For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பிரச்சனை இருந்தா அசால்ட்டா இருக்காதீங்க.. அது உயர் இரத்த அழுத்தத்தோட எச்சரிக்கை அறிகுறி!

ஒவ்வொரு ஆண்டும் மே 17 ஆம் தேதி உலக உயர் இரத்த அழுத்த தினம் என்பதால், உயர் இரத்த அழுத்த பிரச்சனையின் சில எச்சரிக்கை அறிகுறிகளைக் காண்போம்.

|

உயர் இரத்த அழுத்தம் என்பது அமைதியாக ஆளைக் கொல்லக்கூடிய ஒரு கொடிய பிரச்சனை. பெரும்பாலான நேரங்களில் உயர் இரத்த அழுத்தத்திற்கு என்று குறிப்பிடத்தக்க அறிகுறிகள் எதுவும் இல்லை. அப்படியே அறிகுறிகள் இருந்தாலும், அது நாம் புறக்கணிக்கக்கூடிய அறிகுறிகளாகவே இருக்கும். ஆனால் இரத்த அழுத்த பிரச்சனைகளை கவனித்து அதற்கான சிகிச்சைகள் அல்லது மருந்துகளை எடுக்காமல் இருந்தால், அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். குறிப்பாக உயர் இரத்த அழுத்தம் தீவிரமானால் அது மாரடைப்பு, இதய செயலிழப்பு, அனியூரிசம், பக்கவாசதம், நினைவாற்றல் பிரச்சனை அல்லது டிமென்ஷியா போன்றவற்றை உண்டாக்கிவிடும். எனவே இரத்த அழுத்தத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருவது நோய்களின் அபாயத்தைத் தவிர்க்க உதவும்.

World Hypertension Day 2022: Signs Of High Blood Pressure You Shouldnt Ignore In Tamil

உலகளவில் சுமார் 1.13 பில்லியன் மக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெண்களை விட ஆண்கள் தான் இப்பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவும் 5 இல் ஒருவர் மட்டுமே கட்டுப்பாட்டில் உள்ளனர். மற்றவர்கள் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் நோய்களை எதிர்கொண்டு வருகிறார்கள். உயர் இரத்த அழுத்தம் வயதானவர்களிடையே இருந்த போதிலும், தற்போது இப்பிரச்சனை இளைஞர்களிடையேயும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே 17 ஆம் தேதி உலக உயர் இரத்த அழுத்த தினம் என்பதால், உயர் இரத்த அழுத்த பிரச்சனையின் சில எச்சரிக்கை அறிகுறிகளைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூக்கில் இரத்தம் வடிதல்

மூக்கில் இரத்தம் வடிதல்

சைனசிடிஸ் பிரச்சனையால் மட்டும் மூக்கில் இருந்து இரத்தம் வடிவது இல்லை, ஒருவரது இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தாலும் மூக்கில் இரத்தக்கசிவு ஏற்படும். எனவே உங்களுக்கு திடீரென்று மூக்கில் இருந்து இரத்தம் வடிந்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

தலைவலி

தலைவலி

உங்களுக்கு அடிக்கடி தலைவலி வந்து தொல்லை கொடுக்கிறதா? அப்படியானால் உங்களுக்கு இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கலாம். இரத்த அழுத்தம் அதிகம் உள்ள பெரும்பாலானோர் தலைவலியால் அவதிப்படுகிறார்கள். எனவே விழிப்புடன் இருந்து உடனே சிகிச்சை பெற முயலுங்கள். அதிலும் கடுமையான தலைவலியை பின்புற மண்டையில் அனுபவித்தால், உடனே மருத்துவரை அணுகி இரத்த அழுத்தத்தை பரிசோதிக்க வேண்டும்.

சோர்வு

சோர்வு

உங்களால் அலுவலக வேலை அல்லது வீட்டு வேலைகளை எளிதாக செய்ய முடியவில்லையா? அப்படியானால் அதற்கு உயர் இரத்த அழுத்தம் ஓர் காரணமாக இருக்கலாம். ஒருவேளை ஒன்றும் செய்யாத போதும் கடுமையான உடல் சோர்வை உணர்கிறீர்களா? அப்படியெனில் உடனே மருத்துவரை அணுகி இரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.

மூச்சுத் திணறல்

மூச்சுத் திணறல்

உங்களுக்கு கடந்த சில நாட்களாக மூச்சுத் திணறல் ஏற்படுகிறதா? ஒருவருக்கு இரத்த அழுத்த அளவு அதிகமாக இருக்கும் போது தான் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். சொல்லப்போனால் உயர் இரத்த அழுத்தத்தின் பொதுவான அறிகுறிகளுள் மூச்சுத் திணறலும் ஒன்றாகும்.

மங்கலான பார்வை

மங்கலான பார்வை

உயர் இரத்த அழுத்தத்திற்கு சரியான சிகிச்சையை ஒருவர் மேற்கொள்ளாமல் இருந்தால் அது ஒருவரின் பார்வையை பாதிக்கும். அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக பார்க்கும் திறன் குறைந்து பார்வை மங்கலாகும். சொல்லப்போனால் உயர் இரத்த அழுத்தத்தில் மற்றொரு தீவிரமான அறிகுறி பார்வை மங்கலாவது. எனவே இம்மாதிரியான அறிகுறி தென்பட்டால் அலட்சியமாக இருக்காமல், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

நெஞ்சு வலி

நெஞ்சு வலி

உடலில் இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் போது, நெஞ்சு வலி ஏற்படுகிறது. இம்மாதிரியான சூழ்நிலையில் சற்றும் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்க முயற்சிக்க வேண்டும். ஒருவேளை புறக்கணித்தால், அது கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுத்து உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிப்பது எப்படி?

உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிப்பது எப்படி?

உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு தினமும் ஒருசில விஷயங்களைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

* முதன்மையான ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்றி, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அதன் பின் தினமும் உடற்பயிற்சியில் தவறாமல் ஈடுபட வேண்டும்.

* புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்ற பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.

* கூடுதலாக, அவ்வப்போது இரத்த அழுத்தத்தைக் கண்காணித்து வர வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

World Hypertension Day 2022: Signs Of High Blood Pressure You Shouldn't Ignore In Tamil

World Hypertension Day 2022: Here are some signs of high blood pressure you shouldn't ignore. Read on...
Desktop Bottom Promotion