Latest Updates
-
தேங்காய் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 02 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும்
மிதுனத்தில் 3 கிரகங்களால் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: இந்த 4 ராசிகளின் நிதி நிலை இருமடங்கு அதிகரிக்கப்போகுது.
Trigrahi Yog In Gemini 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் ராசி மாற்றங்கள் மட்டுமின்றி, மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து உருவாக்கும் யோகங்களும் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் தற்போது மிதுன ராசியில் பயணித்து வருகிறார். அதே சமயம் அசுரர்களின் குருவான சுக்கிரனும் இந்த மிதுன ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் மனதின் காரணியாக கருதப்படும் சந்திரனும் இந்த மிதுன ராசியில் நுழைந்துள்ளார். இதனால் மே 18 ஆம் தேதி முதலாக மிதுன ராசியில் மூன்று கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகமானது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும். அதில் சிலருக்கு மிகவும் அதிர்ஷ்டமாக, நிதி மற்றும் தொழிலில் முன்னேற்றத்தைத் தரக்கூடியதாகவும், சிலருக்கு சவால்கள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது மிதுன ராசியில் உருவாகியுள்ள திரிகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டில் குரு-சுக்கிர-சந்திரனின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பல நல்ல செய்திகளைப் பெறக்கூடும். வருமானத்தில் திடீர் உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டில் குரு-சுக்கிர-சந்திரனின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வருமான வழிகள் உருவாகும். பணிபுரிபவர்களின் அலுவலகத்தில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உறவினர்களுடனான உறவு வலுவடையும். அசையா சொத்துக்களால் சந்தோஷமடைவீர்கள்.
கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் குரு-சுக்கிர-சந்திரனின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பல நல்ல செய்திகளைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். அதோடு இக்காலத்தில் எதிர்பாராத பல வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டில் குரு-சுக்கிர-சந்திரனின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. பல நல்ல செய்திகள் தேடி வரும். நிதி நிலைமை வழக்கத்தை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சந்தோஷமும் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications




