For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உணவு உண்ட பின் ஏன் சோம்பு சாப்பிடுறது நல்லதுன்னு சொல்றாங்க... தெரியுமா?

சோம்பு உணவு உண்ட பின் வாயில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போக்குவதோடு, உணவுக்கு பின் உடலில் நடைபெறும் சில செயல்பாடுகளுக்கும் உதவி புரிகிறது என்று தெரியுமா?

|

இந்தியாவில் ஒவ்வொரு வீட்டின் சமையலறையிலும் இருக்கும் ஒரு பொருள் தான் சோம்பு. முக்கியமாக இது சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் பெரும்பாலும் காணப்படும். சோம்பு உணவின் சுவையைக் கூட்டுவதோடு, நல்ல மணத்தையும் கொடுக்கும். அதுமட்டுமின்றி, இதில் பல்வேறு நன்மைகளை வழங்கும் ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன.

Why You Should Eat Fennel Seeds After Meals?

பலர் உணவு உண்ட பின்னர் சிறிது சோம்பு சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். பல ஹோட்டல்களில் சோம்பின் மீது சர்க்கரை படலம் பூசப்பட்டு இருக்கும். இன்னும் சில ஹோட்டல்களில் சோம்புடன் பாக்கும் சேர்த்து, உணவிற்கு பின் கொடுக்கப்படும். இதற்கு காரணமாக நாம் அனைவரும் நினைப்பது, இது வாய்க்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும் என்று.

இந்த உணவுகள் தொப்பைக் கொழுப்புக்களை ஆப்ஸ் ஆக மாற்ற உதவும் என தெரியுமா?

ஆனால் சோம்பு உணவு உண்ட பின் வாயில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போக்குவதோடு, உணவுக்கு பின் உடலில் நடைபெறும் சில செயல்பாடுகளுக்கும் உதவி புரிகிறது என்று தெரியுமா? இக்கட்டுரையில் உணவு உண்ட பின் சோம்பை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எடையைக் குறைக்கும்

எடையைக் குறைக்கும்

சோம்பு உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் திறனைக் கொண்டது. இதனால் அஜீரண கோளாறுகள் தடுக்கப்பட்டு, கொழுப்புக்களையும் கரைக்க உதவும். ஒருவர் சோம்பை சரியான அளவில் எடுத்தால், சோம்பு இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துவதோடு, இன்சுலின் உணர்திறனையும் அதிகரிக்கும். மேலும் சோம்பு விதைகள் டைப்-2 சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது மற்றும் இந்நோயின் அபாயத்தையும் தடுக்கும்.

திடீர்னு மூச்சு விடவே சிரமமா இருக்கா? அப்ப நிச்சயம் இதுல ஒன்னு தான் காரணமா இருக்கும்...

அஜீரண கோளாறைத் தடுக்கும்

அஜீரண கோளாறைத் தடுக்கும்

நறுமணமிக்க சோம்பு விதைகள், வாய்க்கு புத்துணர்ச்சியை அளித்து, நல்ல மணத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் இது வாயில் இருக்கும் எச்சில் சுரப்பியைத் தூண்டி, அதிகளவு எச்சிலை சுரக்க உதவும். சோம்பின் இதர நன்மைகளாவன:

* பற்கள் சுத்தமாகும்

* உடல் தூய்மையாகும்

* செரிமானம் சிறக்கும்

உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்

உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்

சோம்பு பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக இது இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும். முக்கியமாக சோம்பு உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். ஏனெனில் சோம்பில் பொட்டாசியம் அதிகம். இச்சத்து தான் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, இதயத்திற்கு நன்மையளிக்கும் பல பண்புகளையும் சோம்பு கொண்டுள்ளது.

பித்தப்பை கற்கள் மாயமா மறையணுமா? அப்ப தினமும் இத குடிங்க...

செரிமானம் மேம்படும்

செரிமானம் மேம்படும்

உணவு உண்ட பின் சிறிது சோம்பை சாப்பிடுவதால், செரிமான மண்டலத்தின் செயல்பாடு மேம்படும். ஏனெனில் சோம்பில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. அதுவும் மதியம் வயிறு நிறைய உணவு உண்ட பின் சிறிது சோம்பை வாயில் போட்டு மென்றால், அதன் சாறு உடலினுள் சென்று, செரிமான செயல்பாட்டின் சக்தியை மேம்படுத்தும்.

மலச்சிக்கல் தடுக்கப்படும்

மலச்சிக்கல் தடுக்கப்படும்

சோம்பு உணவுகளை எளிதில் செரிமானம் செய்ய உதவுவதோடு, கழிவுகளை ஒன்று சேர்த்து வெளியேற்றும். இருப்பினும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று கூறுவது போல, சோம்பை அதிகமாக உட்கொள்ளக்கூடாது என்பதை ஒருவர் உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால், வயிற்றின் நிலை மோசமடையக்கூடும்.

ஏன் ஆண்கள் கட்டாயம் தொப்பையைக் குறைக்கணும் தெரியுமா?

வாய்வுத் தொல்லை மற்றும் வயிற்று உப்புசம் தடுக்கப்படும்

வாய்வுத் தொல்லை மற்றும் வயிற்று உப்புசம் தடுக்கப்படும்

சோம்பு உடலில் நீர்த்தேக்க பிரச்சனையை சரிசெய்ய உதவும். ஏனெனில் இதில் இயற்கையாகவே சிறுநீர்ப்பெருக்கும் பண்புகள் உள்ளது. மேலும் இது வாய்வுத் தொல்லை மற்றும் வயிற்று உப்புச பிரச்சனையில் இருந்தும் விடுவிக்கும். அதோடு மதிய உணவிற்கு பின் சோம்பை சாப்பிடுவதால், வயிற்று அசௌகரியத்தால் ஏற்படும் குமட்டல் பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why You Should Eat Fennel Seeds After Meals?

Here are some reasons why you should eat fennel seeds after meals. Read on to know more...
Desktop Bottom Promotion