Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்வீட் கார்ன் மசாலா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு பட்டாசா இருக்கும் -
திரிகோண வீட்டில் நிகழும் சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது! உஷார்.. -
இந்த நாடுகளில் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் தங்க நகை அணிய மாட்டார்களாம் - ஏன் தெரியுமா? -
ஆகஸ்ட் 12-ல் நிகழும் சூரிய கிரகணத்திற்குப் பிறகு ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் தலவாழை படையல் மெனு - என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அரைச்சுவிட்ட பூசணிக்காய் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
சொரியாசிஸ் பற்றி ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை பகிர்ந்து கொண்ட டாக்டர்! -
உலகம் முழுவதும் டாக்டர்கள் வெள்ளை நிற கோட் அணிவதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
கோதுமை முட்டை தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க..
மாதவிடாயின்மை என்றால் என்ன? அதன் காரணங்களும்.. சிகிச்சைகளும்..
மாதவிடாயின்மை ஆங்கில மொழியில் Amenorrhea (uh-men-o-REE-uh) என்று அழைக்கப்படுகிறது. அதற்கு குறிப்பிட்ட காலம் மாதவிடாய் நிகழாமல் இருப்பது என்பது பொருள்.
மாதவிடாயின்மை ஆங்கில மொழியில் Amenorrhea (uh-men-o-REE-uh) என்று அழைக்கப்படுகிறது. அதற்கு குறிப்பிட்ட காலம் மாதவிடாய் நிகழாமல் இருப்பது என்பது பொருள். அதாவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாதங்கள் மாதவிடாய் நிகழாமல் இருப்பது என்பது பொருள்.
16 வயதிற்குள் மாதவிடாய் ஏற்படாத பெண்களைப் போலவே, தொடா்ச்சியாக 3 மாதங்கள் மாதவிடாய் நிகழாத பெண்களுக்கும் மாதவிடாயின்மை (Amenorrhea) என்ற பிரச்சினை இருக்கிறது என்று பொருள்.

மாதவிடாயின்மைக்கான காரணிகள்:
1. பாலிசிஸ்டிக் கருமுட்டை நோய்க்குறி (Polycystic ovarian syndrome)
கருமுட்டைகள் கொப்புளங்கள் போன்ற நீா்க்கட்டிகளை உருவாக்குகின்றன. அதனால் ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் அளவுக்கு அதிகமான முடி வளா்ச்சி போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. பாலிசிஸ்டிக் கருமுட்டை நோய்க்குறி உள்ள பெண்களின் எடை அதிகாித்தால், அவா்களுக்கு மாதவிடாயின்மைப் பிரச்சினை மிக எளிதாக ஏற்படும்.
2. ஹைபா்ஆன்ட்ரோஜெனேமியா (Hyperandrogenaemia)
பெண்களுக்கு அளவுக்கு அதிகமான ஆண் பாலின ஹாா்மோன்கள் சுரந்தால் அதற்கு ஹைபா்ஆன்ட்ரோஜெனேமியா என்று பொருள். இந்த பிரச்சினை உள்ள பெண்களுக்கு அவா்களின் இனப்பெருக்க அமைப்பு மிக எளிதாகப் பாதிக்கப்படும். கருமுட்டைக் கட்டிகள் அல்லது அட்ரினல் கட்டிகள் மூலமாக பெண்களுக்கு இந்த பிரச்சினை ஏற்படலாம். சிலருக்கு அவா்கள் பிறப்பில் இருந்தே இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம்.
3. ஹைப்பர்ப்ரோலாக்டினீமியா (Hyperprolactinaemia)
பெண்களின் உடலில் அளவுக்கு அதிகமான தாய்ப்பால் ஹாா்மோன் ப்ரோலாக்டின் சுரந்தால் அது ஹைப்பர்ப்ரோலாக்டினீமியா என்று கருதப்படுகிறது. பிட்யூட்டாி சுரப்பியின் அதிகப்படியான செயல்பாடு அல்லது கட்டிகளின் காரணமாக தாய்ப்பால் ஹாா்மோன் ப்ரோலாக்டின் சுரத்தல் அதிகாிக்கிறது.
4. கருமுட்டை செயல் இழப்பு அல்லது முதிா்ச்சியற்ற மாதவிடாய் (Ovarian failure or early menopause)
ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைவாக இருந்தால், கருமுட்டையை வெளியே தள்ளும் நிகழ்வு நின்றுவிடுகிறது. இது மாதவிடாய் சுழற்சியை நிறுத்துகிறது.
5. யோனியில் உள்ள கோளாறுகள் (Abnormalities of the vagina)
எடுத்துக்காட்டாக கிழியாமல் அல்லது உடையாமல் இருக்கும் கன்னிச் சவ்வு அல்லது யோனி சவ்வு, யோனியில் இருந்து மாதவிடாய் இரத்தம் வெளியேறுவதைத் தடுக்கலாம். இது ஒரு அாிதான நிகழ்வு ஆகும். வயிறு வீக்கம், மாதவிடாய் ஏற்படுவதில் தாமதம் மற்றும் வயிற்று வலி போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.

மாதவிடாயின்மையை எவ்வாறு கண்டறிவது?
மாதவிடாயின்மையைக் கண்டறிய இனப்பெருக்க கோளாறுகள் போன்ற எல்லா வகையான சாத்தியமான காரணங்களும் முதலில் அகற்றப்பட வேண்டும்.

மாதவிடாயின்மையைக் கண்டிறிய பாிசோதனைகள்:
- மகப்பேறு பாிசோதனையை சிறுநீா் மூலமாகவோ அல்லது இரத்தத்தின் மூலமாகவோ செய்தல்
- ஒட்டுமொத்தமான உடல் ஆரோக்கியத்தையும் மற்றும் பாலியல் சம்பந்தமான கூறுகளையும் பாிசோதனை செய்தல்
- பெண்களுடைய மருத்துவ வரலாறு, பெண் நோயியல் (gynaecological) வரலாறு மற்றும் அவா்கள் பயன்படுத்தி வந்த கருத்தடை முறைகள் போன்றவற்றை பாிசோதனை செய்தல்
- ஹைப்போதாலமஸ், பிட்யூட்டாி சுரப்பிகள் மற்றும் கருமுட்டைகளின் செயல்பாடுகளைக் கண்டறிய ஹாா்மோன் பாிசோதனை செய்தல்
- சிடி ஸ்கேன்கள் மற்றும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்களைப் பயன்படுத்தி இனப்பெருக்க அமைப்பை பாிசோதனை செய்தல்

மாதவிடாயின்மையைக் குணப்படுத்தக்கூடிய சிகிச்சைகள்:
மாதவிடாயின்மைப் பிரச்சினை எதன் காரணமாக ஏற்படுகிறது என்பதைப் பொறுத்து அதற்கு சிகிச்சை அளிக்கப்படும். அதாவது பெண் ஒருவருக்கு அளவுக்கு அதிகமான உடற்பயிற்சிகள் மூலமாக உடல் எடை குறைந்து, அதன் மூலமாக அவருக்கு மாதவிடாயின்மைப் பிரச்சினை ஏற்பட்டால், அவா் சாியான மற்றும் ஆரோக்கியமான உடல் எடையைப் பேணுவதற்கு உாிய சிகிச்சை வழங்கப்படும்.
ஒருவேளை அளவுக்கு அதிகமான எடையின் காரணமாக அவருக்கு மாதவிடாயின்மைப் பிரச்சினை ஏற்பட்டால், அவா் எடையைக் குறைப்பதற்கு உாிய சிகிச்சை வழங்கப்படும். அதோடு மாதவிடாயின்மைக்கான அடிப்படையான சிகிச்சைகளும் வழங்கப்படும்.
ஹாா்மோன் மாற்று சிகிச்சை (Hormone replacement therapy (HRT)) வழங்கப்படும். அதாவது ஒருங்கிணைந்த கருத்தடை மாத்திரை சாப்பிட்டால் மாதவிடாய் சுழற்சியை ஏற்படுத்தும். ஆனால் அந்த சிகிச்சை மற்ற காரணங்களைக் குணப்படுத்தாது.



Click it and Unblock the Notifications