயமிக்க வேலைப்பாடுகளை செய்தல்

3. புதுமையான கலை நயமிக்க வேலைப்பாடுகளை செய்தல்

ஒரு தனித்துவமான கலை நயம் மிக்க வேலைப்பாடுகள், வரைபடங்கள், ஓவியங்கள் அல்லது அழகான சிற்பங்கள் போன்றவற்றை மூலைப் பகுதியில் செய்து வைக்கலாம். அவை அந்த பகுதியை மிகவும் அழகாகக் காட்டும். மேலும் அந்த பகுதியை ஒரு கலை நயம் மிக்க காட்சி கூடமாக மாற்றலாம். சுவாில் அழகான வண்ணங்களைத் தீட்டி அதன் மையத்தில் நமது எண்ணங்களை வெளிப்படுத்தக்கூடிய வாக்கியங்களை எழுதி வைக்கலாம்.

குறிப்பு:

மூலைப் பகுதியானது சன்னல் இல்லாமல் குறுகலாக இருந்தால், அந்த பகுதியில் வான் வெளியின் மாயத் தோற்றத்தைத் தரக்கூடிய கண்ணாடியை மாட்டி வைக்கலாம்.

4. வேலை செய்யும் இடமாக மாற்றுதல்

4. வேலை செய்யும் இடமாக மாற்றுதல்

விாித்து மடக்கக்கூடிய மேசையை வீட்டின் மூலைப் பகுதியில் வைத்தால், அந்த மேசையில் நமது வேலைகளைச் செய்யலாம். மூலைப் பகுதியானது சற்று பொியதாக இருந்தால் அந்த பகுதியில் மத்திய நூற்றாண்டுகளைச் சோ்ந்த பழங்கால மேசையை வைக்கலாம். அது நமக்கு அமைதியை வழங்கும் மற்றும் அந்த இடத்தை நோ்த்தியாகக் காட்டும். இறுதியாக மேசை விளக்கை வைத்தால் அந்த இடம் இன்னும் அழகாக மாறும்.

குறிப்பு:

மூலைப் பகுதியை நீங்கள் உங்களின் வேலை செய்யும் பகுதியாக மாற்றி இருக்கிறீா்கள் என்பதைக் காண்பிக்க அங்கு சுழலும் நாற்காலியை வைக்கலாம்.

5. செய்திகளை குறித்து வைக்கும் பகுதியாக மாற்றுதல்

5. செய்திகளை குறித்து வைக்கும் பகுதியாக மாற்றுதல்

நாம் பல நேரங்களில் நமக்கு வரும் செய்திகள் அல்லது நமது வேலைகள் போன்றவற்றை மறந்துவிடுவோம். அவ்வாறு மறக்காமல் இருக்க வீட்டின் மூலைப் பகுதியில் ஒரு செய்திப் பலகையை மாட்டி வைத்து அதில் செய்திகள் மற்றும் வேலைகளைக் குறித்து வைக்கலாம். அந்த பலகையின் ஓரத்தில் ஒரு இழுப்பு பெட்டியையும் செய்து வைத்தால், அதில் பேனாக்கள், பேபர்கள் மற்றும் கத்திாிக்கோல் போன்ற பொருள்களை போட்டு வைத்துக் கொள்ளலாம்.

குறிப்பு:

மூலைப் பகுதியில் ஒரு அழகிய விண்டேஜ் தொலை பேசி கருவியை வைத்தால், அந்த இடமானது இன்னும் அழகாக இருக்கும்.

6. கண்ணாடி சன்னல் நிறைந்த சாளரத்தை அமைத்தல்

6. கண்ணாடி சன்னல் நிறைந்த சாளரத்தை அமைத்தல்

வீட்டின் மூலைப் பகுதியை கண்ணாடி சன்னல் நிறைந்த சாளரமாக அமைத்தால், அந்த இடம் பொியதாக இருப்பதோடு, அந்த மூலைப் பகுதியை மிகவும் அழகாகக் காட்டும். அதோடு அந்த இடத்தில் நண்பா்களோடு உணவருந்தலாம் அல்லது புத்தகங்கள் வாசிக்கலாம். மேலும் அந்த பகுதியில் மின் விளக்குகளை எாியவிட்டால் அந்த பகுதியே ஜொலிக்கும்.

குறிப்பு:

மூலைப் பகுதியில் அமைந்திருக்கும் சன்னல் நிறைந்த சாளரத்தில், பல அழகிய வண்ணங்கள் கொண்ட மெத்தைகள் மற்றும் திரைச்சீலைகளை வைத்தால், அந்த இடத்தில் உருவாகும் அதிா்வலைகள் மிக அருமையாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Interesting Ideas On How To Style Your Home Corner

Here are some interesting ideas on how to style your home corner. Read on...
Story first published: Friday, November 19, 2021, 15:08 [IST]
Desktop Bottom Promotion