Latest Updates
-
1 கப் தயிரும், 10 வர மிளகாயும் இருந்தா இந்த ராஜஸ்தானி பூண்டு சட்னியை செய்யுங்க - சுருக்குனு சூப்பரா இருக்கும் -
மாரடைப்பு வருவதற்கு முன்பே தென்படும் 7 எச்சரிக்கை அறிகுறிகள்! அலட்சியம் வேண்டாம்! எச்சரிக்கும் டாக்டர்! -
இந்தியாவின் 'உருளைக்கிழங்கு தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
நவம்பர் 22-ல் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
இட்லி, தோசைக்கு ஒருடைம் இந்த பருப்பு சட்னி செய்யுங்க.. வழக்கமாக சாப்பிடுறத விட அதிகமா சாப்பிடுவாங்க.. -
நவம்பர் 16, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைச்சதெல்லாம் நடக்கும் அதிர்ஷ்ட நாளாக இருக்குமாம் -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் ஜனவரி மாதம் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
10 வெண்டைக்காயும், 3 தக்காளியும் இருந்தா இப்படி குழம்பு வையுங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
உங்க பிறந்த தேதி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
12 மாநிலங்கள் வழியாக பயணிக்கும் இந்தியாவின் நீண்ட தூரம் செல்லும் ரயில் எது தெரியுமா?
பெங்களூரு ஸ்பெஷல் தண்ணி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
Bangalore Special Neer Chutney Recipe In Tamil: உங்க வீட்டில் இட்லி, தோசைக்கு எப்பவும் சட்னி தான் செய்வீர்களா? அதுவும் அடிக்கடி தேங்காய் சட்னியை செய்வீர்களா? தேங்காய் சட்னி அனைத்துவிதமான உணவுகளுடனும் சேர்த்து சாப்பிடக்கூடிய ஒரு அற்புதமான சட்னி. இந்த சட்னியை ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு விதத்தில் செய்வார்கள். ஆனால் எப்படி செய்தாலும், தேங்காய் சட்னியின் சுவையே தனி தான்.

அதுவும் பெங்களூருவில் செய்யக்கூடிய நீர் சட்னி என்னும் தண்ணி சட்னியை இட்லியுடன் ஊற்றி குலைத்து சாப்பிடும் போது, சுவை அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளோருக்கும் இந்த பெங்களூரு ஸ்பெஷல் தண்ணி சட்னியை செய்து கொடுங்கள். 2 இட்லி சாப்பிடும் உங்கள் பிள்ளைகள் கூட 1 இட்லி எக்ஸ்ட்ரா வாங்கி சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். சொல்லப்போனால் சட்டென்று 5 நிமிடத்தில் செய்துவிடலாம்.
இந்த பெங்களூரு ஸ்பெஷல் தண்ணி சட்னி குறித்து rk_recipes_bowl என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த பெங்களூரு ஸ்பெஷல் தண்ணி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பெங்களூரு ஸ்பெஷல் தண்ணி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை மிளகாய் - 4
* இஞ்சி - 1 சிறிய துண்டு
* பூண்டு - 1 பல்
* வெங்காயம் - 2 துண்டு
* பொட்டுக்கடலை - 1/2 கப்
* தேங்காய் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* புதினா - 6 இலைகள்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் 4 பச்சை மிளகாய், 1 இன்ச் இஞ்சி, 1 பல்
பூண்டு மற்றும் 2 துண்டு வெங்காயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1/2 கப் பொட்டுக்கடலையும், 1/4 கப் துருவிய தேங்காயும்
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை
கொஞ்சமாக சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில்
நீரை ஊற்றி அலசி சட்னியுடன் சேர்க்க வேண்டும்.
* சட்னியானது கெட்டியாக இல்லாமல் நீராக இருக்க வேண்டும். அதற்கேற்ப
நீரை சேர்த்துக் கொள்ளுங்கள்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய்
ஆகியவற்றை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான
பெங்களூரு ஸ்பெஷல் தண்ணி சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
