Latest Updates
-
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்!
உலக எய்ட்ஸ் தினம்: எய்ட்ஸ் நோயாளிகள் தங்களின் உணவுப் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்வது?
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 ஆம் நாள் உலக எய்ட்ஸ் தினமாகும். எச்.ஐ.வி அல்லது எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் உணவுகளில் இருந்து பரவும் நோய்களிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 ஆம் நாள் உலக எய்ட்ஸ் தினமாகும். எச்.ஐ.வி அல்லது எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் உணவுகளில் இருந்து பரவும் நோய்களிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது மற்றும் உணவுகளை எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக் கொள்வது என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து மேலாண்மை அமைப்பு (FDA) பின்வரும் வழிமுறைகளைத் தந்திருக்கிறது.

பொதுவாக எச்.ஐ.வி அல்லது எய்ட்ஸ் நோயுற்றவர்களின் நோய் எதிர்ப்பு அமைப்பு பெரிதளவு பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்கள் உணவுகளின் மூலம் ஏற்படும் நோய்களால் மிக எளிதாக பாதிப்படைகின்றனர். அவ்வாறு அவர்களுக்கு உணவு மூலம் நோய் ஏற்பட்டால், அது எளிதில் குணமடையாமல் நீண்ட நாள் அவர்களுடைய உடலில் தங்கி இருக்கும். அதனால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டும். ஒரு சிலநேரம் அவர்களுக்கு மரணம் கூட ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
எய்ட்ஸ் அல்லது எச்.ஐ.வி நோயாளிகள் உணவுகளில் இருக்கும் ஆபத்துகளை அறிந்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில் ஒருசில உணவுகளில் இருக்கும் பாக்டீரியாக்கள் அல்லது வைரஸ்கள் அவர்களை எளிதில் தாக்கும் தன்மை கொண்டவை.

இரு வகை உணவுகள்
பொதுவாக உணவுகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று சமைக்காத பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள். மற்றொன்று விலங்குகளில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருள்களாகும். அதாவது காய்ச்சாத பால், பாலாடைக் கட்டிகள், சமைக்காத அல்லது பாதி சமைத்த முட்டைகள், சமைக்காத இறைச்சி, சமைக்காத கோழி, கடல் உணவுகளான சமைக்காத மீன்கள், சிப்பிகள் மற்றும் அவற்றின் சாறுகள், மதிய உணவில் பரிமாறப்படும் இறைச்சிகள் மற்றும் முறையாக பாதுகாக்கப்படாத சாலட்டுகள் போன்றவை ஆகும்.
ஆகவே எச்ஐவி அல்லது எய்ட்ஸ் நோயாளிகள் பாதுகாப்பான உணவை எடுத்துக் கொள்ள பின்வரும் 4 வழிகளைக் கடைபிடிக்க வேண்டும். அவர்கள் மட்டும் அல்ல எல்லோருமே பின்வரும் வழிகளைக் கடைபிடித்தால், உணவு மூலம் பரவும் நோய்களில் இருந்து காத்துக் கொள்ளலாம்.

சுத்தம்
முதலில் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். சமையலறை மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில் சமையலறையை மிக எளிதாக பாக்டீரியாக்கள் தாக்கிவிடும். சமையலறையில் பரவும் பாக்டீரியாக்கள் தொடர்ந்து நமது கைகள், பாத்திரங்கள், சமையல் பொருள்கள் இருக்கும் பலகை அடுக்குகள் மற்றும் உணவுகள் போன்றவற்றில் மிக விரைவாகப் பரவிவிடும்.

உணவுப் பொருட்களைப் பிரித்து தனித்து வைத்திருத்தல்
சமைக்காத இறைச்சி, கோழி, மீன், சிப்பி மற்றும் அவற்றின் சாறுகள் மற்றும் சமைக்காத முட்டைகள் போன்றவற்றை சாப்பிடுவதற்குத் தயாராக இருக்கும் உணவுகளிடமிருந்து பிரித்து தனியாக வைத்திருக்க வேண்டும்.

உணவை நன்கு சமைப்பது
உணவை சரியான வெப்பநிலையில் சமைக்க வேண்டும். இறைச்சி, கோழி, கடல் உணவுகள் மற்றும் முட்டைகள் போன்றவை சரியான மற்றும் பாதுகாப்பான வெப்பநிலையில் சமைக்கப்படுகின்றனவா என்பதை சரிபார்க்க உணவு தெர்மா மீட்டரை பயன்படுத்தலாம். உணவுகள் சரியான வெப்பநிலையில் சமைக்கப்படும் போது அவற்றில் உள்ள தீங்கிழைக்கும் பாக்டீரியாக்கள் அழிந்துவிடும்.

உணவை சரியாக குளிர வைத்தல்
உணவுகளை சரியான அளவிலும் குளிர வைக்க வேண்டும். ஏனெனில் குளிர்ந்த வெப்பநிலை உணவில் உள்ள தீங்கிழைக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை வெகுவாக குறைக்கிறது. ஆகவே குளிர்சாதன பெட்டியின் வெப்பநிலையை 40 டிகிரி பாரன்ஹீட் அல்லது அதற்கு கீழேயும், அதன் உறைநிலை வெப்பநிலையை 0 டிகிரி பாரன்ஹீட் அல்லது அதற்கு கீழேயும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு குளிர்சாதன பெட்டியின் வெப்பநிலையை அளக்க அதற்கான தெர்மா மீட்டரைப் பயன்படுத்தலாம்.

உணவினால் ஏற்படும் நோய்களின் அறிகுறிகளை அறிந்து வைத்திருத்தல்
தீங்கிழைக்கும் பாக்டீரியா உள்ள உணவை உண்ணும் போது அதை உண்ட 3 நாட்களுக்குள் நோய் வந்துவிடும். ஒருசில நேரங்களில் 20 நிமிடங்களில் இருந்து 6 வாரங்களுக்குள் நோய் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. ஒருவருக்கு உணவு மூலம் நோய் ஏற்பட்டால் பின்வரும் அறிகுறிகள் தென்படும். வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, காய்ச்சலுக்குரிய அறிகுறிகளான காய்ச்சல், தலைவலி மற்றும் உடல்வலி போன்றவை உணவு மூலம் பரவும் நோய்களுக்கான அறிகுறிகளாகும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த ஒருவருக்கு உணவு மூலம் ஏற்படும் நோய்கள், அவருடயை உடலை மட்டும் பாதிப்பதோடு அல்லாமல், அவரை இறப்பிற்கே அழைத்துச் சென்றுவிடும்.
ஆகவே மேற்கண்ட உணவு பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி வந்தால் எச்ஐவி அல்லது எய்ட்ஸ் நோயாளிகள் மிக நீண்ட நாட்கள் வாழலாம்.



Click it and Unblock the Notifications
