மாஸ்க் போட்டா வாய் ரொம்ப நாற்றமடிக்குதா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க சரியாயிடும்...

மருத்துவ ரீதியாக ஹலிடோசிஸ் என்று அழைக்கப்படுவது தான் வாய் துர்நாற்றம். வாயில் இருந்து வீசும் ஒருவிதமான விரும்பத்தகாத வாசனையை தற்போது பலர் மாஸ்க் அணியும் போது உணருகின்றனர்.

மருத்துவ ரீதியாக ஹலிடோசிஸ் என்று அழைக்கப்படுவது தான் வாய் துர்நாற்றம். வாயில் இருந்து வீசும் ஒருவிதமான விரும்பத்தகாத வாசனையை தற்போது பலர் மாஸ்க் அணியும் போது உணருகின்றனர். ஒருவருக்கு வாய் துர்நாற்றம் மோசமான சுகாதாரம் அல்லது வாய், பற்கள், ஈறுகள், தொண்டை அல்லது செரிமான மண்டலத்தில் உள்ள பிரச்சனைகளால் ஏற்படலாம். நாம் உண்ணும் உணவுகள் வாயில் உடைக்கத் தொடங்குகிறது. இது இரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்பட்டு, நுரையீரல் வரை பயணித்து, நாம் சுவாசிக்கும் காற்றினை பாதிக்கிறது.

Which Foods Are Right For You To Get Rid Of Bad Breath Under Your Mask

எனவே தான் பூண்டு, வெங்காயம் போன்ற ஒரு வலுவான வாசனையைக் கொண்ட உணவுகளை சாப்பிட்டால், அது வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. பிரஷ்ஷிங், ஃப்ளோசிங் அல்லது மௌத் வாஷ் கூட இத்தகைய நாற்றத்தை தற்காலிகமாக மறைக்கும். ஆனால் இந்த உணவுகள் உடலினுள் சென்றுள்ளதால், அந்த நாற்றம் முழுமையாக போகாது. இது தவிர சீஸ், குறிப்பிட்ட மசாலாப் பொருட்கள், ஆரஞ்சு ஜூஸ் அல்லது சோடா, ஆல்கஹால் போன்றவையும் வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும் உணவுகளாகும்.

இப்போது வேறு எந்த காரணங்களால் எல்லாம் வாய் துர்நாற்றம் ஏற்படும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாய் வறட்சி

வாய் வறட்சி

ஒருவரது வாய் துர்நாற்றத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்று வாய் வறட்சி. வாயில் உள்ள பாக்டீரியாக்களை வெளியேற்றுவதில் உமிழ்நீர் முக்கிய பங்காற்றுகிறது மற்றும் இதுவே வாயை புத்துணர்ச்சியுடன் பராமரிக்கவும் உதவுகிறது.

செரிமான பிரச்சனைகள்

செரிமான பிரச்சனைகள்

ஆசிட் ரிப்ளக்ஸ், மோசமான செரிமானம், குடல் கோளாறுகள் மற்றும் மலச்சிக்கல் போன்ற பல செரிமான பிரச்சனைகளால் வாயில் சல்பர் வாயுக்கள் சென்று வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

புகைப்பிடித்தல்

புகைப்பிடித்தல்

சிகரெட்டில் ஏற்கனவே பல்வேறு மோசமான நச்சுக்கள் மற்றும் கெமிக்கல்கள் உள்ளன. இவை உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிப்பதோடு மட்டுமல்லாமல், வாய் துர்நாற்றத்தையும் ஏற்படுத்துகின்றன.

மோசமான வாய் சுகாதாரம்

மோசமான வாய் சுகாதாரம்

வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டால், வாயில் பாக்டீரியாக்கள் அதிகம் பெருக்கமடையும். இப்படி அதிகரிக்கும் பாக்டீரியாக்கள் சல்பரை வெளியிடுகின்றன. இவையே அழுகிய முட்டை போன்ற வாசனையை உண்டாக்கி, வாய் துர்நாற்றத்தை உண்டாக்குகின்றன.

காபி அல்லது ஆல்கஹால் குடிப்பது

காபி அல்லது ஆல்கஹால் குடிப்பது

இந்த இரண்டு பானங்களுமே வலுவான சுவை கொண்டவை. இந்த பானங்களை அதிகம் குடிக்கும் போது, அவை வாயில் உமிழ்நீர் உற்பத்தியைக் குறைத்து, வாயில் பாக்டீரியாக்களை வெளியேற்றாமல் வாயிலேயே தங்க வைத்து, வாய் துர்நாற்றத்தை உண்டாக்குகின்றன.

மனித உடலுக்கு வாய் ஒரு ஜன்னலாக இருக்கிறது. எனவே வாயில் துர்நாற்றம் வீசினால், அது உடலின் சமச்சீரற்ற தன்மையைக் குறிப்பதாக அர்த்தம். இந்நிலையில் இப்பிரச்சனைக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். ஏனெனில் சிகிச்சை தான் மூல காரணத்தை குணப்படுத்தும்.

வாய் துர்நாற்ற பிரச்சனையைக் குறைக்க உதவும் உணவுகள்

வாய் துர்நாற்ற பிரச்சனையைக் குறைக்க உதவும் உணவுகள்

ஓமம், துளசி மற்றும் பார்ஸ்லி போன்ற உணவுகளை பச்சையாக சாப்பிடுவது வாய் துர்நாற்ற பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். இது தவிர முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகளான கேரட், முலாம் பழம் மற்றும் சிட்ரஸ் பழங்களில் காணப்படும் சில முக்கியமான ஆன்டி-ஆக்சிடன்ட்டு சத்துக்கள் வாய் துர்நாற்றத்திற்கு எதிராக போராடக்கூடியவை. இதுமட்டுமின்றி, இந்த உணவுகள் செரிமான ஆரோக்கியத்தைப் பராமரிக்க மற்றும் செரிமான பாதையை சுத்தமாக வைத்திருக்க தேவையான நார்ச்சத்தை வழங்குகிறது.

வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும் பிற வழிகள்

வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும் பிற வழிகள்

* பாதி எலுமிச்சையை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து, இரவு தூங்குவதற்கு முன் குடிக்க வேண்டும். இது வாய் துர்நாற்றத்தை போக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், உடல் துர்நாற்றத்தையும் தடுக்கும்.

* வறுத்த சோம்பு அல்லது சீரக விதைகளை உணவு உண்ட பின் வாயில் போட்டு மென்றால், செரிமானம் சிறப்பாக நடக்கும். இதனால் வாய் துர்நாற்றமும் தடுக்கப்படும்.

* உணவுகளை உண்ணும் போது நன்கு மென்று மெதுவாக சாப்பிட வேண்டும். மேலும் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

* போதுமான அளவு நீரைக் குடிப்பதால், வாயில் ஈரப்பதம் இருந்து, உமிழ்நீரின் உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டு, வாயில் உள்ள பாக்டீரியாக்கள் நீக்கப்படும்.

* என்ன செய்தாலும் வாய் துர்நாற்றம் போகாமல் இருந்தால், மருத்துவரை அணுகுவதே சிறந்த வழி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, September 21, 2021, 11:40 [IST]
Desktop Bottom Promotion