Latest Updates
-
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்!
புதன் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு நிதி இழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கு.. உஷார்..
Mercury Transit In Rohini Nakshatra On 19 May 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இந்த புதன் 21 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி புதனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

அந்த வகையில் தற்போது புதன் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் புதன் மே 19 ஆம் தேதி நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். இந்த நட்சத்திர பெயர்ச்சியின் போது, புதன் ரோகிணி நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். இந்த ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன். இந்த சந்திரனும், புதனும் நட்பு கிரகங்களாவர். இந்த நட்சத்திர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். இப்போது புதன் நட்சத்திர பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
புதன் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்கள் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்கள் அதிகரிக்கும். பேச்சால் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கூட்டு தொழில் செய்பவர்கள் இக்காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகும். முக்கியமாக இக்காலத்தில் எந்த ஒரு ஒப்பந்தங்களிலும் அவசரப்பட்டு கையெழுத்திடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பின்னர் வருத்தப்படக்கூடும்.
தனுசு
புதன் நட்சத்திர பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் போட்டியாளர் உங்கள் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கலாம். உங்களின் திட்டங்களை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும். யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதை தவிர்க்க வேண்டும். நரம்பு அல்லது தோல் சம்பந்தமான பிரச்சனைகளால் சிரமப்பட நேரிடும். மன அழுத்தத்தால் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படக்கூடும்.
கும்பம்
புதன் நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். வீட்டுச் சூழல் மோசமாக இருக்கும். சிறு விஷயங்களுக்கும் அதிகமாக போராட வேண்டியிருக்கும். வீட்டிற்காக நிறைய செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். இதன் விளைவாக பணப் பிரச்சனைகளால் சிரமப்படக்கூடும். தாயாரின் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். அவரது ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், பெரிய சிக்கலில் சிக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



