For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வந்தா 5 மற்றும் 10 ஆவது நாள் தான் ரொம்ப முக்கியமானதாம் - ஏன் தெரியுமா?

நிபுணர்களின் கூற்றுப்படி, தனிமைப்படுத்தப்பட்ட காலத்தின் 5 முதல் 10 நாட்கள், கொரோனாவுக்கு பிறகு நீங்கள் சந்திக்கவிருக்கும் சிக்கல்களின் சாத்தியக்கூறுகளைப் பற்றி அறிய உதவும்.

|

கோவிட்-19 நோய்த்தொற்று ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான, கணிக்க முடியாத அறிகுறிகளை வெளிப்படுத்தினாலும், வழக்கமான அறிகுறிகளைக் கொண்டவர்கள் இத்தொற்று ஏற்பட்ட முதல் சில நாட்களில் காய்ச்சல் போன்ற பிரச்சனையால் பாதிக்கப்படுவதை தெரிவித்துள்ளனர். நோய்த்தொற்றின் ஆரம்ப நாட்கள் மிகவும் குழப்பமானதாக இருக்கும். அதில் கொரோனா தொற்று ஏற்பட்ட பலர் மிதமான அறிகுறிகளை அனுபவித்தாலும், சிலர் அறிகுறியற்றவர்களாக இருக்கிறார்கள்.

Why Day 5 And Day 10 Are Most Important For COVID Patients

இருப்பினும், கொரோனா நோய்த்தொற்றின் உண்மையான தீவிரத்தன்மையை 5-10 நாட்களில் தான் தீர்மானிக்க முடியும். நிபுணர்களின் கூற்றுப்படி, தனிமைப்படுத்தப்பட்ட காலத்தின் 5 முதல் 10 நாட்கள், கொரோனாவுக்கு பிறகு நீங்கள் சந்திக்கவிருக்கும் சிக்கல்களின் சாத்தியக்கூறுகளைப் பற்றி அறிய உதவும்.

MOST READ: கொரோனா வரக்கூடாதா? அப்ப இந்த 3 பொருளை தினமும் மறக்காம சுத்தம் செய்யுங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தொற்று ஏற்பட்டவர்கள் முதலில் செய்ய வேண்டியது

தொற்று ஏற்பட்டவர்கள் முதலில் செய்ய வேண்டியது

கொரோனா அறிகுறிகளை அனுபவிக்கும் போது அல்லது கொரோனா தொற்றுநோயைக் கண்டறிந்தால் செய்ய வேண்டிய முதல் விஷயம், அறிகுறிகளை கண்டறிவது மற்றும் எத்தனை நாட்களாக அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள் என்பதைத் தான்.

கொரோனா வைரஸின் ஆரம்ப அறிகுறி எப்போது தெரியும்?

கொரோனா வைரஸின் ஆரம்ப அறிகுறி எப்போது தெரியும்?

கொரோனா வைரஸ் உடலினுள் சென்ற பின் 2-3 நாட்கள் கழித்து பெரும்பாலான மக்களுக்கு அறிகுறிகளை வெளிப்படுத்துவதாக கருதப்படுகிறது. ஆரம்பத்தில், நோய்த்தொற்றின் முதல் கட்டமாக பெரும்பாலான மக்களுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்படுகிறது. இரண்டாவது கட்டத்தில் தான் நோயெதிர்ப்பு மண்டலம் அந்த வைரஸை எதிர்த்து செயல்படுகிறது.

கோவிட் போர்

கோவிட் போர்

நோயெதிர்ப்பு மண்டலம் தொற்றுநோயை வேரோடு அழிக்க கொடூரமான ஆன்டிபாடிகளை உருவாக்கும் போது, சில சமயங்களில் அது அளவுக்கு அதிகமாக தூண்டப்பட்டு மோசமடையக்கூடும். இந்நிகழ்வு தொற்று ஏற்பட்ட 6 அல்லது 7 ஆம் நாட்களில் தொடங்கலாம். இது தான் உண்மையான கோவிட் போரானது பலரது உடலில் தொடங்கும் காலம் ஆகும்.

ஏன் 5 மற்றும் 10 ஆம் நாள் முக்கியம்?

ஏன் 5 மற்றும் 10 ஆம் நாள் முக்கியம்?

5-10 நாட்களில் பெரும்பாலான மக்கள் நோய்த்தொற்றின் 'இரண்டாவது அலை' அறிகுறியால் அவஸ்தைப்படலாம். அதாவது இக்காலத்தில் சந்திக்கும் அறிகுறிகள் கடுமையானதாக இருக்கும். கொரோனா நோய்த்தொற்று ஒரு நிலையான முறையைப் பின்பற்றுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறும் காலமும் இது தான்.

உண்மையில், மருத்துவர்கள் இப்போது கவனிப்பது என்னவென்றால், நோய்த்தொற்றின் இரண்டாவது வாரத்தை கடந்தவர்கள் தான், கொரோனாவின் கடுமையான அறிகுறிகள், நிமோனியா போன்ற சிக்கல்களால் மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள். எனவே தான் நோய்த்தொற்றின் 5-10 ஆம் நாட்கள் முக்கியமானதாக கருதப்படுகிறது.

கொரோனா தொற்றில் இருந்து மீள எவ்வளவு காலம் ஆகும்?

கொரோனா தொற்றில் இருந்து மீள எவ்வளவு காலம் ஆகும்?

பெரும்பாலான மக்களுக்கு கொரோனா அறிகுறிகள் குறைந்து மீள்வதற்கு ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் ஆகின்றன. இது லேசான அல்லது மிதமான தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிகழ்கிறது. ஆனால் சில நோயாளிகள் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை அறிகுறிகளால் தாக்கப்படுவதற்கு முன்பு சரியாவதை உணர்கிறார்கள்.

இருப்பினும், தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 முதல் 10 நாட்கள் வரை தீவிர பிரச்சனைகளை அனுபவிப்பார்கள். இது நோய்த்தொற்றின் ஆரம்ப நாட்களில் இருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும்.

கொரோனாவில் இருந்து மீண்டாலும் பாதிப்பு இருக்குமா?

கொரோனாவில் இருந்து மீண்டாலும் பாதிப்பு இருக்குமா?

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்துவிட்டால் சந்தோஷம் அடைய வேண்டாம் என்று நிபுணர்கள் தற்போது எச்சரிக்கின்றனர். ஏனெனில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள், அந்த தொற்றின் பக்க விளைவை வாழ்நாள் முழுவதும் சந்திக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பிற நோய்கள் அல்லது வைரஸ் தொற்று போல் இல்லாமல், பெரும்பாலான கொரோனா நோயாளிகள் தொற்று ஏற்பட்ட ஒரு வாரத்திற்கு பிறகு அவர்களின் அறிகுறிகளை கவனித்து, அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதில் கவனத்தை செலுத்தி, அதை வைத்து கொரோனா தொற்று ஒருவரை எந்த அளவு பாதித்துள்ளது என்பதை அறிய முடியும்.

யார் அதிக அபாயத்தில் உள்ளனர்?

யார் அதிக அபாயத்தில் உள்ளனர்?

கோவிட்-19 நோயாளிகள் ஆபத்தான அறிகுறிகளைக் கொண்டிருக்கவில்லை அல்லது 10 நாட்களுக்குப் பிறகு அவர்களின் அறிகுறிகள் குறைந்து வருவதைக் கண்டால், அவர்கள் ஆரோக்கியமான முறையில் குணமடைவதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு இல்லாதவர்கள், சிக்கல்களை சந்திப்பார்கள்.

அதிலும் ஏற்கனவே ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள், முதியவர்கள், சர்க்கரை நோய் அல்லது இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டால், ஒரு வாரத்திற்கு பின் கடுமையான அறிகுறிகளால் மிகவும் மோசமாக பாதிக்கப்படுவார்கள்.

சில சந்தர்ப்பங்களில், நோய்த்தொற்றின் தீவிரத்தால் இளைய நோயாளிகள் தொற்று ஏற்பட்ட 12-14 நாட்களுக்கு பிறகு மோசமான அறிகுறிகளை சந்தித்து, சிக்கல்களை எதிர்கொள்ளலாம்.

தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு எந்த வகையான பிரச்சனைகள் நீடிக்கலாம்?

தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு எந்த வகையான பிரச்சனைகள் நீடிக்கலாம்?

கோவிட்-19 உடன் போராடியவர்கள், அதன் மீட்பு காலம் எப்படி இருக்கும் என்பதை உங்களுக்கு சொல்லியிருக்கலாம். உடல் வலி, சோர்வு, களைப்பு மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் நீண்ட காலத்திற்கு நீடிக்கும். சில சமயங்களில், நோயாளிகள் மூச்சுத்திணறல், மார்பு வலி, அசௌகரியம், மார்பு இறுக்கம் போன்ற சுவாச அறிகுறிகள் மோசமாவதை எதிர்பார்க்கலாம். அதே நேரம் குழப்பம், மூளை மூடுபனி மற்றும் மயக்கம் போன்ற மன வீழ்ச்சியின் அறிகுறிகளையும் சந்திக்கலாம்.

ஹைபோக்ஸியா

ஹைபோக்ஸியா

கொரோனா தொற்றின் இரண்டாவது வாரத்தில் சரியாக கவனிக்காததால் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் ஹைபோக்ஸியா என்னும் இரத்த ஆக்ஸிஜன் அளவுகள் ஆபத்தான அளவிற்கு குறையும் நிலை ஆகும்.

கவலைக்குரிய அறிகுறி காய்ச்சல்

கவலைக்குரிய அறிகுறி காய்ச்சல்

மற்றொரு கவலைக்குரிய காரணியாக மாறக்கூடிய ஒரு அறிகுறி தான் காய்ச்சல். மிதமான காய்ச்சலை சந்திக்கும் கோவிட்-19 நோயாளிகளுக்கு, 9 அல்லது 10 ஆம் நாட்களுக்குள் காய்ச்சல் கட்டுக்குள் வரவில்லை என்றால், அது நிமோனியா அல்லது இரத்த நோய்த்தொற்றின் அறிகுறியாக மாறும். இப்படி தொடர்ச்சியான காய்ச்சல், சுவாச கோளாறின் அறிகுறியாகவும் இருக்கலாம் மற்றும் இது கொரோனா தீவிரத்தோடு தொடர்புடையதும் கூட.

என்ன செய்வது?

என்ன செய்வது?

கோவிட் தனிமைப்படுத்தும் காலத்தில் மிகுந்த எரிச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தொற்றின் ஆரம்ப நாட்களைப் போலவே, காய்ச்சல், நாடித்துடிப்பு மற்றும் ஆக்ஸிஜன் செறிவு போன்றவற்றை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். இரத்த அழுத்தம் அல்லது சர்க்கரை நோய் உள்ளவர்கள், இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த அளவுகளில் மாற்றம் ஏற்படுகிறதா என்பதை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும்.

மூச்சு விடுவதில் சிரமம், மூச்சுத்திணறல் போன்றவற்றை ஒரே நேரத்தில் கவனிக்க வேண்டும். ஒவ்வொரு நோயாளியும் ஒரே மாதிரியான அறிகுறிகளை அனுபவிப்பதில்லை என்றாலும், உடல் சொல்வதைக் கவனித்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது முக்கியம். சில நேரங்களில், ஹைபோக்ஸியா நிலையை அனுபவிக்கும் நோயாளிகள் தங்கள் உதடுகளின் நிறம் நீல நிறம் அல்லது வெளிரிய நிறத்தில் மாற்றமடைவதைக் காணலாம். எனவே இது கவனிக்க வேண்டிய மிகவும் முக்கியமான அறிகுறியாகும். எனவே கவனமாக இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Day 5 And Day 10 Are Most Important For COVID Patients

More and more people are thronging hospitals with severe symptoms, pneumonia-like complications after taking the second week of infection casually.
Desktop Bottom Promotion