Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
இளநீரை எந்த நேரத்தில் குடிப்பது அதிகளவு பயன்களை வழங்கும் தெரியுமா?
பகல் பொழுதில் இளநீரை எப்பொழுது வேண்டுமென்றாலும் குடிக்கலாம் ஆனால் அதனை சரியான நேரத்தில் குடிப்பதன் மூலம் அதனால் கிடைக்கும் நன்மைகளை இரட்டிப்பாக்கலாம்.
உலகில் இதுவரை கலப்படம் செய்யப்படாத ஒரு பொருள் என்றால் அது இளநீர்தான். இளநீர் ஒரு அதிசய பானமாக கருதப்படுகிறது. கோடை வெப்பத்தை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த பானங்களில் இதுவும் ஒன்றாகும், மேலும் இது உடனடி ஆற்றலை வழங்கும் பானமாகவும் இருக்கிறது. இதில் கலோரிகள் குறைவாக உள்ளது மற்றும் இயற்கையான என்சைம்கள் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களைக் கொண்டுள்ளது.

இளநீரை குடிப்பதற்கென குறிப்பிட்ட நேரம் எதுவுமில்லை. பகல் பொழுதில் இளநீரை எப்பொழுது வேண்டுமென்றாலும் குடிக்கலாம் ஆனால் அதனை சரியான நேரத்தில் குடிப்பதன் மூலம் அதனால் கிடைக்கும் நன்மைகளை இரட்டிப்பாக்கலாம். எந்த நேரத்தில் இளநீர் குடிப்பது உங்களுக்கு நன்மைகளை வழங்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

வெறும் வயிற்றில் அதிகாலையில் குடிக்கலாம்
காலையில் வெறும் வயிற்றில் இளநீரை முதலில் குடிப்பது பல வழிகளில் உதவும். இளநீரில் லாரிக் அமிலம் உள்ளது, இது உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, மேலும் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், எடை குறைப்பிற்கும் உதவுகிறது. கர்ப்பிணி பெண்கள் உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்கவும், மலச்சிக்கலை குணப்படுத்தவும் உதவும். மேலும் கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு காலை நேரத்தில் ஏற்படும் நெஞ்செரிச்சலை குணப்படுத்த உதவுகிறது.

உடற்பயிற்சிக்கு முன்னும், பின்னும்
விளையாட்டு வீரர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த பானமாகும். உடற்பயிற்சிக்கு முன்னர் இளநீர் குடிப்பது உடலில் நீரேற்றத்தை அதிகரிக்கவும், ஆற்றலை அதிகரிக்கவும் பயன்படுகிறது. உடற்பயிற்சிக்கு பின்னர் இளநீர் குடிப்பது தீவிர உடற்பயிற்சியால் இழந்த எலெக்ட்ரோலைட்டுகளின் இழப்பை சமன் செய்கிறது. இளநீர் குடிப்பது சோர்வை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் சிறந்த ஆற்றல் அதிகரிக்கும் பானங்களில் ஒன்றாகும்.

உணவுக்கு முன் மற்றும் பின்
உணவுக்கு முன் புத்துணர்ச்சியூட்டும் இளநீரைக் குடிப்பது, உங்கள் உணவை முழுமையாக்குகிறது, இதனால் அதிகப்படியான உணவு சாப்பிடுவதைத் தடுக்கிறது. இது கலோரிகளில் குறைவாக இருப்பதால் செரிமானத்தை எளிதாக்குகிறது. உணவுக்கு பின் இதனைக் குடிப்பது வயிற்றில் வீக்கத்தை ஏற்படுவதைத் தடுக்கிறது. தொடர்ச்சியாக இளநீரைக் குடிப்பது உடலில் எலெக்ட்ரோலைட்டுகள் அளவை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.

தூங்கச் செல்வதற்கு முன்
தேங்காயின் இனிமையான மணம் ஒரு உளவியல் விளைவைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது, இது பதட்டத்தை குறைக்க உதவுகிறது மேலும் இதய துடிப்பை குறைக்க உதவுகிறது. தூங்க செல்வதற்கு முன் சிறிது இளநீர் குடிப்பது மனஅழுத்தத்தை குறைக்கவும், மன அமைதியை ஏற்படுத்தவும் உதவுகிறது. தூங்கும் முன்னர் இளநீர் குடிப்பது உடலில் இருக்கும் அனைத்து நச்சுகளையும் வெளியேற்றவும், உங்கள் சிறுநீர் பாதையை சுத்தப்படுத்தவும் உதவும். இது உங்களை நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்கவும், சிறுநீரக பிரச்சினைகளில் இருந்தும் உங்களை பாதுகாக்கிறது.

ஹேங்ஓவரை குறைக்க
ஒரு கிளாஸ் இளநீர் குடிப்பது ஹேங்ஓவரில் இருந்து விடுபட சிறந்த வீட்டு வைத்தியம் என்று உங்களுக்குத் தெரியுமா?. ஆல்கஹால் நீரிழப்பை ஏற்படுத்துகிறது, இது அடுத்த நாள் காலையில் தலைவலி மற்றும் குமட்டல் உணர்வுக்கு வழிவகுக்கும். தேங்காய் நீர் இரண்டையும் எதிர்த்துப் போராட உதவுகிறது, மேலும் இழந்த எலக்ட்ரோலைட்டுகளை மீட்டெடுக்கிறது.



Click it and Unblock the Notifications











