Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
குண்டா அசிங்கமா இருக்கோம்-ன்னு ஃபீல் பண்றீங்களா? முதல்ல இத படிங்க...
உடல் எடையைக் குறைக்க ஜூஸ் டயட் மேற்கொள்வது என்பது பொதுவானது. அதிலும் உணவில் சரியான ஜூஸ்களை தேர்ந்தெடுத்து, அவற்றை சரியான நேரத்தில் குடிப்பதால், உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, எடை இழப்பை நீட்டி
உடல் எடையைக் குறைக்க ஜூஸ் டயட் மேற்கொள்வது என்பது பொதுவானது. அதிலும் உணவில் சரியான ஜூஸ்களை தேர்ந்தெடுத்து, அவற்றை சரியான நேரத்தில் குடிப்பதால், உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, எடை இழப்பை நீட்டிக்கவும் உதவும்.
Recommended Video

அதுவும் சரியான வழியில் தயாரிக்கப்படும் ஜூஸ்களால், உடலுக்கு தேவையான நார்ச்சத்துக்கள் கிடைக்கும். இது ஒருவித திருப்தி உணர்வு அளிப்பதை உறுதி செய்வதோடு, உடலுக்கு உடனடி ஆற்றலையும் வழங்குகிறது.

எவ்வளவு ஜூஸ் குடிக்கலாம்?
ஒருவர் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஜூஸ் குடிப்பது நல்லது மற்றும் உணவுக்கு முன் குடிப்பது நல்லது. காலையில் உடலானது இரவு முழுவதும் நடைபெற்ற நச்சுநீக்கும் செயல்முறையில் இருந்து மீண்டு வருகிறது. அப்போது காலை எழுந்ததும் முதல் உணவாக ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது என்று ஊட்டச்சத்து நிபுணர் ஒருவர் கூறுகிறார். மேலும் பல்வேறு பழங்களின் நன்மைகளைப் பெற ஒருவர் ஒரு நாளைக்கு 2-3 முறை வெவ்வேறு பழச்சாறுகளைக் குடிக்க பரிந்துரைக்கிறார்.
மேலும் அந்த நிபுணர், முதலில் 200 மிலி ஜூஸ் உடன் ஆரம்பிக்க வேண்டும். என்று கூறுகிறார். இதனால் தொடக்கத்தில், குடிக்கும் ஜூஸானது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். எப்போது உடலானது இதற்கு பழகுகிறதோ, அப்போது நீங்கள் 250-300 மிலி வரை ஜூஸ் குடிக்கலாம் என்றும் கூறுகிறார்.
மேலும் காலை உணவு மற்றும் மாலை நேர ஸ்நாக்ஸிற்கு மாற்றாக காய்கறி மற்றும் பழச்சாறுகளைக் குடிக்க பரிந்துரைக்கிறார். இது கலோரி உட்கொள்ளலை கிட்டத்தட்ட குறைக்கிறது. எப்படியெனில் இவற்றில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி இருப்பதால் ஜங்க் உணவுகளில் இருந்து விலகி இருக்கச் செய்கிறது. மேலும் ஜூஸ்கள் காரத்தன்மை கொண்டவை. இதனால் இவை உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.

பழங்கள் அல்லது ஜூஸ்கள்?
பழங்களில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை செரிமானத்தை ஊக்குகின்றன. பழங்களை பழச்சாறுகளாக செய்யும் போது, அவற்றில் உள்ள கொழுப்புக்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் புரதங்கள் இழக்கப்படுகிறது மற்றும் இது உடலுக்கு நிலையான ஆற்றலைக் கொடுக்காது. ஆகவே பழச்சாறுகளைக் குடிப்பதை விட பழங்களை அப்படியே சாப்பிடுவது சிறந்த வழி. நார்ச்சத்தானது பெருங்குடல் மற்றும் குடல்களுக்கு ஒரு துடைப்பம் போல செயல்படுகிறது. எனவே பழச்சாறுகளுக்கு பதிலாக பழத்தை சாப்பிடுவதே புத்திசாலித்தனம்.
நார்ச்சத்து இல்லாத ஜூஸ் இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதோடு, குறைந்த காலத்தில் இரத்த சர்க்கரையை உயர்த்துகிறது. இதனால் மனநிலையில் ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது. அதே சமயம் பழங்கள் இரத்த சர்க்கரை அளவை உயர்த்தாது என்றும் ஊட்டச்சத்து நிபுணர் கூறுகிறார்.
அதே சமயம் எடை இழப்பில் சிறந்த முடிவுகளைப் பெற, காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள், புரோட்டீன், நல்ல கொழுப்புக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறி மற்றும் பழங்களை ஒன்றாக சேர்த்து ஜூஸ் தயாரித்துக் குடியுங்கள். கீழே அப்படியான ஒருசில ஜூஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

நெல்லிக்காய் மற்றும் கற்றாழை ஜூஸ்
நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உணவு உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது மற்றும் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. காற்றாழை சருமத்திற்கு நல்லது மற்றும் செரிமானம் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
நெல்லிக்காய் மற்றம் கற்றாழை ஜூஸ் ஒரு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானம் மற்றும் இது ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. சிறப்பான செரிமான செயல்பாட்டிற்கு வழிவகுக்கும்.

கிரான்பெர்ரி ஜூஸ்
கிரான்பெர்ரி ஜூஸில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. இந்த ஜூஸ் நாள்பட்ட நோய்கள், இதய நோய்கள், சர்க்கரை நோய் மற்றும் பக்கவாதம் போன்றவற்றின் அபாயத்தைக் குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. முக்கியமாக இந்த ஜூஸ் பாக்டீரியல் தொற்றுக்கள் பரவுவதைத் தடுக்கிறது. கிரான்பெர்ரி ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது மற்றும் சிறுநீரக பாதை பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் இந்த ஜூஸைக் குடிப்பது நல்லது.

அன்னாசி ஜூஸ்
அன்னாசியில் புரோமிலைன் என்னும் நொதிப் பொருள் அதிகம் உள்ளது மற்றும் இது செரிமானத்திற்கு நல்லது. இவற்றில் வளமான அளவில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி உள்ளது. இந்த பழத்தில் உள்ள புரோமிலைன் உட்காயங்களைக் குறைவ்வதோடு, சுவாச பாதைக்கு மிகவும் நல்லது.

மாதுளை ஜூஸ்
மாதுளையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இது தசைகளுக்கு பாதுகாப்பளிக்கிறது மற்றும் வலிமையை மேம்படுத்துகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்த பழத்தில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது மற்றும் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துகிறது.

கேரட் மற்றும் பீட்ரூட் ஜூஸ்
பெரும்பாலான காய்கறி ஜூஸ்களில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இது மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது. கேரட்டில் பீட்டா கரோட்டீன் அதிகம் உள்ளது. இது கண்களுக்கு மிகவும் நல்லது மற்றும் பீட்ரூட் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்துவதற்கும், இரத்தத்தில் ஆக்ஸிஜனை சுமக்கும் திறனையும் அதிகரிக்கிறது.
இப்போது ஒருசில ஜூஸ்களை செய்முறையுடன் காண்போம்.

அவகேடோ ஸ்மூத்தி
தேவையான பொருட்கள்:
* பசலைக்கீரை - 1/2 பௌல்
* துளசி - 1/4 பௌல்
* அவகேடோ - 1/4
* தேங்காய் பால் - 3 டேபிள் ஸ்பூன்
* 1/4 எலுமிச்சையில் ஊற வைத்த சியா விதைகள் - சிறிது
செய்முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் பிளெண்டரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த பானத்தை காலை அல்லது மாலை அல்லது உடற்பயிற்சிக்கு பின் குடிக்க வேண்டும்.

பீட்ரூட் ஆரஞ்சு ஜூஸ்
தேவையான பொருட்கள்:
* பீட்ரூட் - 1/2 பௌல்
* மஞ்சள் பூசணிக்காய் - 1/2 பௌல்
* ஆரஞ்சு - 1
செய்முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை பிளெண்டரில் போட்டு அரைத்து உடனே குடிக்க வேண்டும்.

மூலிகை ஜூஸ்
தேவையான பொருட்கள்:
* புளிச்சாறு - சிறிது
* புதினா இலைகள் - 1/2 பௌல்
* கொத்தமல்லி இலைகள் - 1 பௌல்
* வெள்ளரிக்காய் - 1
* பச்சை மிளகாய் - 1/4
* கல் உப்பு - சிறிது
* நெல்லிக்காய் - 1
செய்முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் பிளெண்டரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் குடிக்க வேண்டும்.

கேல் ஜூஸ்
தேவையான பொருட்கள்:
* கேல் - 1 பௌல்
* பச்சை ஆப்பிள் - 1
* ஸ்பைரூலினா பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி - சிறிது
செய்முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் பிளெண்டரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

கேரட் ஆப்பிள் ஜூஸ்
தேவையான பொருட்கள்:
* கேரட் - 1
* ஆப்பிள் - 1
* மஞ்சள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
பிளெண்டரில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களைப் போட்டு, சிறிது நீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த ஜூஸை உடற்பயிற்சி செய்யும் முன் குடிக்க வேண்டும். இதனால் உடலுக்கு உடற்பயிற்சி செய்யத் தேவையான ஆற்றல் கிடைக்கும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள ஜூஸ்கள் உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.



Click it and Unblock the Notifications











