For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமைதியாக உயிரைப் பறிக்கும் கணைய புற்றுநோய் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

புற்றுநோய்களில் பல வகைகள் உள்ளன. அவை அனைத்தும் புற்றுநோய் செல்கள் வளரும் பகுதியைப் பொறுத்தது. மேலும் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க முடியாத ஒரு புற்றுநோய் என்றால், அது கணைய புற்றுநோய் தான்.

|

World Cancer Day 2023: புற்றுநோய்களில் பல வகைகள் உள்ளன. அவை அனைத்தும் புற்றுநோய் செல்கள் வளரும் பகுதியைப் பொறுத்தது. மேலும் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க முடியாத ஒரு புற்றுநோய் என்றால், அது கணைய புற்றுநோய் தான். கணையமானது அடிவயிற்றில் அமைந்துள்ள ஒரு முக்கியமான உறுப்பாகும். இந்த கணையத்தில் உள்ள திசுக்கள் கட்டுப்பாடின்றி வளரும் போது கணைய புற்றுநோய் ஏற்படுகிறது.

 World Cancer Day 2023: Pancreatic Cancer Causes, Symptoms, Prevention And Treatment In Tamil

மனித உடலில் கணையமானது மிகவும் முக்கியமான உறுப்பு மற்றும் இது உடலில் செரிமான நொதிகளை சுரப்பது மற்றும் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவும் ஹார்மோன்களை உற்பத்தி செய்வது போன்ற முக்கியமான பணிகளை செய்கிறது. கணையத்தில் உள்ள எக்ஸோகிரைன் செல்கள் மற்றும் நியூரோஎண்டோகிரைன் செல்கள் போன்ற செல்கள் தான் கணைய புற்றுநோயை உண்டாக்கக்கூடிய செல்களாகும். இதில் நியூரோஎண்டோகிரைன் வகையை விட எக்ஸோகிரைன் வகை தான் மிகவும் பொதுவானது. அதே சமயம் கணைய புற்றுநோயை முற்றிய கட்டத்தில் தான் கண்டுபிடிக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கணைய புற்றுநோயின் அறிகுறிகள்

கணைய புற்றுநோயின் அறிகுறிகள்

பெரும்பாலும் கணைய புற்றுநோய் ஆரம்ப கட்டத்தில் எவ்வித அறிகுறிகளையும் வெளிக்காட்டாது. முற்றிய கட்டத்தில் தான் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். அதில் சில கவனிக்க வேண்டிய முக்கியமான அறிகுறிகள் பின்வருமாறு:

* பசியின்மை அல்லது விவரிக்கமுடியாத எடை இழப்பு

* அடர் நிறத்தில் சிறுநீர் கழிப்பது

* சரும அரிப்பு

* சருமம் மற்றும் கண்கள் சற்று மஞ்சள் நிறத்தில் காணப்படுவது

கணைய புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?

கணைய புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?

கணைய புற்றுநோய் ஏற்படுவதற்கான சரியான காரணங்கள் தெரியவில்லை. ஆனால் இந்த கணைய புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கக்கூடிய சில காரணிகளை மருத்துவர்கள் கூறுகின்றனர். அவை புகைப்பிடிப்பது மற்றும் குறிப்பிட்ட சில மரபணு மாற்றங்கள் போன்றவை அடங்கும்.

கணைய புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் காரணிகள்

கணைய புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் காரணிகள்

* புகைப்பிடிப்பது

* சர்க்கரை நோய்

* நாள்பட்ட கணைய அழற்சி

* கணைய புற்றுநோயின் குடும்ப வரலாறு

* உடல் பருமன்

* 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

சிகிச்சைகள்

சிகிச்சைகள்

பொதுவாக புற்றுநோய்க்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சையின் முதல் நோக்கமே புற்றுநோய் செல்களை அகற்றுவது தான். ஒருவேளை அது சாத்தியமில்லாவிட்டால், நோயாளியின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிம், புற்றுநோயை வளரவிடாமல் தடுத்து, அதனால் ஏற்படும் விளைவுகளை தடுக்கும்படியான சிகிச்சைகள் கொடுக்கப்படும்.

கணைய புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் ஹீமோதெரபி அல்லது புற்றுநோயின் தீவிரம் மற்றும் நோயாளியின் நிலைமையைப் பொறுத்து மூன்று சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படலாம்.

தடுப்பு முறைகள்

தடுப்பு முறைகள்

கணைய புற்றுநோய் வரக்கூடாதெனில் ஒருசில பழக்கங்களைக் கொள்ள வேண்டும். அவை பின்வருமாறு:

* புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், முதலில் அப்பழக்கத்தைக் கைவிட வேண்டும். இதனால் கணைய புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கலாம்.

* ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பதன் மூலம் கணைய புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கலாம். ஒருவேளை நீங்கள் அதிக உடல் எடையுடன் இருந்தால், அதைக் குறைக்க தினசரி உடற்பயிற்சிகளை மேற்கொள்வதோடு, காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் போன்றவற்றை தினசரி உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள். இதனால் உடல் எடை குறைவதோடு, புற்றுநோயின் அபாயமும் குறையும்.

* பலவண்ண காய்கறிகள் மற்றும் பழங்களை தினமும் அதிகமாக சாப்பிடுவதன் மூலம், அனைத்து வகையான புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

World Cancer Day 2023: Pancreatic Cancer Causes, Symptoms, Prevention And Treatment In Tamil

World Cancer Day 2023: Pancreatic Cancer Causes, Symptoms And Treatment In Tamil, Read on to know more...
Desktop Bottom Promotion