Latest Updates
-
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா
உங்களுக்கு எந்த கலர்-ல சளி வருதுன்னு சொல்லுங்க.. உங்க ஆரோக்கியத்தை பத்தி ஒன்னு சொல்றோம்...
ஒருவருக்கு சளி பிடித்திருக்கும் போது பல நிறங்களில் சளி வெளியேறுவதைக் காணலாம். இப்போது சளியின் நிறம் உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பற்றி என்ன செல்கிறது என்பதைக் காண்போம்.
காலநிலை மாறும் போது சளி பிடிப்பது என்பது சாதாரணமானது. ஒருவருக்கு மூக்கு ஒழுகல் அல்லது இருமல் அல்லது தொண்டை புண் போன்ற பிரச்சனைகள் வருகிறது என்றால் உடலானது ஒரு தொற்று அல்லது நோயை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். அதுவும் ஒருவருக்கு சளி பிடித்திருக்கும் போது வெளியேறும் சளியின் நிறத்தைக் கொண்டு, ஒருவருக்கு எந்த மாதிரியான பிரச்சனை உடலில் உள்ளது என்பதை அறியலாம்.

பலரும் உடலில் சளி இருப்பதை மோசமானதாக நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் உடலில் சளி இருப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இது சுவாசப் பாதை, நுரையீரல் மற்றும் நாசிப் பாதைகளை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் நோயெதிர்ப்பு செல்கள் மற்றும் ஆன்டி-பாடிகளை கொண்டு செல்ல உதவுகிறது. ஒருவருக்கு சளி பிடித்திருக்கும் போது பல நிறங்களில் சளி வெளியேறுவதைக் காணலாம். இப்போது சளியின் நிறம் உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பற்றி என்ன செல்கிறது என்பதைக் காண்போம்.

வெள்ளை நிறம்
வெள்ளை நிறத்தில் சளி வந்தால், அது சாதாரணம் மற்றும் எந்த ஒரு அபாயமும் இல்லை. ஏனெனில் இம்மாதிரியான சளியானது மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் மூக்கடைப்பின் காரணமாக வரும். பொதுவாக நாசிப்பாதையானது வீக்கமடையும் போது, சுவாசப் பாதையில் உள்ள சளி நகர முடியாமல் இறுக்கமடைந்து வெள்ளை நிறத்தில் மாறும். இதனாலேயே வெள்ளை நிற சளி வெளிவருகிறது.

மஞ்சள் அல்லது பச்சை நிற சளி
சளி பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் வந்தால், உடலானது வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றுக்களை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். பொதுவாக இரத்த வெள்ளையணுக்கள் தான் நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடுகிறது. இவை சளியில் இருந்து எடுக்கப்படுவதால், கிருமிகளை எதிர்த்துப் போராடும் போது, அவை மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் மாறுகிறது.

சிவப்பு நிற சளி
ஒருவருக்கு சளி சிவப்பு நிறத்தில் வந்தால், அது உடனே கவனிக்கப்பட வேண்டியதை குறிக்கிறது. ஏனெனில் இம்மாதிரி அடர் சிவப்பு நிறத்தில் வரும் சளி நுரையீரலில் இருந்து வரலாம். மேலும் இது மார்பு தொற்று அல்லது நுரையீல் கட்டியின் அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே உங்களுக்கு இம்மாதிரி சிவப்பு நிறத்தில் சளி வந்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

பிங்க் நிற சளி
பிங்க் நிறத்தில் சளி வந்தால், அது நுரையீரலில் திரவம் தேங்கி இருக்கும் நிலையான நுரையீரல் வீக்கம் இருப்பதைக் குறிக்கலாம். இம்மாதிரியான நுரையீரல் வீக்க பிரச்சனை கொண்டவர்கள் நுரை போன்ற சளியை வெளியிட நேரிடும். மேலும் இப்பிரச்சனை மூச்சுத்திணறல் அல்லது சில இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும்.

கருப்பு நிற சளி
ஒருவருக்கு சளியானது கருப்பு நிறத்தில் வந்தால், அது தூசி அல்லது அழுக்கு நிற காற்றினை சுவாசிப்பதால் வரக்கூடும். இது தவிர புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தாலும், கருப்பு நிற சளியை வெளியிட நேரிடும்.

ப்ரௌன் நிற சளி
யாரெல்லாம் புகைப்பிடிக்கிறார்களோ அவர்களுக்கு ப்ரௌன் நிற சளி வர வாய்ப்புள்ளது. நெருப்பு புகை அல்லது மாசடைந்த காற்றினை சுவாசிப்பதனாலும் ப்ரௌன் நிற சளி வரலாம். மேலும் இது நிமோனியாவின் அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே உங்களுக்கு இந்த மாதிரியான நிறத்தில் சளி வந்தால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications
