Latest Updates
-
கண்ணாடி போன்ற பளபளப்பான சருமம் வேணுமா? அப்ப இந்த 5 பழங்களில் ஒன்றை அடிக்கடி சாப்பிடுங்க -
வாஸ்துப்படி, வீட்டில் இந்த 5 பொருட்களை காலியா வெச்சுக்காதீங்க.. இல்ல லட்சுமி தேவியின் கோபத்துக்கு ஆளாவீங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க யாராலும் தடுக்க முடியாதவர்களாம் - இவர்களின் வெற்றி பிறக்கும்போதே உறுதி செய்யப்பட்டது -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. உங்க முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் பழக்கம் எதுன்னு சொல்றோம்.. -
தலையணையில் உள்ள மஞ்சள் நிற கறைகள் மற்றும் துர்நாற்றத்தை நீக்கும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
நடிகை சமந்தாவிற்கு பிடித்த பிஸிபேலேபாத் - எப்படி செய்யணும் தெரியுமா? -
பாம்பு இரத்தத்தை குடிக்கும் பழக்கமுள்ள நாடுகள் - இந்த வினோத பழக்கத்திற்கு பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா? -
இதயத்துக்கு செல்லும் இரத்தக்குழாய்களை சுத்தமா வெச்சுக்கணுமா? அப்ப இந்த பானங்களை குடிங்க போதும்! -
ஹரா பரா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஏன் அனைத்து நாட்டு வீரர்களும் வெள்ளை நிற ஜெர்சியை மட்டும் அணிகிறார்கள் தெரியுமா?
செஃப் தீனாவின் சிக்கன் வறுவல் - வெறும் 4 பொருள் வெச்சே செய்யலாமாம்.. எப்படின்னு பாருங்க..
Chef Deena's Chicken Varuval Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சிக்கன் செய்வீர்களா? அந்த சிக்கனை எப்போதும் ஒரே சுவையில் குழம்பு, வறுவல் என்று தான் செய்து சாப்பிடுவீர்களா? அதுவும் சிக்கனை வறுவல் செய்வதாக இருந்தால், அத்துடன் வெங்காயம், தக்காளி சேர்த்து தான் செய்வீர்களா?

அப்படியானால் அடுத்தமுறை சிக்கனை வாங்கினால் வெங்காயம், தக்காளி எதுவும் சேர்க்காமல், வெறும் 4 பொருட்களைக் கொண்டே அட்டகாசமான சுவையில் செஃப் தீனா ஸ்பெஷல் சிக்கன் வறுவலை செய்து சாப்பிடுங்கள். இந்த சிக்கன் வறுவலை செய்து ரசம் சாதத்துடனோ அல்லது சூடான சாதத்துடனோ சேர்த்து சாப்பிட்டால், சுவை வேற லெவலில் இருக்கும்.
இந்த சிக்கன் வறுவலை எப்படி செய்வதென்று மிகவும் பிரபலமான செஃப் தீனா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உங்களுக்கு இந்த சிக்கன் வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1 கிலோ
* பூண்டு - 100 கிராம் (பொடியாக நறுக்கியது)
* வரமிளகாய் - 20
* கடலை எண்ணெய் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* தேங்காய் பால் - 1 கப்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள பூண்டு பற்களை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து
பொன்னிறமாகும் வரை நன்கு வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்து குளிர
வைக்க வேண்டும்.
* பின்பு மற்றொரு வாணலியில் சிக்கனை கழுவி எடுத்து, அத்துடன் சிறிது
கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, சிக்கன் வேக தேவையான அளவு மட்டும் சிறிது நீரை ஊற்றி,
அடுப்பில் வைத்து, மூடி வைத்து சிக்கனை வேக வைக்க வேண்டும்.
முக்கியமாக அவ்வப்போது மூடியைத் திறந்து கிளறி விட்டு சிக்கனை வேக
வைக்க வேண்டும்.
* மறுபுறம் மிக்சர் ஜாரில் வறுத்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து,
நீர் சேர்க்காமல் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை வெந்து கொண்டிருக்கும் சிக்கனுடன் சேர்த்து நன்கு
கிளறி விட வேண்டும்.
* சிக்கனில் இருந்து பூண்டின் மணம் வரத் தொடங்கும் போது, அதில்
தேங்காய் பால் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி கிளறி, 5 நிமிடம் சிக்கனில்
உள்ள நீர் வற்றும் வரை நன்கு வேக வைத்து இறக்கினால், சுவையான சிக்கன்
வறுவல் தயார்.



Click it and Unblock the Notifications
