For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2021-ல் உலகில் பீதியைக் கிளப்பி பெரும் அழிவை ஏற்படுத்திய கொடிய வைரஸ்கள்!

2021 ஆம் ஆண்டில் கொரோனா மட்டுமின்றி, மக்களை அழிப்பதற்கு பல வைரஸ்கள் புதிதாக நுழைந்தன. முக்கியமாக இவையும் அச்சுறுத்தும் வகையில் பல மோசமான தாக்கங்களை ஏற்படுத்தின.

|

வரலாற்றில் ஒட்டு மொத்த உலகையும் மாற்றிய ஓர் வைரஸ் என்றால் அது கொரோனாவாகவே இருக்கும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் இதன் தாக்கத்தை உணரும் வகையில் கொரோனா நம் அனைவரது மனதிலும் ஒரு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் லட்சக்கணக்கான மக்கள் அழிக்கப்பட்டதுடன், லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் கடுமையான நெருக்கடியில் இருக்க வேண்டியிருந்தது. இந்த கொடிய கொரோனாவிற்கு எதிராக தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், இந்த வைரஸ் குறிப்பிட்ட இடைவெளியில் உருமாற்றமடைந்து பரவிக் கொண்டிருக்கிறது. இந்த மோசமான கொரோனா எப்போது தான் நம்மை விட்டு போகும் என்பது இன்னும் தெரியவில்லை.

Yearender 2021: Corona And Other Virus Attacks In 2021

இத்தகைய ஒரு சூழ்நிலையில் 2021 ஆம் ஆண்டில் கொரோனா மட்டுமின்றி, மக்களை அழிப்பதற்கு பல வைரஸ்கள் புதிதாக நுழைந்தன. முக்கியமாக இவையும் அச்சுறுத்தும் வகையில் பல மோசமான தாக்கங்களை ஏற்படுத்தின. அதோடு இவற்றில் சில எதிர்காலத்தில் உலகிற்கு பெரும் பிரச்சனையை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்போது 2021 இல் பெரும் அழிவை ஏற்படுத்திய வைரஸ்களைப் பற்றி காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எபோலா வைரஸ்

எபோலா வைரஸ்

எபோலா என்பது எபோலா என்னும் வைரஸால் ஒருவரிடம் இருந்து மற்றெருவருக்கு பரவும் மிகவும் கொடிய நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பாதி பேர் இறந்துள்ளனர். இந்த நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு, பாதிக்கப்பட்டவர்களிடம் காய்ச்சல், சோர்வு, தசை வலி, தொண்டை வலி போன்ற அறிகுறிகள் தோன்றும். அதனைத் தொடர்ந்து வயிற்றுபோக்கு மற்றும் வாந்தியும் ஏற்படும். 2021 ஆம் ஆண்டு இந்த எபோலா காங்கோவில் பேரழிவை ஏற்படுத்தியது. 2014 ஆம் ஆண்டு முதல் இந்த நோய் ஒரு தொற்றுநோய் மாதிரி இருந்து வருகிறது. கினியா, சியரா லியோன் மற்றும் லைபீரியா ஆகிய பகுதிகள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. உலக சுகாதார அமைப்பு எதிர்காலத்தில் உலகில் பேரழிவை ஏற்படுத்தும் மிகவும் ஆபத்தான நோய்களின் பட்டியலில் இதை சேர்த்துள்ளது. 2016 ஆம் ஆண்டு வரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்த எபோலா, 2021 ஆம் ஆண்டு மீண்டும் பரவ ஆரம்பித்தது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்த ஆண்டு மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் மொத்தம் 23 எபோலா வழக்குகள் பதிவாகியுள்ளன, இதில் 12 பேர் இறந்துள்ளனர்.

நிபா வைரஸ்

நிபா வைரஸ்

1999 ஆம் ஆண்டு மலேசியாவில் பரவத் தொடங்கி இன்று பல நாடுகளில் நிபா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, நிபா வைரஸ் இந்தியாவைத் தவிர, வங்கதேசம், கம்போடியா, இந்தோனேசியா, மடகாஸ்கர், பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் வெடித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு கேரளாவில் நிபா வைரஸால் 12 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டம்பர் 4 ஆம் தேதி, கேரளாவில் ஐந்தாவது நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த நோய்த்தொற்றில் காய்ச்சல், சளி, தலைவலி, மூச்சுத் திணறல் மற்றும் மாயத்தோற்றம் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. தொற்று ஏற்பட்ட இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நோயாளி கோமா நிலைக்குச் செல்கிறார். முக்கியமாக இந்த நோயால் பாதிக்கப்பட்ட பிறகு, 50 முதல் 75 சதவீதம் பேர் இந்நோய்த்தொற்றால் இறக்கின்றனர்.

ஜிக்கா வைரஸ்

ஜிக்கா வைரஸ்

2021 ஆம் ஆண்டு இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜிக்கா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த ஜிக்கா வைரஸால் கேரளாவில் தான் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் வழக்கு உகாண்டாவில் இருந்து வந்தது. லேசான காய்ச்சல், தோல் வெடிப்பு, கண்களில் அரிப்பு, உடல் வலி போன்ற அறிகுறிகள் இந்த நோயில் காணப்படுகின்றன.

மார்பர்க் வைரஸ்

மார்பர்க் வைரஸ்

எபோலா வைரஸைப் போலவே, மார்பர்க் வைரஸ் மிகவும் ஆபத்தானது. இந்த வைரஸ் எபோலா குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ் ஆகும். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் சுமார் 88 சதவீதம் பேர் இறக்கின்றனர். 1967 ஆம் ஆண்டில், இந்நோய்த்தொற்று முதன்முதலில் ஜெர்மனி மற்றும் செர்பியாவில் ஏற்பட்டது. ஆனால் இன்று பல ஆப்பிரிக்க நாடுகளுக்கு இது பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இந்த ஆண்டு கினியா மற்றும் உகாண்டாவில் மெர்பர்க் வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நோயில் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியின் அறிகுறிகளும் காணப்படுகின்றன. பெரும்பாலான நோயாளிகள் இரத்தப்போக்கு தொடங்கியவுடன் இறக்கின்றனர்.

மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever)

மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever)

மஞ்சள் காய்ச்சல் வைரஸ் வேகமாக பரவக்கூடியது. 2021 ஆம் ஆண்டு நைஜீரியாவில் 1312 பேர் மஞ்சள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். கொசுக்கடியால் பரவும் இந்த வைரஸ், கல்லீரல் மற்றும் சிறுநீரங்களில் பாதிப்பை ஏற்படுத்த தொடங்குகிறது. இத்தொற்று ஏற்பட்டால் காய்ச்சல், வாந்தி, வயிற்று வலி, மஞ்சள் காமாலை போன்ற அறிகுறிகள் காணப்படும். சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், நோயாளி 7 முதல் 10 நாட்களுக்குள் இறக்கலாம். ஆனால் இந்த நோயை தடுப்பூசி மூலம் தவிர்க்கலாம்.

நோரோ வைரஸ்

நோரோ வைரஸ்

2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கேரளாவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் 13 மாணவர்களுக்கு நோரோ வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் கடுமையான வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்த வைரஸ் முதன்முதலில் 1968 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நார்வாக் நகரத்தில் கண்டறியப்பட்டது. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் படி, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற பிரச்சனையால் அவதிப்படும் 5-ல் ஒருவர் நோரோ வைரஸ் உடன் தொடர்புடையவராவார்.

ரிஃப்ட் வேலி காய்ச்சல் (Rift Valley Fever)

ரிஃப்ட் வேலி காய்ச்சல் (Rift Valley Fever)

ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் ரிஃப்ட் வேலி காய்ச்சல் பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட விலங்கு அல்லது கொசுக்கள் மூலம் பரவுகிறது. இந்த ரிஃப்ட் வேலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்தப்போக்கு ஏற்படுவதோடு, அவர்கள் மனகுழப்பத்துடன் இருப்பர். இந்த நோய்த்தொற்று கல்லீரலை வேகமாக அடையக்கூடியது என்பதால், இது மிகவும் ஆபத்தானது. ரிஃப்ட் வேலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு ரத்தம் வர ஆரம்பித்தால், அவர்களில் 50 சதவீதம் பேர் இறப்பது உறுதி. 2021 ஆம் ஆண்டு கென்யாவில் 32 ரிஃப்ட் வேலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Yearender 2021: Coronavirus And Other Virus Attacks In 2021

yearender 2021: In this article, we listed some virus attacks in 2021. Read on to know more...
Desktop Bottom Promotion