For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தோள்பட்டை கீல்வாதம் என்றால் என்ன, இதனை நிர்வகிப்பது எப்படி?

கீல்வாதம் என்பது ஒரு நாட்பட்ட மருத்துவ பாதிப்பாகும். இது உடலின் பல்வேறு பகுதிகளில் உள்ள மூட்டுகளை பாதிக்கிறது. கீல்வாதத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றுள் தோள்பட்டை கீல்வாதமும் ஒரு வகைப்படும்.

|

கீல்வாதம் என்பது ஒரு நாட்பட்ட மருத்துவ பாதிப்பாகும். இது உடலின் பல்வேறு பகுதிகளில் உள்ள மூட்டுகளை பாதிக்கிறது. கீல்வாதத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றுள் தோள்பட்டை கீல்வாதமும் ஒரு வகைப்படும்.

What Happens In Shoulder Arthritis And Tips To Manage The Condition

தோள்பட்டையில் உள்ள க்ளெனோஹுமரல் மூட்டுகளில் உள்ள குருத்தெலும்பு சேதமடையும் போது இந்த பாதிப்பு உண்டாகிறது. தோள்பட்டையில் மெதுமெதுவாக உண்டாகும் தேய்மானம், வலி மற்றும் அசௌகரியத்திற்கு வழி வகுக்கிறது.

MOST READ: கொரோனா இந்த வகை இரத்த பிரிவினரின் நுரையீரல், சிறுநீரகங்களை சேதப்படுத்துமாம்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தோள்பட்டை கீல்வாதம் என்றால் என்ன?

தோள்பட்டை கீல்வாதம் என்றால் என்ன?

இயல்பான தேய்மானம் காரணமாக தோள்பட்டையின் குருத்தெலும்பு சேதமடையத் தொடங்குகிறது. ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக ஆழமான அடுக்குகளில் இந்த சேதம் ஏற்படும் போது தோள்பட்டை கீல்வாதம் உண்டாகிறது. இது பெரும்பாலும் க்ளெனோஹுமரல் மூட்டில் நிகழ்கிறது, இரண்டாவது மூட்டு பகுதியான ஏசி மூட்டு அல்லது அக்ரோமியோகிளாவிக்குலர் மூட்டுகளிலும் தோள்பட்டை கீல்வாதம் உருவாகலாம். இது ஏசி தோள்பட்டை கீல்வாதம் என்று அழைக்கப்படுகிறது.

தோள்பட்டை கீல்வாதம் எப்படி ஏற்படுகிறது?

தோள்பட்டை கீல்வாதம் எப்படி ஏற்படுகிறது?

உடலின் ஒவ்வொரு மூட்டிலும் ஒரு குருத்தெலும்பு உள்ளது. இந்த குருத்தெலும்பு மூட்டுகளில் உள்ள மெல்லிய எலும்புகளுக்கு மெத்தையாக செயல்புரிகிறது. குருத்தெலும்பு என்பது 2-3 மிமி அடர்த்தி கொண்டு ஒரு அட்டை போல் காணப்படுகிறது. குருத்தெலும்புக்கு எந்த ஒரு சேதம் ஏற்பட்டாலும் அது மூட்டுகள் மற்றும் எலும்பை பாதிக்கிறது. வழக்கமான தேய்மானம் குருத்தெலும்பில் சேதத்தை உண்டாக்குகிறது.

தோள்பட்டை கீல்வாதத்தின் நிலைகள்:

தோள்பட்டை கீல்வாதத்தின் நிலைகள்:

கீல்வாதம் என்பது திடீரென்று ஏற்படும் ஒரு பாதிப்பில்லை. மெதுவாக வளர்ச்சியுறும் ஒரு பாதிப்பாகும். அதுப்போலவே, தோள்பட்டை கீல்வாதமும் பல்வேறு நிலைகளில் வளர்ச்சியுறுகிறது. அவை,

நிலை 1 - மென்மையாகும் குருத்தெலும்பு

நிலை 2 - குருத்தெலும்பில் விரிசல்

நிலை 3 - சீர்குலையும் குருத்தெலும்பு

நிலை 4 - சேதமடையும் குருத்தெலும்பின் காரணமாக வெளிப்படும் மூட்டு மற்றும் எலும்புகள்

நிலை 5 - எலும்புகள் மற்றும் தோள்பட்டை ஒன்றை ஒன்று உராய்ந்து மேலும் சேதம் ஏற்படுவது

இது ஒரு நீண்ட கால செயல்பாடாகும். இந்த நிலை ஏற்பட சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை ஆகலாம். இதில் சோகமான விஷயம் என்னவென்றால் மக்கள் இதற்கான அறிகுறிகளை கண்டறிய தவறி விடுகின்றனர். கீல்வாதம் கண்டறியப்பட்டவுடன் இயல்பு நிலைக்கு செல்வது என்பது சாத்தியமில்லாத விஷயமாகும். மேலும் கீல்வாதத்தின் அளவு ஒவ்வொரு நபருக்கும் வேறுபடுகிறது. தேய்மானத்தை குறிக்கும் வகையில் குருத்தெலும்பில் அதிகரித்த டென்சன் காரணமாக நீங்கள் மூட்டுகளில் வலியை உணரலாம். அதிக வலி கீல்வாதத்தின் அதிகரித்த அபாயத்தை உணர்த்தும்.

தோள்பட்டை கீல்வாதத்தின் வகைகள்:

தோள்பட்டை கீல்வாதத்தின் வகைகள்:

கீல்வாதத்தின் ஒரு வகையாக தோள்பட்டை கீல்வாதம் இருக்கும் நிலையில் தோள்பட்டை கீல்வாதத்திற்கு சில துணை வகைகள் உள்ளன. இவற்றின் தொடக்கம் மற்றும் காரணம் ஆகியவற்றின் அடிப்படையில் இவை வேறுபடுத்தப்படுகின்றன.

தோள்பட்டையில் உண்டாகும் தோள்பட்டை கீல்வாதம்:

பொதுவாக இந்த பாதிப்பு வயதுடன் தொடர்புடையது. வயதானவர்களுக்கு எலும்புகள் மிகவும் பலவீனமடைந்து மூட்டுகளில் தேய்மானம் ஏற்பட்டிருப்பதால் இந்த நிலை உண்டாகிறது. இது ஒரு வகையில் சீர்குலைவை ஏற்படுத்தும் மூட்டு நோயாகும்.

தோள்பட்டை முடக்குவாதம்:

நோயெதிர்ப்பு செல்கள் ஆரோக்கியமான செல்களை விரோதமாக தவறாகப் புரிந்து கொண்டு தாக்கும் போது முடக்கு வாதம் ஏற்படுகிறது. இது ஒரு ஆட்டோ இம்யூன் கோளாறு, இது தோள்பட்டை மூட்டு புறணியில் சேதத்தை ஏற்படுத்துகிறது.

தோள்பட்டை கீல்வாதத்தை நிர்வகிக்க சில குறிப்புகள்:

தோள்பட்டை கீல்வாதத்தை நிர்வகிக்க சில குறிப்புகள்:

கீல்வாதத்திற்கான சிகிச்சை அளிக்க முடியாத நிலையில், இந்த நிலையை நிர்வகிக்க சில குறிப்புகள் உண்டு.

உடற்பயிற்சி:

தோள்பட்டையை அசைவுடன் வைத்துக் கொள்ள மற்றும் இன்னும் அதிக சேதம் ஏற்படாமல் இருக்க இயக்கம் சார்ந்த பயிற்சிகளை அவ்வப்போது செய்யலாம். நீங்கள் தொடக்க நிலை பாதிப்பில் இருந்தால், தோள்பட்டையில் இருக்கும் இறுக்கம் மற்றும் மூட்டு வலியைத் தடுக்க மற்றும் தோள்பட்டையை இயக்கத்துடன் வைத்துக் கொள்ள சில உடற்பயிற்சிகளை செய்யலாம்.

உடல் சிகிச்சை:

உடல் சிகிச்சை:

தோள்பட்டையின் இயக்கம் தடைபடும் போது, இந்த நிலையைக் கட்டுப்படுத்த சில உடல்சார்ந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் மருத்துவர் மேற்பார்வையில் மட்டுமே இந்த சிகிச்சையை தொடர வேண்டும், இல்லையேல் இந்த நிலை இன்னும் மோசமடையலாம்.

தோள்பட்டைக்கு அழுத்தத்தை உண்டாக்கும் மற்றும் வலியை ஏற்படுத்தும் விஷயங்களை தவிர்ப்பது நல்லது.

ஐஸ் பேக் மற்றும் குளிர் சிகிச்சை பேட் கொண்டு வலியைப் போக்கி இந்த பாதிப்பிற்கு தற்காலிக நிவாரணம் பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Happens In Shoulder Arthritis And Tips To Manage The Condition

What Happens In Shoulder Arthritis And Tips To Manage The Condition. Read on...
Desktop Bottom Promotion