Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
சோளம் சாப்பிட்டதும் ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது-ன்னு தெரியுமா?
ஆயுர்வேத நிபுணரான டாக்டர் அசுதோஷ் கவுதம், சோளம் சாப்பிட்டதும் தண்ணீரைக் குடித்தால், பல்வேறு வயிற்றுப் பிரச்சனைகளை உண்டாக்கும். அதுவும் வாய்வுத் தொல்லை மற்றும் வயிற்று வலியை உண்டாக்கும் என கூறுகிறார்.
சோளம் மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பொருள். இத்தகைய சோளத்தை பலவாறு நாம் சாப்பிடுவோம். அதில் சிலர் வேக வைத்து சாப்பிடுவர். இன்னும் சிலர் நெருப்பில் சுட்டு எலுமிச்சை மற்றும் மிளகாய் தூள், உப்பு தேய்த்து சாப்பிடுவர். இது அற்புமான சுவையுடன் இருப்பதோடு, ஆரோக்கியமான ஸ்நாக்ஸாகவும் இருக்கும்.

இருப்பினும், இந்த ஆரோக்கியமான உணவுப் பொருளால் ஒரு பிரச்சனையை சந்திக்க வாய்ப்புள்ளது. அதுவும் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால், பெரும் அவஸ்தைப்பட நேரிடும். ஆயுர்வேத நிபுணரான டாக்டர் அசுதோஷ் கவுதம், சோளம் சாப்பிட்டதும் தண்ணீரைக் குடித்தால், அது பல்வேறு வயிற்றுப் பிரச்சனைகளை உண்டாக்கும். குறிப்பாக வாய்வுத் தொல்லை மற்றும் வயிற்று வலியை உண்டாக்கும் என கூறுகிறார்.

தண்ணீர் குடித்தால் ஏன் வயிற்று பிரச்சனைகள் ஏற்படுகிறது?
சோளம் சாப்பிடும் பலரும், அதை சாப்பிட்ட பின் நீர் பருகுவதால் வாய்வுத் தொல்லை மற்றும் கடுமையான வயிற்று வலியை சந்திப்பதாக கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், சோளத்தை சாப்பிட்ட பின் நீரைப் பருகுவதால், அது செரிமான செயல்பாட்டை பெரும் இடையூறை ஏற்படுத்துமாம். சோளத்தில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் ஸ்டார்ச் உள்ளது மற்றும் உடனே நீரைக் குடித்தால், வயிற்றில் வாய்வு உற்பத்தி அதிகமாகி, அதன் விளைவாக வயிற்று உப்புசம், அசிடிட்டி மற்றும் கடுமையான வயிற்று வலியை உண்டாக்கும் என டாக்டர் அசுதோஷ் கூறுகிறார்.
ஆகவே சோளம் சாப்பிட்டு உங்களுக்கு வயிறு வலிக்கிறது என்றால், அதற்கு காரணம் சோளம் அல்ல. நீங்கள் குடித்த நீர் தான்.

எவ்வளவு இடைவெளி தேவை?
சோளம் சாப்பிட்டு எவ்வித வயிற்று பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், சோளம் சாப்பிட்டு குறைந்தது 45 நிமிடம் இடைவெளி விட வேண்டியது அவசியம் என டாக்டர் அசுதோஷ் கூறுகிறார்.

சோளத்தை எவ்வாறு சாப்பிடுவது சிறந்தது?
சோளத்தை எப்படி சாப்பிடுவது நல்லது என்ற கேள்வி பலரது மனதிலும் இருக்கும். இத்தகைய கேள்விக்கான விடையை இப்போது பார்க்கலாம். பொதுவாக சோளத்தை நெருப்பில் வாட்டி, எலுமிச்சம் பழத்தை பாதியாக வெட்டி, ஒரு பாதியை மிளகாய் தூள் மற்றும் உப்பு கலவையில் தொட்டு, சோளத்தின் மீது தடவி சாப்பிடுவதே சிறந்தது.

சோளத்தை ஏன் எலுமிச்சை சேர்த்து உண்ண வேண்டும்?
சோளத்தை எலுமிச்சை சாறு சேர்த்து உண்பதனால், செரிமான செயல்பாடு தங்கு தடையின்றி சிறப்பாகவும், மென்மையாகவும் நடைபெறும். பொதுவாக மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு மண்டலம் சற்று பலவீனமாக இருக்கும். ஆகவே சோளத்தை எலுமிச்சை சாறு சேர்த்து உண்ணும் போது, நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாகி, நோய்களின் தாக்கத்தைத் தவிர்க்கலாம்.

பிரஷ்ஷாக சாப்பிடுவதே சிறந்தது
சோளத்தை எப்போது வாங்கினாலும், உடனே அதை சமைத்து சாப்பிட வேண்டும். சோளத்தின் முழுமையான சத்துக்களையும் பெற வேண்டுமானால், அதை நற்பதமாக இருக்கும் போதே சாப்பிடுவதே நல்லது. அதை விட்டு, பல மணிநேரங்களாக வைத்து, பின் சாப்பிட்டால், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் பெருக்கமடைந்து, வயிற்று பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.



Click it and Unblock the Notifications
