For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆர்த்ரிடிஸ் வலியால் அவஸ்தைப்படுறீங்களா? அப்ப இத தினமும் நைட் தடவுங்க..

ஆயுர்வேதத்தின் படி, கடுகு வெதுவெதுப்பான தன்மையை உற்பத்தி செய்யும். ஆகவே இந்த பொருளை வலியுள்ள இடத்தின் மீது தடவும் போது, வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

|

ஆர்த்ரிடிஸ் என்பது கடுமையான வலியுடைய மூட்டு வீக்கமாகும். இன்று நிறைய பேர் கஷ்டப்படுவது ஆர்த்ரிடிஸ் பிரச்சனையால் தான். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட பல வழிகளை முயற்சித்துள்ளீர்களா? இருப்பினும் எந்த பலனும் கிடைக்கவில்லையா? ஆர்த்ரிடிஸ் வலியில் இருந்து விடுபட, நீங்கள் மாத்திரைகளை கட்டாயம் எடுக்க வேண்டிய நிலையில் தள்ளப்பட்டிருப்பீர்கள். ஆனால் அப்படி எடுக்கும் மாத்திரைகளால் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது தெரியுமா?

World Arthritis Day 2019: Get Rid Of Arthritis Pain With This Simple Home Remedy

ஆனால் கவலைப்படாதீர்கள், ஆர்த்ரிடிஸ் வலியால் கஷ்டப்படுபவர்களுக்கான ஒரு எளிய வழியை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. ஆர்த்ரிடிஸ் வலியானது ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

MOST READ: நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், வலிமையுடனும் இருக்க வேண்டுமா? அப்படின்னா காலையில இத சாப்பிடுங்க..

ஆர்த்ரிடிஸ் வலியானது உடலின் எந்த மூட்டு பகுதியிலும் ஏற்படலாம். ஆனால் பெரும்பாலானோருக்கு முழங்கால் பகுதியில் தான் ஆர்த்ரிடிஸ் வலி உள்ளது. முழங்கால் வலியால், நிற்பது, நடப்பது என எந்த ஒரு செயலையும் செய்ய முடியாமல் அவஸ்தைப்படக்கூடும். இப்போது ஆர்த்ரிடிஸ் வலியில் இருந்து விடுவிக்கும் ஒரு அற்புதமான வழி ஒன்றைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடுகு மற்றும் தேன்

கடுகு மற்றும் தேன்

நீங்கள் ஆர்த்ரிடிஸ் வலியில் இருந்து இயற்கையாக விடுபட நினைத்தால், கடுகு எண்ணெய் மற்றும் தேன் கொண்டு பேஸ்ட் தயாரித்துப் பயன்படுத்துங்கள். கடுகில் உள்ள செலினியம் மற்றும் மக்னீசியம், அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்று செயல்படுவதுடன், உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களை வெளியேற்றும்.

ஆயுர்வேதத்தின் படி, கடுகு வெதுவெதுப்பான தன்மையை உற்பத்தி செய்யும். ஆகவே இந்த பொருளை வலியுள்ள இடத்தின் மீது தடவும் போது, அப்பகுதியில் வெப்ப அளவு அதிகரித்து, வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். இப்போது கடுகு பேஸ்ட்டை எப்படி தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது என்று காண்போம்.

MOST READ: இதுல உங்க உதடு எந்த நிறத்தில் இருக்குன்னு சொல்லுங்க... உங்க உடம்புல இருக்குற பிரச்சனைய சொல்றோம்...

பேஸ்ட் தயாரிக்கத் தேவையான பொருட்கள்:

பேஸ்ட் தயாரிக்கத் தேவையான பொருட்கள்:

* நற்பதமான கடுகு பொடி - 1 டீஸ்பூன்

* தேன் - 1 டீஸ்பூன்

* உப்பு - 1 டீஸ்பூன்

* பேக்கிங் சோடா - 1 டேபிள் ஸ்பூன்

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

* ஒரு பௌலில் கடுகு பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் தேன், உப்பு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு ஸ்பூனால் அப்பொருட்களை ஒருசேர சற்று கெட்டியான பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.

MOST READ: நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவரா? கண் பிரச்சனை வராமலிருக்க இத படிங்க...

 பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

* தயாரித்து வைத்துள்ள கடுகு பேஸ்ட்டை வலி உள்ள இடத்தில் தடவ வேண்டும்.

* பிறகு 20-30 நிமிடம் கழித்து, அப்பகுதியை சுத்தம் செய்ய வேண்டும்.

* இப்படி தினமும் இரவு படுக்கும் முன் மற்றும் காலை வேளை என இரண்டு முறை தடவ வேண்டும்.

MOST READ: வயிறு சரியில்லையா? வாய்வு தொல்லையா? நொடியில் விடுபட இப்படி செய்யுங்க...

ஆர்த்ரிடிஸ் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

ஆர்த்ரிடிஸ் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

ஆர்த்ரிடிஸ் பிரச்சனை உள்ளவர்கள் ஒருசில உணவுகளை சற்று அதிகமாக சாப்பிட வேண்டும். இதனால் ஆர்த்ரிடிஸ் பிரச்சனை தீவிரமாவதைத் தடுக்கலாம். அந்த உணவுப் பொருட்களாவன:

* பூண்டு

* வைட்டமின் சி உணவுப் பொருட்களான ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி, கிவி

* மஞ்சள்

* இஞ்சி

* கானாங்கெளுத்தி, மத்தி மற்றும் சால்மன்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

World Arthritis Day 2019: Get Rid Of Arthritis Pain With This Simple Home Remedy

Are you troubled by the pain of Arthritis? Here we are telling you an easy way to get relief in pain of arthritis.
Desktop Bottom Promotion