For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முட்டையை இப்படிதான் சமைச்சி சாப்பிடனுமாம்... அதுதான் உங்க ஆரோக்கியத்திற்கு நல்லதாம்..!

நீண்ட காலத்திற்கு முட்டைகளை அதிக வெப்பத்தில் சமைத்தால், அது ஊட்டச்சத்துக்களை சேதப்படுத்தும். அதிக வெப்பத்தில் முட்டைகளை சமைக்கும்போது, வைட்டமின் ஏ உள்ளடக்கம் 20 சதவிகிதம் குறைகிறது.

|

எளிமையான, ஆரோக்கியமான மற்றும் எளிதான காலை உணவு விருப்பங்களுக்கு வரும்போது, நாம் அனைவருக்கும் பிடித்த உணவு முட்டை. குறைந்த விலையில் கிடைக்கும் முட்டை ஒரு சத்தான உணவு. அவை ஒப்பீட்டளவில் குறைந்த கலோரிகளைக் கொண்டிருக்கின்றன. புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற ஊட்டசத்துகள் நிறைந்துள்ளன. ஆனால், நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா, ஊட்டச்சத்துக்களை அதிகம் பயன்படுத்த முட்டைகளை சமைக்க சரியான வழி எது என்று?

What Is the Healthiest Way to Cook and Eat Eggs?

இல்லையெனில், முட்டைகளை சமைக்கும் வெவ்வேறு முறைகளையும், உங்கள் உடலுக்கு எது ஆரோக்கியமானது என்பதையும் அறிய முயன்று இருக்கிறீர்களா? நீங்கள் முட்டைகளை சமைக்கும் முறை அவற்றின் ஊட்டச்சத்துக்களை பாதிக்கும் என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள். இந்த கட்டுரையில் ஆரோக்கியமான வழிகளில் முட்டையை எவ்வாறு சமைக்கலாம் என்று காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வேகவைத்தது

வேகவைத்தது

பொதுவாக வேக வைத்த உணவுகள் உடலுக்கு நல்லது. அந்த வகையில் வேகவைத்த முட்டையும் உடலுக்கு ஆரோக்கியமானது. 4 அல்லது 5 முட்டைகளை ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் நீரில் 10-15 நிமிடங்கள் வேகவைக்கப்படுகிறது. வேகவைத்த முட்டைகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

MOST READ: இந்த இயற்கை வழிகள பயன்படுத்தி உங்க உயர் இரத்த அழுத்தத்தை ஈஸியா குறைக்கலாம் தெரியுமா?

முட்டை துருவல்

முட்டை துருவல்

முதலில் 4 முட்டைகளை உடைத்து ஒரு கிண்ணத்தில் அடித்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு சூடான பாத்திரத்தில் முட்டை கலவையை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, மிதமான சூட்டில் சமைக்க வேண்டும். பின்னர், அடுப்பில் இருந்து இறக்கியவுடன் சிறிது மிளகு தூள் மற்றும் கொத்தமல்லி தூவி பரிமாறலாம். இந்த வகையான சமையலில் குறைந்தபட்ச எண்ணெய் பயன்படுத்துகிறது மற்றும் ஊட்டச்சத்துக்களை அப்படியே உங்களுக்கு வழங்கும்.

முட்டை ரோஸ்ட்

முட்டை ரோஸ்ட்

இந்த செயல்முறையானது நான்கு பக்கங்களிலிருந்தும் சரியாக சமைக்கப்படும் வரை, ஒரு அடுப்பில் அதிக வெப்பநிலையில் முட்டைகளை சமைப்பதை உள்ளடக்குகிறது. இதை முட்டை ரோஸ்ட் என்று அழைக்கப்படுகிறது.

ஆப்பாயில்

ஆப்பாயில்

முதலில் தண்ணீர் அதிக வெப்பநிலையில் கொதிக்கவைக்கப்பட்டு, பின்னர் அதில் முட்டைகளை உடைத்து 2-4 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும். பின்னர், அதை வெளியில் எடுத்து தேவையான உப்பு, மிளகுத்தூள் தூவி சாப்பிடலாம்.

MOST READ: 'ரெகுலரான உடலுறவால்' உங்க சருமத்தில் தோன்றும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?

ஜீரணத்தை எளிதாக்குகிறது

ஜீரணத்தை எளிதாக்குகிறது

முட்டைகளில் புரதச்சத்து அதிகம் உள்ளது. அவற்றை சமைப்பதால் ஊட்டச்சத்துக்கள் எளிதில் ஜீரணமாகின்றன என்பது ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மூல முட்டைகளில் உள்ளதை ஒப்பிடுகையில், சமைக்கும் செயல்முறை வைட்டமின் பயோட்டின் உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறைந்த தீயில் முட்டைகளை சமைக்கும்போது, வெப்பம் அவற்றை வடிவமைக்கும் புரதச் சத்து மற்றும் அதைச் சுற்றியுள்ள பிற ஊட்டச்சத்துக்களை உடைக்கிறது. இவை அனைத்தும் சேர்ந்து உடலை ஜீரணிக்க எளிதாக்குகிறது.

தீங்கு விளைவிப்பதா?

தீங்கு விளைவிப்பதா?

நீண்ட காலத்திற்கு முட்டைகளை அதிக வெப்பத்தில் சமைத்தால், அது ஊட்டச்சத்துக்களை சேதப்படுத்தும். அதிக வெப்பத்தில் முட்டைகளை சமைக்கும்போது, வைட்டமின் ஏ உள்ளடக்கம் 20 சதவிகிதம் குறைகிறது. மேலும் இது முட்டைகளில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகளின் எண்ணிக்கையையும் குறைக்கிறது என்று ஒரு ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, பேக்கிங் என்பது முட்டைகளுக்கு ஆரோக்கியமான தேர்வாகாது. ஏனெனில் அதிக வெப்ப செயல்முறை வைட்டமின் டி இன் 60 சதவீதத்தை குறைக்கக்கூடும், மற்ற முறைகளுடன் ஒப்பிடுகையில், இழப்பு 18-20 சதவீதம் மட்டுமே இதில் இருக்கும்.

உதவிக்குறிப்புகள்

உதவிக்குறிப்புகள்

உங்கள் உணவில் உள்ள கூடுதல் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்களை சமப்படுத்த பச்சை காய்கறிகளுடன் முட்டையை இணைக்கவும். மேலும், அதிக வெப்பநிலையில் முட்டைகளை சமைக்கும்போது எண்ணெயைப் பயன்படுத்துங்கள். ஏனெனில் இது தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிகல்களை உருவாக்குவதற்கு எளிதில் ஆக்ஸிஜனேற்றாது. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அதிக வெப்பநிலையில் முட்டைகளை சமைப்பதைத் தவிர்ப்பது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Is the Healthiest Way to Cook and Eat Eggs?

Here we are talking about what is the healthiest way to cook and eat eggs.
Story first published: Saturday, June 6, 2020, 17:30 [IST]
Desktop Bottom Promotion