For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!

ஆரோக்கியமான உணவு உங்கள் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆதலால், ஆரோக்கியமான உணவு உங்கள் சிறுநீரகத்தையும் பாதுகாக்கும்.

|

நாம் வெளிப்படையாகப் பேசாத தலைப்புகளில் சிறுநீரூம் ஒன்று. ஆம், கூச்சம் மற்றும் அசெளகரியம் காரணமாக சிறுநீர் கழிப்பதை பற்றி நாம் யாரிடமும் பொதுவாக பேசுவதில்லை. ஆனால் உண்மை என்னவென்றால், சிறுநீரின் நிறம் உங்கள் உணவுப் பழக்கம் மற்றும் உங்கள் நல்வாழ்வைப் பற்றி நிறைய கூறுகிறது. உங்கள் உடல் ஒரு நோய் அல்லது சுகாதார நிலையின் அறிகுறிகளை காட்டாமல் இருக்கலாம், ஆனால் உங்கள் சிறுநீரின் நிறம் அதை ஓரளவு வெளிப்படுத்தும். பொதுவாக சிறுநீர் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். மஞ்சள் நிற சிறுநீர் இருக்கும் வரை, நாம் கவலைப்பட வேண்டியதில்லை என்பது பலருக்குத் தெரியும்.

Your urine colour says a lot about your health in tamil

ஆனால் உங்கள் சிறுநீர் வெவ்வேறு நிறங்களைக் காட்டினால், நீங்கள் மருத்துவரிடம் செல்ல வேண்டும். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சிறுநீரின் நிறங்கள் பல உள்ளன. அவை உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்பது குறித்து இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறுநீரின் நிறங்கள்

சிறுநீரின் நிறங்கள்

சிறுநீரின் சாதாரண நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். உங்களுக்கு சிறுநீர் சிவப்பு நிறமாக வந்தால், அதை புறக்கணிக்கப்படக்கூடாது. உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும். பிங்க் அல்லது ஆரஞ்சு நிறத்தில் உங்களுக்கு சிறுநீர் வெளியேறினால், பீட்ரூட் போன்ற சில உணவுப் பொருட்கள் அல்லது உணவில் இருக்கும் சில சாயங்கள் அல்லது ரிஃபாம்பிகின் மற்றும் பைரிடியம் போன்ற மருந்துகள் காரணமாக இருக்கலாம். மேகமூட்டமான சிறுநீர் நீரிழப்பு, சிறுநீர் பாதை நோய்த்தொற்று அறிகுறியாக இருக்கலாம். அடர் பழுப்பு நிற சிறுநீர் சில மருந்துகள் அல்லது கல்லீரல் நோய் காரணமாக இருக்கலாம். நீலம் மற்றும் பச்சை மிகவும் அரிதானவை. அவை சில அரிய வகை சிறுநீர் தொற்றுகளில் அல்லது சிறுநீர் அமைப்பில் சாயம் செலுத்தப்படும் சில அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு நிகழ்கின்றன.

மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய சிறுநீரின் நிறம்

மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய சிறுநீரின் நிறம்

உங்கள் சிறுநீர் சிவப்பு நிறமாக வெளியேறினால், அதை புறக்கணிக்காமல் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும். ஏனெனில் இது சிறுநீர்ப்பை அல்லது சிறுநீரக புற்றுநோயின் முதல் அறிகுறியாக இருக்கலாம். இல்லையெனில், சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளில் கற்கள் இருக்கும் பிரச்சனையாகக் கூட இருக்கலாம். சில நேரங்களில் உங்கள் சிறுநீர் சிவப்பு நிறமாக இருப்பது, சிறுநீரில் இரத்தம் வெளியேறுவதால் நடக்கலாம். மருந்துகள், கற்கள், சிறுநீர் பாதை நோய் தொற்று(UTI) அல்லது அறுவை சிகிச்சை ஆகியவை பிற காரணங்களாகும். எந்த அறிகுறி உங்களுக்கு இருந்தாலும், இல்லையென்றாலும் இதை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது.

பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

பெரும்பாலும் இது சிறுநீர்ப்பை, சிறுநீரகம் அல்லது புரோஸ்டேட் புற்றுநோயின் முதல் அறிகுறியாகும். பெண்களில், சில சமயங்களில் பிறப்புறுப்பில் இருந்து இரத்தம் வெளியேறி சிறுநீரில் இரத்தமாக தோன்றும். இது மாதவிடாய் காரணமாக இருப்பதாக ஒருபோதும் கருத வேண்டாம். ஆதலால், எப்போதும் மருத்துவரை அணுகுவது நல்லது. மாதவிடாய் நிற்கும் வயதைக் கடந்த எந்தவொரு பெண்ணுக்கு சிறுநீர் சிவப்பு நிறத்தில் வந்தால், அதை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது. இது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அறிகுறியாக கூட இருக்கலாம். ஆரோக்கியமான சிறுநீரின் நிறத்தைப் பெறுவதற்கான குறிப்புகள் பற்றி இங்கே காணலாம்.

நன்கு நீரேற்றமாக இருங்கள்

நன்கு நீரேற்றமாக இருங்கள்

தேவைக்கேற்ப தண்ணீர் மற்றும் திரவங்களை குடிக்கவும். உங்கள் சிறுநீர் மிகவும் இருண்ட நிறமாக வந்தால், நீங்கள் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். மிகத் தெளிவான சிறுநீர் என்றால் நீங்கள் அதிகமாக நீரேற்றம் அடைந்துள்ளீர்கள் என்று அர்த்தம். உடலில் திரவம் சுமை அல்லது தக்கவைப்பு அல்லது குறைந்த உப்பு அளவு (ஹைபோநெட்ரீமியா) ஏற்படுத்தும் மருத்துவ நிலைமைகளின் ஆபத்து இருந்தால் தண்ணீர் அதிகமாக குடிப்பதை குறைக்கவும்.

உங்கள் உணவை சரி பார்க்க வேண்டும்

உங்கள் உணவை சரி பார்க்க வேண்டும்

ஆரோக்கியமான உணவு உங்கள் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆதலால், ஆரோக்கியமான உணவு உங்கள் சிறுநீரகத்தையும் பாதுகாக்கும். ஆனால் அதிக நிறம் கொண்ட உணவுப் பொருட்களை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், நிறம் கொண்ட உணவுகளை சாப்பிடும்போது, உங்கள் சிறுநீரும் சில சமயங்களில் அந்த நிறங்களில் வரலாம். இதனால், நீங்க குழப்பமடையலாம்.

சிவப்பு நிற சிறுநீர் பாதிப்பில்லாதது எனக் கருத வேண்டாம்

சிவப்பு நிற சிறுநீர் பாதிப்பில்லாதது எனக் கருத வேண்டாம்

சிறுநீரின் சிவப்பு நிறம் சில உணவுப் பொருட்களால் ஏற்படுகிறது என்று தவறாக கருத வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள். அது இரத்தம் வெளியேறுவது மற்றும் பாதிப்பில்லாதது அல்லது வேறுவிதமான காரணமாக இருக்கலாம் என நிராகரிக்க வேண்டாம். உடனே மருத்துவ உதவியை நாடுவது, உங்களுக்கு வரவிருக்கும் ஆபத்தை குறைக்க உதவும்.

மேகமூட்டமான சிறுநீர் அல்லது நுரை சிறுநீர்

மேகமூட்டமான சிறுநீர் அல்லது நுரை சிறுநீர்

இது சிறுநீரக நோய் அல்லது சிறுநீர்ப்பை நிலை (உங்கள் சிறுநீர்ப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்கும் வழிகள்) அறிகுறியாக இருக்கலாம் என்பதால் இதில் கவனம் தேவை. அதிகப்படியான தண்ணீரை உட்கொள்வது அதை மறைக்கக்கூடும். ஆனால் காரணத்தை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். சிறுநீர் கழித்து முடித்தவுடன், உங்கள் சிறுநீரின் நிறத்தைப் பார்ப்பதை எப்போதும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். ஒரு அசாதாரண சிறுநீரின் நிறத்தைக் கண்டறிதல் மற்றும் அதன் தீவிரமான மருத்துவ நிலைகளில் இருந்து உங்களைக் காப்பாற்றலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Your urine colour says a lot about your health in tamil

Here we are talking about the Your urine colour says a lot about your health in tamil.
Story first published: Wednesday, February 1, 2023, 12:37 [IST]
Desktop Bottom Promotion