For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க சாப்பிடும்போது இந்த அறிகுறி தெரியுதா? அப்ப அது பிங் உணவுக் கோளாறா இருக்கலாமாம்... ஜாக்கிரதை..!

இன்றுவரை மருத்துவ அறிவியலால் எதுவும் ஆவணப்படுத்தப்படவில்லை. ஆனால் இது பொதுவாக மரபணுக்கள் காரணமாக நடக்கிறது என்று நம்பப்படுகிறது. டோபமைனுக்கு அதிக உணர்திறன் உள்ளவர்கள், இந்த கோளாறைப் பெற்றிருக்கலாம்.

|

நம்மில் பலர் அதிகப்படியான உணவை சாப்பிடுவார்கள், பலர் குறைந்தளவிலான உணவை உண்பார்கள். இது அவர்களின் உடல் மற்றும் அமைப்பை பொறுத்து மாறுபடுகிறது. இவையெல்லாம் ஒரு வகை உணவுக் கோளாறைக் குறிக்கிறது. ஒரு நபர் அதிகப்படியான உணவுக்குப் பிறகு நிம்மதியாக உணர்கிறார். ஆனால் அதே நேரத்தில் அதிகமாக சாப்பிடுவது அவமானம் அல்லது கட்டுப்பாட்டை இழப்பது போன்ற உணர்வுகளையும் அந்த நபர் அனுபவிக்கிறார்.

What is Binge Eating Disorder and how to control it

மருத்துவ அறிவியலின் படி, மனதில் மூன்று வகையான உணவுக் கோளாறுகள் உள்ளன. அவை: பிங்கிங் - தேவையானதை விட அதிகமான உணவை உண்ணுதல்; அனோரெக்ஸியா நெர்வோசா - தேவையான அளவை விட குறைவாக சாப்பிடுவது; புலிமியா - சில நேரங்களில் அதிகமாக சாப்பிடுவது, மற்ற நேரங்களில் ஈடுசெய்ய குறைவாக சாப்பிடுவது. இக்கட்டுரையில் பிங் உணவுக் கோளாறு என்றால் என்ன, அதை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிக உணவுக் கோளாறு ஏற்படுவதற்கு என்ன காரணம்?

அதிக உணவுக் கோளாறு ஏற்படுவதற்கு என்ன காரணம்?

இன்றுவரை மருத்துவ அறிவியலால் எதுவும் ஆவணப்படுத்தப்படவில்லை. ஆனால் இது பொதுவாக மரபணுக்கள் காரணமாக நடக்கிறது என்று நம்பப்படுகிறது. டோபமைனுக்கு அதிக உணர்திறன் உள்ளவர்கள், இந்த கோளாறைப் பெற்றிருக்கலாம்.

MOST READ: பாத்ரூமில் நீங்க செய்யும் இந்த விஷயத்தால உங்க உடம்பில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா?

இது எப்படி நிகழ்கிறது?

இது எப்படி நிகழ்கிறது?

மேலும், மூளையின் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றத்தினால் இது நிகழ்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு மக்கள் உணவுக்கான பதிலை அதிகப்படுத்தியுள்ளனர் மற்றும் சுய கட்டுப்பாடு குறைவாக உள்ளனர். மரணம், துஷ்பிரயோகம், பிரித்தல், விபத்து அல்லது கொடுமைப்படுத்துதல் போன்ற உணர்ச்சிகரமான அதிர்ச்சி காரணமாகவும் இது நிகழலாம்.

ஆய்வு கூறுவது

ஆய்வு கூறுவது

ஃபோபியாஸ், மனச்சோர்வு, இருமுனை கோளாறு, பதட்டம் அல்லது பொருள் துஷ்பிரயோகம் போன்ற ஒருவித உளவியல் கோளாறு உள்ளவர்களிடமும் இந்த கோளாறு ஏற்படுகிறது என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

MOST READ: ஆய்வு சொல்லும் அதிர்ச்சி முடிவு... மக்களுக்கு இந்த கிழமையில் தான் அதிகமா மாரடைப்பு ஏற்படுமாம்..!

அதிகப்படியான உணவுக் கோளாறின் அறிகுறிகள்

அதிகப்படியான உணவுக் கோளாறின் அறிகுறிகள்

எந்த கணக்கீடும் இல்லாமல் அதிகமாக சாப்பிடுவது.

ஒரு நாளைக்கு தேவையான கலோரிகளை விட 3-4 மடங்கு அதிகமாக சாப்பிடுவது.

அடிக்கடி சாப்பிடுவது (ஒரு மணி நேரத்திற்கும் குறைவானது)

தீர்வு என்ன?

தீர்வு என்ன?

உங்கள் பசியின் படி உணவை அளவிட முயற்சிக்கவும்.

பிரதான உணவுத்திட்டத்தை ஒருபோதும் சிற்றுண்டி மற்றும் பானங்களுடன் மாற்ற வேண்டாம்.

புரதம் நிறைந்த காலை உணவோடு உங்கள் நாளைத் தொடங்குங்கள்.

தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த சிறிய அளவிலான உணவில் அடிக்கடி ஈடுபடுங்கள்.

உங்கள் அன்றாட வழக்கமான செயல்களுடன் விறுவிறுப்பான நடை, தியானம், ஜாகிங் அல்லது யோகா போன்ற எளிய பயிற்சிகளைச் சேர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What is Binge Eating Disorder and how to control it

Here we are talking about the Avoid this common toilet habit to cut down the risk of infection
Desktop Bottom Promotion