Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
ஜாம்பி வைரஸ்: சைபீரியாவில் உறைந்த ஏரிக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட 48,500 ஆண்டுகள் பழமையான வைரஸ்!
ஐரோப்பிய விஞ்ஞானிகள் சைபீரியாவில் உள்ள பெர்மாஃப்ரோஸ்டில் இருந்து பழங்கால மாதிரிகளை சேகரித்து வந்து ஆய்வு செய்தனர். அந்த மாதிரிகளை மீட்டெடுத்து 13 வைரஸ்களாக வகைப்படுத்தி, அவற்றிற்கு 'ஜாம்பி வைரஸ்' என்று பெயரிட்டுள்ளனர்.
Zombie Virus: சைபீரியாவில் உறைந்த ஏரிக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட 48,500 ஆண்டுகள் பழமையான ஜாம்பி வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா என்னும் கொடிய வைஸின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி, ஏதோ தற்போது சற்று மீண்டு வந்துள்ளோம். இப்படியிருக்க மறுபுறம் ஆராய்ச்சியாளர்கள் பல வைரஸ்களை கண்டுபிடித்து அவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.

நீண்ட காலமாகவே ஆராய்ச்சியாளர்கள், வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களும், புவி வெப்பமயமாதலும் பனிக்கட்டிகளை அதிகம் உருகச் செய்து, மீத்தேன் போன்ற பசுமை இல்ல வாயுக்களை வெளியிட்டு, சுற்றுச்சூழலை மோசமாக்கும் என்று எச்சரித்தனர்.
இந்நிலையில் பருவகால மாற்றத்தால் பூமியில் உள்ள பனிக்கட்டிகள் உறைய ஆரம்பித்து மனிதர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்பதை ஆய்வு ஒன்று நிரூபித்துள்ளது. பிரெஞ்சு தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சைபீரியாவில் உள்ள பெர்மாஃப்ரோஸ்டில் இருந்து 2 டஜனுக்கும் அதிகமான பழமையான வைரஸ்களைக் கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளனர்.
ஐரோப்பிய விஞ்ஞானிகள் சைபீரியாவில் உள்ள பெர்மாஃப்ரோஸ்டில் இருந்து பழங்கால மாதிரிகளை சேகரித்து வந்து ஆய்வு செய்தனர். அந்த மாதிரிகளை மீட்டெடுத்து 13 வைரஸ்களாக வகைப்படுத்தி, அவற்றிற்கு 'ஜாம்பி வைரஸ்' என்று பெயரிட்டுள்ளனர். இந்த வைரஸ்கள் பல ஆண்டுகளாக பனியில் உறைந்த நிலையில் சிக்கியிருந்தாலும், அவை கடுமையான நோய்த்தொற்றை உண்டாக்கும் வைரஸ்கள் என்பதை கண்டறிந்துள்ளனர்.
அவற்றில் பண்டோராவைரஸ் யெடோமா என்னும் ஒரு வைரஸ் 48,500 ஆண்டுகளுக்கு பழமையானது என்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும், பனிக்கு அடியில் சிக்கியிருக்கும் பண்டைய வைரஸ்களை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பது இது முதல் முறை அல்ல.
இதற்கு முன் இப்படி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா?
ஆம், இதே ஆராய்ச்சியாளர்கள் 2014 ஆம் ஆண்டில் 30,000 ஆண்டுகள் பழமையான வைரஸ் ஒன்றை பெர்மாஃப்ரோஸ்டில் உறைந்த நிலையில் கண்டுபிடித்தனர். மேலும் அந்த வைரஸ் உயிரினங்களை மோசமாக பாதிக்கக்கூடியது என்பதையும் உறுதிப்படுத்தினர். அதன் பின் தற்போது 13 பழமையான வைரஸ்களைக் கண்டுபிடித்து, அவற்றையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இருப்பினும் இந்த கண்டுபிடிப்பு பூமிக்கும் மிகவும் அச்சுறுத்தலை அளிக்கிறது என்றே கூற வேண்டும். ஏனெனில் பூமியில் பல ஆண்டுகளாக உறைந்திருந்த பனி உருக ஆரம்பிக்கும் போது, அதில் பூட்டப்பட்ட இரசாயனங்கள் மற்றும் பாக்டீரியாக்கள், பனிக்கட்டிகள் உருகும் போது வெளியிடப்படுகின்றன. இதன் விளைவாக நமக்கு தெரியாத பழமையான வைரஸ் தொற்றுக்கள் மக்களிடையே பரவும் அபாயம் அதிகம் உள்ளது. அதுவும் தொழில்முறை முயற்சிகள் காரணமாக ஆர்டிக்கில் அதிகமான மக்கள் வசிக்க தொடங்கியுள்ளதால், பாதிப்புகள் இன்னும் அதிகரிக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

